• English
  • Login / Register

ஹயுண்டாய் நிறுவனம் க்ரேடா வின் ஏற்றுமதியை தள்ளி வைத்துள்ளது. இந்தியாவில் பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

published on ஆகஸ்ட் 13, 2015 12:48 pm by nabeel for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: க்ரேடா கார்கள் பற்றிய முதல் அறிவிப்பு வந்தது முதலே இந்திய வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த கூடுதல் தேவையை சமாளிக்க முடியாமல் இந்த தென் கொரிய கார் தயாரிப்பாளர்கள் திணறி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய ஒரு மாபெரும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டி தன்னுடைய க்ரேடா கார்களின் வெளிநாட்டு ஏற்றுமதி திட்டத்தை ஹயுண்டாய் நிறுவனம் சில மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. . மேலும் தங்களது உற்பத்தி அட்டவணையை திருத்தி அமைத்து புக்கிங் செய்து விட்டு காத்திருக்க வேண்டிய நேரத்தையும் வெகுவாக குறைக்க திட்டமிட்டுள்ளது.. ஹயுண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை நாற்பது சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் மாதத்திற்கு 5000 கார்கள் என்ற இலக்கை தாண்டி 7000 கார்கள் என்ற இலக்கை அடைய முடிவு செய்துள்ளது. ஒரு கச்சிதமான (காம்பேக்ட்) எஸ்யூவி பிரிவில் மிக அதிகமாக தயாரிக்கப்பட்டு வெளியான வாகனம் என்ற பெருமையை ஹயுண்டாய் க்ரேடா இதன் மூலம் தட்டிச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இன்னும் தெளிவாக க்ரேடா கார்கள் அடைந்துள்ள மாபெரும் செல்வாக்கை பற்றி சொல்ல வேண்டுமானால் , சில இலக்கங்களை கோடிட்டுக்காட்ட வேண்டியது கட்டாயமாகிறது. அறிமுகமான முதல் மாதத்தில் மட்டும் 6,700 க்ரேடா கார்கள் விற்று தீர்ந்துள்ளன. இது ஈகோஸ்போர்ட் மற்றும் டஸ்டர் கார்கள் அறிமுகமான முதல் மாதத்தில் விற்ற எண்ணிக்கையை விட அதிகமானதாகும். இதன் மூலம் க்ரேடா காம்பாக்ட் எஸ்யூவி பிரிவை முழுமையாக கைப்பற்றி விட்டது என்றே நினைக்க தோன்றுகிறது. இது வரையில் சுமார் 11,000 கார்களை உற்பத்தி செய்து அதில் 8,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்து விட்டன என்பதை அறியும் போதே க்ரேடா அடைந்துள்ள வெற்றியை நம்மால் கணிக்க முடிகிறது. காரை புக்கிங் செய்து விட்டு 3-9 மாதங்கள் (தேர்ந்தெடுக்கப்படும் வேரியன்ட் டை பொறுத்து) காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதையும் படியுங்கள்: ஹயுண்டாய் க்ரேடா 10000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

ஹயுண்டாய் நிறுவனம் தனது ஏற்றுமதியை செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் - டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், இந்த முடிவால் முன்பதிவுக்கு பின் காத்திருக்கும் காலம் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை குறையும். முன்னதாக ஹயுண்டாய் நிறுவனம் கிரேடாவை திட்டமிட்டதை விட முன்னதாகவே அறிமுகம் செய்தது என்பது குறிபிடத்தக்கது. ஹயுண்டாய் மோட்டார் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் பிரிவின் துணை தலைவர் திரு, ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா பின்வருமாறு கூறினார்.” நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். உற்பத்தியை வேகப்படுத்தி காத்திருக்கும் நேரத்தை குறைக்க போகிறோம்".

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience