ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்காஸர் அட்வென்ச்சர் எடிஷன் கார்களின் முதல் டீசர் வெளியானது
published on ஆகஸ்ட் 07, 2023 02:04 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் கிரெட்டா-அல்கஸார் ஆகிய கார்கள் பிளாக் ரூஃப் உடன் ஹூண்டாய் எக்ஸ்டரின் புதிய ரேஞ்சர் காக்கி வண்ண ஆப்ஷனை பெறும் என்பதை டீசர் படங்கள் மற்றும் வீடியோ மூலமாக தெரிய வருகிறது.
-
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்ச்சர் எடிஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
இது கிரெட்டாவின் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன், ஆனால் அல்காஸருக்கு முதல் பதிப்பு ஆகும்.
-
வெளிப்பக்க மாற்றங்களில் பிளாக் எலமென்ட்கள் மற்றும் "அட்வென்ச்சர் எடிஷன்" பேட்ஜ்கள் அடங்கும்.
-
10.25-இன்ச் தொடுதிரை, பனோரமிக் சன்ரூஃப், அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை பொதுவான அம்சங்களாகும்.
-
மெக்கானிக்கலாக பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை; இரண்டுமே தற்போது பெட்ரோல், டர்போ-பெட்ரோல் (அல்காஸர் மட்டும்) மற்றும் டீசல் இன்ஜின்களைப் பெறுகின்றன.
-
இரண்டு எஸ்யூவி வேரியன்ட்களின் விலைகள் ரூ. 10.87 லட்சம் முதல் ரூ. 21.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் நமது நாட்டில் "ஹூண்டாய் கிரெட்டா அட்வென்ச்சர்" மற்றும் "ஹூண்டாய் அல்கஸார் அட்வென்ச்சர்" என்ற பெயர்களை வர்த்தக முத்திரையாக மாற்றியது. கார் தயாரிப்பாளர் முதல் முறையாக இரண்டு எஸ்யூவிகளின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டுள்ளதால் இப்போது அவற்றின் அறிமுகத்திற்கு அருகில் இருக்கிறோம். கிரெட்டா காருக்கான இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் இதுவாக இருந்தாலும், அல்கசாருக்கு இதுபோன்ற அப்டேட் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
டீசரில் வெளியான தகவல்கள்
டீசர் படங்கள் மற்றும் வீடியோவில் இரண்டு எஸ்யூவிகளும் ஹூண்டாய் எக்ஸ்டரின் சிறப்பம்சமான "ரேஞ்சர் காக்கி" வண்ண விருப்பத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன, இது பிளாக் ரூஃபை கொண்டுள்ளது. ஹூண்டாய் எஸ்யூவி டுயோவின் அனைத்து குரோம் எலமென்ட்களையும் நீக்கிவிட்டு, வெளிப்புறத்தில் சில "அட்வென்ச்சர் எடிஷன்' பேட்ஜ்களை வைத்துள்ளது.
கேபின் மற்றும் உபகரணங்களின் விவரங்கள்
View this post on Instagram
டீசர்கள் கிரெட்டா மற்றும் அல்கசாரின் ஸ்பெஷல் எடிஷன்களின் கேபின்களைக் காட்டவில்லை என்றாலும், கார் தயாரிப்பாளர் எக்ஸ்டர் போன்ற சில கிரீன் ஆக்சன்டுகளுடன் முழுமையான பிளாக் உட்புற தீம் உடன் அதனை வழங்கக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அம்சங்களை பொறுத்தவரை, இரண்டு எஸ்யூவிகளிலும் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வென்டிலேட்டட் முன்புற சீட்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பொதுவான அம்சங்கள் உள்ளன. மேலும் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX குழந்தை இருக்கைகள் ஆகியவை பாதுகாப்பு அம்சங்களில் அடங்கும்.
மேலும் படிக்கவும்: 2023 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்10 கார் பிராண்டுகள் இவை
பவர்டிரெயின்களுக்கு ஏதேனும் புதுப்பிப்புகள் உள்ளதா?
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா-அல்கஸார் ஜோடியின் தற்போதைய பவர்டிரெயின் அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. கிரெட்டா காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (6 ஸ்பீடு MT மற்றும் CVT) மற்றும் டீசல் இன்ஜின் (6 ஸ்பீடு MT மற்றும் AT) உள்ளன. மறுபுறத்தில் 3 வரிசை ஹூண்டாய் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (6 ஸ்பீடு MTமற்றும் 7 ஸ்பீடு DCT) மற்றும் கிரெட்டாவின் அதே டீசல் யூனிட் உள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை
அந்தந்த ஸ்பெஷல் எடிஷன்கள் அந்தந்த பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களை விட சற்று கூடுதல் விலையை கொண்டிருக்கலாம். இப்போதைக்கு, காம்பாக்ட் எஸ்யூவி -யின் விலை ரூ.10.87 லட்சத்தில் இருந்து ரூ.19.20 லட்சமாக உள்ளது, அதேசமயம் 3-வரிசை எஸ்யூவி ரூ.16.77 லட்சம் முதல் ரூ.21.13 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது.
கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷனின் நேரடி போட்டியாளர்கள் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் மேட் பதிப்புகளாக இருக்கும், அதே நேரத்தில் அல்காஸரின் ஸ்பெஷல் எடிஷன் டாடா சஃபாரியின் ரெட் டார்க் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful