• English
  • Login / Register

விரிவான ஒப்பீடு: திருப்புமுனையாக வரும் ஹுண்டாய் கிரேட்டாவும் மாருதி Sகிரஸ்ஸும்

published on ஜூலை 29, 2015 01:34 pm by raunak for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

  • 13 Views
  • 9 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவின் இருபெரும் கார் தயாரிப்பாளர்களான, வாகன சந்தையின் ஏகபோக உரிமையைக் கொண்டாடும் மாருதி நிறுவனமும், ஹுண்டாய் நிறுவனமும், இப்போது கச்சிதமான க்ராஸ் ஓவர் வகை கார் தயாரிப்புகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். மிகச்சிறந்த கார் தயாரிப்பாளர்களான இந்த இரண்டு  நிறுவனங்களும் பலவிதமான தரமான கார்களை முன்பே தயாரித்திருந்தாலும், தற்பொது நடந்து கொண்டிருக்கும் இந்த போட்டியில் அவர்கள் இருவரும் எப்படி முட்டி மோதிக் கொள்கின்றனர் என்று பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர், மிகவும் எதிர்பார்த்த ஹுண்டாய்யின் கிரேட்டா க்ராஸ் ஓவர் ஜூலை 21 அன்று வெளியிடப்பட்டது. இப்போது ட்விட்டரில் ‘தி பெர்பெக்ட் SUV’ என்ற ஹாஷ் டாக்கில் இந்த கொரியன் SUV பிரபலமாகி, சந்தைக்கு வரும் முன்னரே, 15,000க்கும் மேற்பட்ட அலுவல் முறைசாரா (அன்அஃப்பிஷியல்) முன்பதிவு நடந்ததாக ஹுண்டாய் கார் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். புதுப்பிக்கப்பட்ட (அப்டேடெட்) தகவல்களையும், அதன் விலைப் பட்டியலையும் ஹுண்டாய் கிரேட்டாவின் அறிமுகச் செய்தியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.  

கச்சிதமான க்ராஸ் ஓவர் கார்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பல்கிப் பெருகிக் கொண்டே வருகிறது. ஒட்டுமொத்த உலக வாகன சந்தையின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது உலகம் முழுவதும் இத்தகைய கார் வகைகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கச்சிதமான 5 இருக்கை வாகனங்களின் புகழ் “வாட்ஸ் ஆப்”பைப் போலவே குறுகிய காலத்தில் அதிகரித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில், மக்கள் திடீரென்று பழைய முறை SMS-ஐ விட்டுவிட்டு தற்போது வாட்ஸ் ஆப்பையே தகவல் பரிமாற்றத்திற்கும், குறுஞ்செய்தி அனுப்பவும் முழுவதுமாகப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய திடீர் மாற்றமும், திடீர் பிரபலமும் நிரந்தரமல்ல. ஆச்சர்யப்படும் விதமாக, டொமினோவின் சீஸ் பர்ஸ்ட்  பீட்ஸாவில் சீஸ் குறைந்து போனது போல ஒரு நாள் இந்தக் கார் பிரிவை விட்டு மக்கள் வேறு பிரிவிற்கு தங்கள் மனதை மாற்றுவதற்கு மிகுந்த நேரம் ஆகாது.

எதுவாக இருந்தாலும், தற்போதைய நிலவரத்தின்படி ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸ்ஸான் டெர்ரானோ ஆகிய கார்கள் சந்தையில் கச்சிதமான SUV பிரிவில் கடும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில், மாருதி சுசூக்கி மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா, ஆகிய இரண்டு பெரும் முதலைகளும், எப்படி தங்களது வாகனங்களை சந்தைப்படுத்துவார்கள் என்பதும், தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கவும் எப்படித் தயாராக உள்ளார்கள் என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த க்ராஸ் ஓவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், கட்டாயமாக ஏதாவது ஒன்று மற்றதை விட சிறந்ததாக இருக்கும். இந்த பிரிவில் உள்ள அனைத்து வகைக் கார்களையும் முழுமையாக ஒப்பிடும் முன்னர், வாகன உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இரு கார்களைப் பற்றி பார்ப்போம்.

சிறப்பு அம்சங்களின் ஒப்பீடு 

5 தனிப்பட்ட விற்பனை செயல்திறங்கள்:– ஹுண்டாய்யின் கிரேட்டா மாருதி Sக்ராஸ்

அனைத்து வசதிகளை பற்றிப் பேசினாலும், ஆராய்ந்தாலும், காரின் விலையே வாங்குவதை முடிவு செய்யும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. எனினும், ஹுண்டாய்யின் விலையும், மாருதியின் விலையும் கிட்டதட்ட ஒன்றை ஒன்று அனுசரித்தே இருக்கின்றன. மேலும், இந்த இரு நிறுவனங்களும் ஒரு புதிய பிரிவில் நுழையும் போது, நிச்சயமாக போட்டி என்பது பெரிய புரட்சியையே உண்டு பண்ணும் என்று வாகன சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience