ஹோண்டா ப்ராஜெக்ட் 2&4 கேலரி: ஹோண்டா ப்ராஜெக்ட் கார் ஒரு முன்னோட்டம்
published on பிப்ரவரி 04, 2016 03:56 pm by அபிஜித்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா பல அசத்தலான கார்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. பார்முலா வாகனங்கள் , அடுத்த தலைமுறை அக்கார்ட் மற்றும் ப்ராஜெக்ட் 2&4 என்று பலதரப்பட்ட வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் உலகம் முழுதிலும் உள்ள தங்களது டிஸைன் (வடிவமைப்பு ) ஸ்டுடியோக்களுக்கு இடையே ஒரு போட்டியை நடத்தியது. அதில் வெற்றி பெற்றதே இந்த ப்ராஜெக்ட் கார் ஆகும். முதலில் இந்த காரை கடந்த 2 0 1 5 ஆம் ஆண்டு நடைபெற்ற ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் தான் ஹோண்டா முதலில் காட்சிக்கு வைத்தது. ஹோண்டா நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் பிரிவின் உதவியுடன் தான் இந்த ப்ராஜெக்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அதன் தோற்றத்தைப் பார்க்கும் போதே நன்றாக உணர முடிகிறது. இந்த மேல் கூரை இல்லாத பக்கெட் வடிவ இருக்கைகளில் அமர்வது ஏதோ ஒரு எந்திரத்தில் அமர்வது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக RC213V மோடோ GP என்ஜின் மூலம் இந்த ப்ராஜெக்ட் கார் சக்தியூட்டப்படுகிறது .வடிவமைப்பு கேபின் இல்லாமல் வித்தியாசமாக இருந்தாலும் நிச்சயம் இந்த கார் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது உறுதி .