Hyundai Alcazar Facelift மற்றும் Tata Safari: விவரங்கள் ஒப்பீடு
2024 அல்கஸார் மற்றும் சஃபாரி இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வசதிகளை கொண்டுள்ளன. இந்த இரண்டில் எதை வாங்குவது சிறந்தது? இங்கே பார்க்கலாம்.
சமீபத்தில் ஹூண்டாய் அல்கஸார் காருக்கு ஒரு மிட்லைஃப் அப்டேட் கிடைத்தது. இதன் காரணமாக காருக்கு ஒரு புதிய வடிவமைப்பு மட்டுமல்ல, பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது டாடா சஃபாரி காருக்கு நேரடி போட்டியாக உள்ளது. கிட்டத்தட்ட இது சமமாக வசதிகளைக் கொண்ட எஸ்யூவி ஆகும். இருப்பினும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது. பேப்பரில் உள்ள விவரங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் 2024 அல்கஸார் சஃபாரியுடன் எவ்வாறு போட்டியிடுகிறது என்பது இங்கே.
அளவுகள்
மாடல் |
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் |
டாடா சஃபாரி |
வித்தியாசம் |
நீளம் |
4560 மி.மீ |
4668 மி.மீ |
(-108 மி.மீ) |
அகலம் |
1800 மி.மீ |
1922 மி.மீ (ORVM -கள் இல்லாமல்) |
(-122 மி.மீ) |
உயரம் |
1710 மி.மீ (ரூஃப் ரெயில்ங்களுடன்) |
1795 மி.மீ |
(-85 மி.மீ) |
வீல்பேஸ் |
2760 மி.மீ |
2741 மி.மீ |
+ 19 மி.மீ |
-
கிட்டத்தட்ட எல்லா அளவீடுகளிலும் அதாவது நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹூண்டாய் அல்காஸரை விட டாடா சஃபாரி பெரியது.
-
ஆச்சர்யம் என்னவென்றால் அல்கஸார் நீளம் குறைவாக இருந்தாலும் சஃபாரியை விட 19 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
விவரங்கள் |
ஹூண்டாய் அல்கஸார் |
டாடா சஃபாரி |
|
இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
160 PS |
116 பி.எஸ் |
170 PS |
டார்க் |
253 Nm |
250 Nm |
350 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT** |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT** |
*DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
**AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
-
டீசல் மட்டுமே வழங்கும் சஃபாரியை போலல்லாமல் 2024 ஹூண்டாய் அல்கஸார் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களின் ஆப்ஷன்களுடன் வருகிறது. சஃபாரி ஆனது 2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.
-
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன்கள் இரண்டிலும் சஃபாரி சற்றே அதிக பவரை கொண்டுள்ளது. டீசலில் சஃபாரி 54 PS அதிக சக்தி வாய்ந்தது மற்றும் அல்காஸரை விட 100 Nm அதிக டார்க்கை கொடுக்கிறது.
-
அல்கஸார் டீசல் மற்றும் சஃபாரி இரண்டையும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AT உடன் வாங்கலாம்.
-
இருப்பினும் அல்கஸார் பெட்ரோல் ஆப்ஷனலான 7-ஸ்பீடு DCT வசதியுடன் வருகிறது.
மேலும் பார்க்க: 2024 ஹூண்டாய் அல்கஸார் டீசல் மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
வசதிகள்
வசதிகள் |
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் |
டாடா சஃபாரி |
வெளிப்புறம் |
|
|
இன்ட்டீரியர் |
|
|
கம்ஃபோர்ட் வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
-
ஹூண்டாய் மற்றும் டாடா எஸ்யூவி -கள் இரண்டும் பல வசதிகளுடன் வந்தாலும், அதன் பிரீமியம் வெளிப்புறம் மற்றும் சில கூடுதல் வசதிகள் காரணமாக சஃபாரி சற்று முன்னிலையில் உள்ளது. அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மேல் கனெக்டட் LED DRL -கள் மற்றும் LED டெயில் லைட்ஸ் மற்றும் பெரிய 19-இன்ச் அலாய் வீல்களுக்கான வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களை சஃபாரி கொண்டுள்ளது .
-
சஃபாரி ஜெஸ்டர் கன்ட்ரோல்டன் பவர்டு டெயில்கேட் உள்ளது. இது அல்காஸருடன் கிடைக்காது.
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் பெரிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீனை சஃபாரி வழங்குகிறது. மறுபுறம் அல்கஸார் ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீனை வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் கொண்டுள்ளது.
-
இருப்பினும் இரண்டு எஸ்யூவி -களும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பின்புற ஜன்னல் சன்ஷேடுகள் போன்ற வசதிகளுடன் வருகிறது
-
அல்கஸார் கூடுதலாக முன் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜரையும், இரண்டாவது வரிசையில் உள்ளிழுக்கக்கூடிய கப் ஹோல்டர்களுடன் கூடிய டிரே டேபிளையும் கொண்டுள்ளது.
-
இரண்டு எஸ்யூவி -களிலும் பயணிகளின் பாதுகாப்பு 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), 360 டிகிரி கேமரா, கண்மூடித்தனமான பார்வை டிடெக்ஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் லெவ;ல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது.
-
சஃபாரியின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் கூடுதல் முழங்கால் ஏர்பேக்குடன் வருகிறது. மொத்த ஏர்பேக்குகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.
விலை
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் |
டாடா சஃபாரி |
ரூ.14.99 லட்சம் முதல் ரூ.21.25 லட்சம் (அறிமுகம்) |
ரூ.16.19 லட்சம் முதல் ரூ.27.34 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை ஆகும்
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் டாடா சஃபாரியின் டாப்-ஸ்பெக் ரூ. 6 லட்சத்திற்கு மேல் குறைவாக உள்ளது.
தீர்ப்பு
2024 ஹூண்டாய் அல்கஸார் ஒரு கிரெட்டா அடிப்படையிலான 3-வரிசை எஸ்யூவி ஆகும். இது ஒரு விரிவான வசதிகளுடன் வருகிறது. மற்றும் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டின் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இந்த விலை நிர்ணயத்துடன், டாடா சஃபாரியை அல்கஸார் டாப்-ஸ்பெக் வேரியன்ட் சுமார் ரூ.6 லட்சம் வரை குறைவாக உள்ளது. டாடா எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது அல்கஸார் மிகவும் வசதியான பின் சீட் அனுபவத்தை கொடுக்கிறது. இதில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ட்ரே டேபிள்கள் மற்றும் உள்ளிழுக்கும் கப் ஹோல்டர்கள் உள்ளன.
மறுபுறம் டாடா சஃபாரி விலை அதிகம். ஆனால் 2024 அல்கஸார் காரை விட பல கூடுதல் வசதிகளை வழங்குகிறது. இதில் ஜெஸ்டர் கன்ட்ரோல்டன் பவர்டு டெயில்கேட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவுக்கான -க்கான வயர்லெஸ் கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்யும் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டாடா எஸ்யூவியில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்றாலும். அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜினுடன் வருகிறது. கூடுதலாக சஃபாரி நல்ல சவாரி தரத்தை வழங்குகிறது. கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது கேபின் மூவ்மென்ட்டை குறைக்கிறது.
எனவே, நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், ஏன்? கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அல்கஸார் ஆன்ரோடு விலை
shreyash
- 28 பார்வைகள்