ஹோண்டா க்ரீஸ்: ஒரு மறு வடிவமைக்கப்பட்ட ஹோண்டா சிட்டி
published on அக்டோபர் 23, 2015 01:58 pm by அபிஜித்
- 15 Views
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
இப்போது நமக்கு சீனா ஒரு வேடிக்கையான வாகன சந்தையாக தோன்றுகிறது ! இதற்கு காரணம் ஹோண்டா நிறுவனம் ஒரே நாட்டுக்குள் இரு வேறு கூட்டாளிகளுடன் இணைந்துள்ளது. அதில் டோங்பேங் என்ற ஒரு நிறுவனம் படு ஸ்டைலாக ஹோண்டா சிட்டி கார்களை மாற்றி வடிவமைத்து அதற்கு ஹோண்டா க்ரீஸ் என்று பெயரிட்டு வெளியிட்டுள்ளது. மற்றொரு ஹோண்டா கூட்டு நிறுவனமான க்வாங்சௌவ் இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ஹோண்டா சிட்டி கார்களில் சாயலில் ஒரு புது மாடலை சீனாவில் வெளியிட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த இரண்டு கார்களும் சீன வாகன சந்தையில் மோதிக் கொள்ளும் வினோத நிகழ்வு அங்கே அரங்கேற உள்ளது.
இந்த காரில் முன்புறம் மற்றும் பின்புறம் மிகவும் ஸ்போர்ட்டியாக மாற்றப்பட்டு சமீபத்திய தலைமுறை ஹோண்டா சிவிக் கார்களின் சாயலில், அந்த கார்களில் உள்ளது போன்ற முகப்பு விளக்குகள் மற்றும் பின்புறத்தில் C வடிவிலான டெய்ல்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. பக்கவாட்டு பகுதியில் பெருமளவிற்கு மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை என்றாலும் சக்கரங்களிலும், காரின் பேஸ் கேரக்டர் லைன் போன்றவற்றில் மாற்றங்களை பார்க்க முடிகிறது. உட்புறத்திலும் எந்த வித குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தோன்றவில்லை. டேஷ்போர்ட், ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் உடன் கூடிய மதிய கன்சோல் பகுதி போன்றவை முந்தைய மாடலில் உள்ளது போலவே இருக்கிறது.
சற்று உள்நோக்கி ஆழமாக பார்க்கையில் , தற்போது விற்பனையில் உள்ள சீன மாடல் ஹோண்டா சிட்டி கார்களில் உள்ளது போன்ற 131 பிஎச்பி சக்தியை உற்பத்தி செய்யும் CVT ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்ட 1.5 லிட்டர் i- VTEC என்ஜின் இந்த ஹோண்டா க்ரீஸ் கார்களில் பொருத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஸ்போர்டியான தோற்றத்தை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களை குறி வைத்து சீன வாகன சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த ஹோண்டா க்ரீஸ் கார்கள் சராசரி ஹோண்டா சிட்டி கார்களை விட சற்று கூடுதலான விலையுடன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட உள்ள ஹோண்டா சிட்டி கார்களின் வடிவமைப்பில் இந்த க்ரீஸ் கார்களின் பாதிப்பு லேசாகவாவது இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.
இதையும் படியுங்கள் :