சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹூண்டாய் க்ரெட்டா 2020 அறிமுகம் செய்யப்பட்டது; க்யா செல்டோஸின் விலை இன்னும் குறைவானது

published on மார்ச் 18, 2020 12:59 pm by dhruv for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

க்ரெட்டாவின் அற்புதமான காரணியான இதில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரையை வழங்குகிறது - இதேபோன்ற அளவிலான போட்டிக் கார்களில் இந்த அம்சம் கிடையாது

  • 2020 க்ரெட்டாவில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இயந்திரத்துடன் கிடைக்கிறது.

  • அனைத்து 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களையும் கைமுறை அல்லது தானியங்கி முறையிலான செலுத்துதல்களைக் கொண்டுள்ளது.

  • 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் 7 வேக டிசிடி உடன் மட்டுமே கிடைக்கிறது.

  • வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, அரை டிஜிட்டல் கருவித் தொகுப்பு, காற்று சுத்திகரிப்பி, மின்-முறையிலான தடைக்கருவி அமைப்பு போன்ற சிறந்த சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

  • பாதுகாப்பு அம்சங்களில் 6 காற்றுப்பைகள், இழுவைக் கட்டுப்பாடு, குழந்தை இருக்கைகளுக்கான நிலைத் தாங்கி மற்றும் சுழலக்கூடிய கேமரா ஆகியவை அடங்கும்.

  • கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், கேப்டூர், நிஸான் கிக்ஸ் மற்றும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் போன்ற கார்களுடன் போட்டியைத் தொடரும்.

2020 க்ரெட்டா முதன்முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது, ஒரு மாதத்திற்குப் பிறகு, ஹூண்டாய் அதை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் முன்பே காம்பாக்ட் எஸ்யூவிக்கு 14,000 முன்பதிவுகளைப் பெற்றிருந்தது. இதன் அடிப்படை மாதிரியின் விலை ரூபாய் 9.99 லட்சம், அதேசமயம் நீங்கள் உயர்-சிறப்பம்சம் பொருந்திய மாதிரிக்கு ரூபாய் 17.20 லட்சம் கொடுக்கவேண்டியிருக்கும். இரண்டு விலைகளும் எக்ஸ்ஷோரூம் இந்தியா. மறுபுறம், க்யா செல்டோஸின் ஆரம்ப நிலை வகையின் விலை ரூபாய் 9.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும். கீழே கொடுக்கப்பட்டுலவற்றில் க்ரெட்டாவின் அனைத்து வகைகளின் விலைகளையும் நீங்கள் பார்க்கலாம்.

1.5-லிட்டர் பெட்ரோல் எம்‌பி‌ஐi

1.5-லிட்டர் டீசல் சி‌ஆர்‌டிஐ

1.4-லிட்டர் பெட்ரோல் டர்போ ஜி‌டிஐ

எம்‌டி

ஐ‌வி‌டி

எம்‌டி

ஏ‌டி

டி‌சி‌டி

என்‌ஏ

ரூபாய் 9.99 லட்சம்

என்‌ஏ

என்‌ஏ

இ‌எக்ஸ்

ரூபாய் 9.99 லட்சம்

என்‌ஏ

ரூபாய் 11.49 லட்சம்

என்‌ஏ

என்‌ஏ

எஸ்

ரூபாய் 11.72 லட்சம்

என்‌ஏ

ரூபாய் 12.77 லட்சம்

என்‌ஏ

என்‌ஏ

எஸ்‌எக்ஸ்

ரூபாய் 13.46 லட்சம்

ரூபாய் 14.94 லட்சம்

ரூபாய் 14.51 லட்சம்

ரூபாய் 15.99 லட்சம்

ரூபாய் 16.16 லட்சம்

எஸ்‌எக்ஸ்(ஓ)

என்‌ஏ

ரூபாய் 16.15 லட்சம்

ரூபாய் 15.79 லட்சம்

ரூபாய் 17.20 லட்சம்

ரூபாய் 17.20 லட்சம்

அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் இந்தியா.

2020 கிரெட்டாவுடன் வழங்கப்படும் இயந்திரங்கள் செல்டோஸில் உள்ளது போலவே இருக்கும். 1.5 லிட்டர் உள் எரிப்பு பெட்ரோல் இயந்திரம் 115 பிஎஸ் மற்றும் 144 என்எம் முறுக்கு திறனை உருவாக்குகிறது. இது 6-வேகக் கைமுறை செலுத்துதல் அல்லது சிவிடியைக் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இயந்திரம் 115பிஎஸ் உருவாக்குகிறது, ஆனால் முறுக்குதிறன் 250 என்எம் என்ற அளவில் உள்ளது. பெட்ரோல் இயந்திரம் போலவே, இது 6-வேகக் கைமுறையை கொண்டுள்ளது. இங்கே தானியங்கி விருப்பம் 6-வேக முறுக்குதிறன் மாற்றியுடன் உள்ளது. கடைசியாக, 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் 140 பிஎஸ் மற்றும் 242 என்எம் முறுக்கு திறனை உருவாக்குகிறது. ஹூண்டாய் இதை 7-வேக இரண்டு உரசிணைப்பி செலுத்துதல்களை மட்டும் (டிசிடி) வழங்குகிறது, இது செல்டோஸைப் போலல்லாமல், கையேடு பரிமாற்றத்துடன் வழங்கப்படுகிறது. தானியங்கி முறையிலான வகைகளுடன் மட்டுமே இருந்தாலும், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) இல் வாகனத்தை ஓட்டக்கூடிய முறைகள் மற்றும் இழுவை கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன.

முன்பக்க வடிவமைப்பில், புதிய 2020 க்ரெட்டா முன்பு இருக்கக் கூடிய மாதிரியைப் போல இருக்காது. உதாரணமாக, இது நவீன முறையிலான எல்இடி கூறுகளை முன்பக்கத்தில் பெறுகிறது. சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது ஹூண்டாயின் தயாரிப்பு வரிசையில் வென்யூவிற்கு மிக அருகில் உள்ளது. உட்புற அமைப்பு கருப்பு நிறத்திலும், கிரீம் நிறத்திலும் வண்ணப் பூச்சு உள்ளது. நீங்கள் அதிக வேகமாகச் செல்லக்கூடிய டிசிடி விருப்பத்தைத் தேர்வுசெய்தால், அனைத்து இடங்களிலும் மாறுபட்ட ஆரஞ்சு கூறுகளைக் கொண்ட அனைத்து கருப்பு வண்ண உட்புற அமைவைப் பெறுவீர்கள்.

எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி டிஆர்எல், எல்இடி உட்பொதிக்கப்பட்ட விளக்குகள் மற்றும் எல்இடி பின்புற விளக்குகள் கொண்ட க்ரெட்டாவின் உயர்-சிறப்பம்சம் பொருந்திய வகையில் ஹூண்டாய் சேர்த்துள்ளது. க்ரெட்டாவின் விலை குறைவான வகைகளில் கூட இரு-செயல்பாட்டு ஆலசன் படவீழ்த்தி முகப்புவிளக்குகளுடன் வழங்கப்படுகின்றன. உட்புற அமைவிற்குள் 10.25 அங்குல தொடுதிரை உள்ளது, இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பை வழங்குகிறது. இது வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, மின் முறையிலான தடைக்கருவி அமைப்பு, குளிரூட்டப்பட்ட முன் இருக்கைகள், தானியங்கி முறை வகைகளுக்கான திசைத்திருப்பி மற்றும் 8-விதமாகச் சரிசெய்யக்கூடிய ஆற்றல் மிக்க ஓட்டுனர் இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூண்டாய் உயர்-சிறப்பம்சம் பொருந்திய எஸ்எக்ஸ் (ஓ) வகையில் 17 அங்குல டயமண்ட்-கட் உலோக சக்கரங்களை வழங்குகிறது.

2020 க்ரெட்டா இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தையும் பெறுகிறது. ப்ளூ லிங்க் அமைப்பு உரிமையாளர்கள் தங்கள் காரைக் கண்காணிக்கவும், புவி-ஃபென்சிங் அமைக்கவும், தொலைதூர இயக்கி மூலம் இயந்திரத்தை இயக்கவும் அனுமதிக்கிறது. உயர்-சிறப்பம்சம் பொருந்திய எஸ்எக்ஸ் (ஓ) இல் இருந்தாலும், இந்த சிறப்பம்சம் கைமுறை வகையிலும் கூட உள்ளது. க்ரெட்டாவில் உள்ள ஒரு சிறப்பம்சமான மின் முறையிலான தடைகருவி அமைப்பு, கைமுறை வகையில் தொலைதூர இயக்கி மூலம் இயந்திர தொடக்கத்திற்குத் தேவைப்படுகிறது.

ஹூண்டாய் புதிய 2020 க்ரெட்டாவுக்கு பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் ஒரு சிறப்பான அறிமுகத்தை வழங்கியுள்ளது. உயர்-சிறப்பம்சம் பொருந்திய வகையில் ஆறு காற்றுப்பைகளைப் பெறுகிறது, இருப்பினும் மற்ற அனைத்து வகைகளிலும் இரண்டு மட்டுமே இருக்கும். வழக்கமான ஏபிஎஸ் உடனான ஈபிடி மற்றும் பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய உணர்விகளை கொண்டுள்ளது, அவை அனைத்து வகைகளிலும் நிலையானவை ஆகும். மின் முறையிலான நிலைத்தன்மை கட்டுப்பாடு (இஎஸ்சி), வாகன நிலைத்தன்மை மேலாண்மை கட்டுப்பாடு (விஎஸ்எம்) மற்றும் மலை ஏற உதவும் கட்டுப்பாடு (எச்ஏசி) போன்ற பிற செயலில் உள்ள பாதுகாப்பு சிறப்பம்சங்கள் எஸ்எக்ஸ் மற்றும் டாப்-ஆஃப்-லைன் எஸ்.எக்ஸ் (ஓ) வகைகளில் மட்டுமே வருகின்றன. குழந்தை இருக்கைகளுக்கான நிலைத்தாங்கி மற்றும் பின்புற சக்கரங்களுக்கான டிஸ்க் தடைக்கருவி இந்த இரண்டு வகைகளிலும் மட்டுமே உள்ளன, பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய கேமரா எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) வகைகளில் மட்டுமே வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு ஒரு மாறுபட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது, அதே சமயத்தில் வாடிக்கையாளர் 3 ஆண்டுகள் / வரம்பில்லா கிலோமீட்டர்கள், 4 ஆண்டுகள் / 60,000 கிமீ அல்லது 5 ஆண்டுகள் / 50,000 கிமீ தொகுப்புகள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். க்யா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ரெனால்ட் கேப்டூர், நிஸான் கிக்ஸ் மற்றும் மாருதி எஸ்-கிராஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக 2020 க்ரெட்டா இருக்கும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா டீசல்

d
வெளியிட்டவர்

dhruv

  • 45 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

கம்மெண்ட்டை இட
2 கருத்துகள்
V
vinod kumar
Mar 16, 2020, 7:42:33 PM

Very good creta latest model

b
bhura patel
Mar 16, 2020, 5:39:25 PM

Good lastesst modal

explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

ஹூண்டாய் கிரெட்டா

Rs.11 - 20.15 லட்சம்* get சாலை விலை
டீசல்21.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை