மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு உதவ ஹோண்டா முன் வந்துள்ளது .
modified on டிசம்பர் 22, 2015 02:56 pm by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) சென்னையில் வசிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு வெள்ளத்திற்கு பின் ஏற்படும் வாகன பழுது போன்ற பிரச்சனைகளில் இருந்து மீள பல தரப்பட்ட உதவிகளை செய்ய முன் வந்துள்ளது. உபரி பாகங்களின் மீது 10% விலை குறைப்பு , லேபர் சார்ஜ் குறைப்பு மற்றும் மேலும் பல கூடுதல் சலுகைகளை தங்களது சென்னை வாடிக்கையாளர்களுக்கென அறிவித்துள்ளது.
இந்த நிவாரண பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெடின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான திரு. கட்சுஷி இநொயே , “ சென்னையில் மழை வெள்ளம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பின் தீவிரத்தை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். கணிசமான எண்ணிக்கையிலான எங்களது வாடிக்கையாளரின் கார்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ நீரில் மூழ்கி உள்ளது. அந்த கார்களை துரித கதியில் சரி செய்து முடிந்த வரை சீக்கிரமாக வாடிக்கையாளர்களுக்கு அந்த கார்களை வழங்கவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறோம்" என்று கூறினார்.
ஏற்கனவே ஹோண்டா கார் உரிமையாளர்கள் இந்த தருணத்தில் புதிய கார் வாங்கினால் லாயல்டி புள்ளிகள் என்ற வகையில் விலையில் ரூ.20,000 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கார்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலை கவனத்தில் கொண்டு ஹோண்டா நிறுவனத்தினர் , தனது பழைய கார்களை கொடுத்து புதிய கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ச்சேன்ஜ் போனஸ் என்ற வகையில் ரூ. 30,000 வரை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களுக்கு தேவைப்படும் புதிய உதிரி பாகங்கள் வேறு தொலைவான இடத்தில இருந்து கொண்டுவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு உண்டான போக்குவரத்து செலவையும் ஹோண்டா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள தனது பணியாளர்கள் மற்றும் டீலர்ஷிப் மையங்களில் உள்ள பணியாளர்கள் உட்பட தனது அனைத்து பணியாளர்களையும் இந்த நிவாரண பணிக்காக ஹோண்டா நிறுவனம் முடுக்கி விட்டு, அதிகப்படியான உதவிகளை விரைந்து காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தனது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பெற்று தருவதில் இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வெள்ள சேதத்தை கட்டுக்குள் வைக்க மாருதி சுசுகி முதலான பல கார்பரேட் நிறுவனங்கள் தங்களால் இயன்றவரை முயன்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் இந்த நிவாரண அறிவிப்பு வெளியாகி உள்ளது ஒரு ஆறுதல் தரும் செய்தியாகும்.
மேலும் வாசிக்க