- + 20படங்கள்
ஹூண்டாய் inster
change carinster சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் இன்ஸ்டர் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் மிகச்சிறிய EV ஆக உள்ளது. Hyundai Inster மற்றும் Tata Punch EV: விவரங்கள் ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்.
விலை: ஹூண்டாய் இன்ஸ்டர் காரின் விலை ரூ.12 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
அறிமுகம்: இது ஜூன் 2026 -க்குள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்படலாம் என என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீட்டிங் கெபாசிட்டி: இன்ஸ்டர் 4 இருக்கைகள் கொண்ட அமைப்பில் கிடைக்கும்.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: உலகளாவிய சந்தைகளில் ஆல் -எலக்ட்ரிக் இன்ஸ்டர் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்:
-
42 kWh (97 PS/ 147 Nm)
-
49 kWh (115 PS/ 147 Nm).
42 kWh பேட்டரி WLTP-மதிப்பிடப்பட்ட 300 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அதே நேரத்தில் பெரிய 49 kWh பேட்டரி பேக் 355 கி.மீ வரை WLTP கிளைம் செய்யப்பட்டுள்ளன் ரேஞ்சை வழங்குகிறது.
சார்ஜ்: இது 120 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதைப் பயன்படுத்தி இரண்டு பேட்டரி பேக்குகளையும் சுமார் 30 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இரண்டு பேட்டரி பேக்குகளும் 11 kW AC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன. மேலும் அவற்றின் சார்ஜிங் நேரங்கள் பின்வருமாறு:
-
42 kWh: 4 மணி நேரம்
-
49 kWh: 4 மணி 35 நிமிடங்கள்
வசதிகள்: சர்வதேச அளவில், ஹூண்டாய் இன்ஸ்டர் 10.25-இன்ச் டூயல்-ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே). வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்ஸ், ஹீட்டட் டிரைவர் சீட்ஸ் , சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வெஹிகிள் டூ வெஜிகிள் (V2L) சப்போர்ட் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றை உள்ளடக்கிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பையும் இது பெறுகிறது. இருப்பினும் இந்திய-ஸ்பெக் இன்ஸ்டர் ADAS வசதிகளுடன் வராமல் இருக்கலாம்.
போட்டியாளர்கள்: ஹூண்டாய் இன்ஸ்டர் ஆனது டாடா பன்ச் EV -க்கு போட்டியாக இருக்கும், சிட்ரோன் eC3, டாடா டியாகோ EV, மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
ஹூண்டாய் inster விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுinster | Rs.12 லட்சம்* |
ஹூண்டாய் inster road test
ஹூண்டாய் inster படங்கள்
Other ஹூண்டாய் Cars
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது