சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

Hyundai Alcazar ஃபேஸ்லிப்ட்: வேரியன்ட் வாரியான பவர்டிரெயின் விவரங்கள்

published on ஆகஸ்ட் 23, 2024 08:03 pm by samarth for ஹூண்டாய் அழகேசர்

ஹூண்டாய் அல்கஸார் 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் லேஅவுட்களில் கிடைக்கும். அதேசமயம் ஹையர் டிரிம்கள் 6-சீட்டர் அமைப்பில் மட்டுமே கிடைக்கின்றன.

  • ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் அல்கஸார் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  • புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -க்கான முன்பதிவு ரூ.25,000 -க்கு திறக்கப்பட்டுள்ளது.

  • இது நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கும்: எக்ஸிகியூட்டிவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர்.

  • இது பழைய காரில் இருந்த அதே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வரும்.

  • லோவர்-ஸ்பெக் எக்ஸிகியூட்டிவ் மற்றும் பிரெஸ்டீஜ் வேரியன்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் மட்டுமே 7-சீட்டர் அமைப்பு கிடைக்கும்.

  • மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுக்கான ஆப்ஷன்களுடன் ஹையர்-ஸ்பெக் பிளாட்டினம் வேரியன்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டையும் பெறும்.

  • டாப்-ஸ்பெக் சிக்னேச்சர் வேரியன்ட்ட் பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.

  • புதிய அல்காஸரின் விலை -யானது ரூ.17 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும் ஹூண்டாய் ஏற்கனவே காருக்கான முன்பதிவுகளை ரூ.25,000 -க்கு ஆன்லைன் மற்றும் அதன் டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளது. ஹூண்டாய் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்காஸருக்கு கிடைக்கக்கூடிய வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை இந்த கட்டுரையில் நாங்கள் விளக்கியுள்ளோம். ஆனால் முதலில் எஸ்யூவி உடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பார்ப்போம்.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் பழைய மாடலின் அதே இன்ஜின் உடன் வழங்கப்படும். அதன் விவரங்கள் கீழே உள்ளன:

விவரங்கள்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

160 PS

116 PS

டார்க்

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன்

நீங்கள் எஸ்யூவி -யை வாங்க திட்டமிட்டிருந்தால் ஒவ்வொரு வேரியன்ட்டிற்கும் வெவ்வேறு பவர்டிரெய்ன் மற்றும் இருக்கை ஆப்ஷன்கள் உள்ளன.

வேரியன்ட்கள்

சீட் ஆப்ஷன்கள்

டர்போ-பெட்ரோல்

டீசல்

மேனுவல்

ஆட்டோமெட்டிக் (DCT)

மேனுவல்

ஆட்டோமெட்டிக்

எக்ஸிகியூட்டிவ்

6 இருக்கைகள்

7 இருக்கைகள்

பிரெஸ்டீஜ்

6 இருக்கைகள்

7 இருக்கைகள்

பிளாட்டினம்

6 இருக்கைகள்

7 இருக்கைகள்

சிக்னேச்சர்

6 இருக்கைகள்

7 இருக்கைகள்

  • லோவர்-ஸ்பெக் எக்ஸிகியூட்டிவ் மற்றும் பிரெஸ்டீஜ் வேரியன்ட்கள் பெட்ரோல்-மேனுவல் மற்றும் டீசல்-மேனுவல் காம்போக்களுடன் 7-சீட்டர் அமைப்பில் மட்டுமே கிடைக்கும்.

  • மறுபுறம் ஹையர்-ஸ்பெக் பிளாட்டினம் வேரியன்ட், 6-சீட்டர் கட்டமைப்பில் கிடைக்கும் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் வரும். அது அந்தந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். பிளாட்டினம் வேரியன்ட் 7-சீட்டர் கட்டமைப்பில், அனைத்து பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படும் ஒரே டிரிம் ஆகும்.

  • டாப்-ஸ்பெக் சிக்னேச்சர் வேரியன்ட் 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் லேஅவுட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கும். இருப்பினும் அவை ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு மட்டுமே.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வென்டிலேட்டட் முன் இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸார் காரில் இருக்கும் மற்ற வசதிகளாகும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் 2024 ஹூண்டாய் அல்கஸார் 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய கிரெட்டாவில் உள்ளதை போன்றே அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொண்டிருக்கும். இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை அடங்கும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

2024 ஹூண்டாய் அல்கஸார் காரின் விலை ரூ.17 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700, மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் அல்கஸார் ஆட்டோமெட்டிக்

s
வெளியிட்டவர்

samarth

  • 79 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Hyundai அழகேசர்

Read Full News

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை