ஹோண்டா பிஆர் - வி அடுத ்த வருடன் அறிமுகமாகிறது , சொல்கிறார் சிஇஒ.
published on அக்டோபர் 27, 2015 01:05 pm by அபிஜித் for ஹோண்டா பிஆர்-வி
- 13 Views
- 7 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் சிஇஒ திரு . கட்சுஷி இனோயி , தங்களது புதிய கச்சிதமான SUV பிரிவு வாகனமான ஹோண்டா பிஆர்வி மார்ச் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிமுகமாகும் என்ற தகவலை ஹோண்டாவின் சார்பாக தெரிவித்துள்ளார். ப்ரியோ பிளேட்பார்மை அடிப்படையாக கொண்டு இந்த கார்கள் தயாரிக்கப்பட உள்ளது . போர்ட் ஈகோஸ்போர்ட், ரெனால்ட் டஸ்டர், ஹயுண்டாய் க்ரேடா மற்றும் மாருதி எஸ் - கிராஸ் கார்களுடன் இந்த BRV போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்த புதிய பிஆர்வி ப்ரியோ பிளேட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தாலும் சமீபத்திய ஹோண்டாவின் வெளியீடான மொபிலியோ வாகனத்தின் அம்சங்களை ஏராளமாக தன்னுள்ளே கொண்டுள்ளது. ஆனாலும் முன்புறம் மற்றும் பின்புறம் முழுதும் மாற்றி வடிவமைக்கப்பட்டு முற்றிலும் புதியதொரு தோற்றத்தோடு படு நேர்த்தியாக காட்சி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. . முன்புறம் சற்று கட்டையான (ஸ்டபி) தோற்றம் கொண்டுள்ளது. மேலும் க்லேம்ஷெல் போநெட் மற்றும் DRL உடன் கூடிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் போன்ற அம்சங்களும் வெளிப்புற தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு சேர்கிறது. பின்புறத்தில் டெயில்லேம்ப் க்ளஸ்டர் மற்றும் தடித்த கட்டுறுதியான தோற்றம் கொண்ட பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. .இவைகளைத் தவிர சுற்றி உடல் பகுதி முழுதும் கொடுக்கப்பட்டுள்ள க்ளேடிங் ( உறை பூச்சு ) நல்ல கட்டுறுதி மற்றும் அகலமான தோற்றத்தை இந்த புதிய CRV வாகனங்களுக்கு அளிக்கிறது.
உட்புறத்தைப் பொறுத்தவரை ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் கார்களின் பாதிப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள முற்றிலும் புதிய உட்புறம் படு அழகாக காட்சியளிக்கிறது. . இன்போடைன்மென்ட் சிஸ்டம் , ஸ்போர்டியான வடிவமைப்பு மற்றும் மல்டி பங்க்ஷன் ஸ்டீரிங் வீல் போன்ற அம்சங்களுடன் நல்ல வசதி கொண்ட மூன்றாவது வரிசை இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. .
ஹோண்டா சிட்டி மற்றும் மொபிலியோ வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் i -VTEC பெட்ரோல் என்ஜின் மூலமிந்த CRV சக்தியூட்டப்படுகிறது. . டீசல் ஆப்ஷனைப் பொறுத்தவரை தற்போது புழக்கத்தில் உள்ள 100 PS திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 120 PS ஆற்றல் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின்கள் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
விலையைப் பொறுத்தவரை, பெருமளவு உள்நாட்டிலேயே தபகுரா தொழிற்சாலையில் ஹோண்டா ஜாஸ் கார்களுடன் சேர்ந்தே இந்த வாகனம் தயாரிக்கப்படலாம் என்று யூகிக்கப்படுவதால் இதன் விலை ரூ. 8 லட்சங்கள் முதல் 13 லட்சங்ககளுக்கு இடையில் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
இதையும் படியுங்கள் :