ஹயுண்டாய் இந்தியா நிறுவனம் 10 வது தேசிய அளவிலான ஆல்வேஸ் அரவ்ன்டு ( எப்போதும் உங்கள் அருகாமையில் ) சேவையை தொடங்கியது.
ஜெய்பூர்: ஹயுண்டாய் இந்தியா நிறுவனம் பத்தாவது தேசிய அளவிலான ஆல்வேஸ் அரவ்ன்டு ( எப்போதும் உங்கள் அருகாமையில்) சேவையை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆல்வேஸ் அரவ்ன்டு காம்பைன் ஆகஸ்ட் 23 2015 ல் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க வாடிக்கையாளர்களுக்கு வசதியான இடங்களில் வாகனங்களுக்கு 18 பாயிண்ட் சோதனைகள் ( செக்கப்) செய்யப்படுகிறது. இந்த கொரியன் கார் தயாரிப்பாளர்கள் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 8,000 இடங்களில் இந்த சேவையை முடித்து விடுவோம் என்று உறுதி கூறி உள்ளனர்.
இந்த சேவையைப் பற்றி மேலும் ஹயுண்டாய் நிறுவனம் பின்வருமாறு கூறியுள்ளது. “ இந்த ஆல்வேஸ் அரவ்ன்டு சேவையின் மூலம் வாகனங்கள் 18 பாய்ன்ட் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இலவச ட்ரை வாஷ், ஆயில் டாப் - அப், மற்றும் கூலண்டுகள் சம்மந்தமான தேவைகள் சரி செய்து தரப்படுகின்றன. ஹயுண்டாய் அணியினர் இந்த சேவை குறித்தும், வாகனத்தின் செயல்பாடு மற்றும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் தரம் முதலியவற்றை வாடிக்கையாளர்களிடம் இருந்து கவனமாக கேட்டறிந்துக் கொள்கிறார்கள். மேலும் இந்த கேம்ப் சம்மந்தமான தகவல்களைப் பெற அருகாமையில் உள்ள டீலர்களை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஹயுண்டாய் இந்தியாவின் மூத்த துணை தலைவர், விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவு, திரு. ராகேஷ் ஸ்ரீவத்சவ் பின்வருமாறு கூறினார். “ இந்த ஆல்வேஸ் அரவ்ன்டு கேம்பைன் எங்கள் நிறுவன தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள திருப்தியை மேலும் அதிகப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். வாடிக்கையாளர்களுடன் என்றும் நீங்கா உறவை ஏற்படுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் உயர் தரமான ஒரு அனுபவத்தை தருவதே எங்கள் லட்சியமாகும். எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் நாங்கள் இத்தகைய சேவைகளை அவ்வப்போது அரங்கேற்றுகிறோம். அற்புதமான வரவேற்பை வாடிக்கையாளர் மத்தியில் இந்த ஆல்வேஸ் அரவ்ன்டு கேம்பைன் பெற்றுள்ளது என்பது மட்டுமல்லாமல் ஹயுண்டாய் வாடிக்கையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக நடந்துக்கொண்டிருக்கும் இந்த சேவை மிகப்பெரிய வெற்றிபெறும்" என்றும் கூறினார்.