2016ல் ஹோண்டா அக்கார்டு வெளியீடு; சென்னையில் வெளியானது ஹோண்டா ஜாஸ் - விலை ரூ.5.40 லட்சம் முதல்
published on ஜூலை 28, 2015 03:39 pm by bala subramaniam for ஹோண்டா நியூ அக்கார்டு
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் புதிய அக்கார்டு வெளியிடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் ஹோண்டா ஜாஸ் வெளியிட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (ஹெச்சிஐஎல்) விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மூத்த துணை தலைவரான திரு.ஞானீஸ்வர் சென் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இப்போதைக்கு இந்தியாவிற்கு புதிய சிவிக் மாடலை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றார். புதிய ஹோண்டா ஜாஸ் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.5.40 முதல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா ஜாஸ் 1.2-லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் என்ஜின் என்ற வகைகளில் கிடைக்கும். விசை மற்றும் டார்க் வெளியீடு முறையே 90 பிஎஸ்/110 என்எம் மற்றும் 100 பிஎஸ்/200 என்எம் ஆகும். பெட்ரோல் என்ஜினை பொருத்த வரை 5 ஸ்பீடு மெனுவல் ட்ரான்ஸ்மிஷனாகவோ அல்லது ஒரு சிவிடி கியர்பாக்ஸாகவோ இருக்கும். டீசல் என்ஜினில் 6-ஸ்பீடு மெனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே உள்ளது. எரிபொருள் செலவீனத்தில் ஒவ்வொன்றும் வேறுபாடு கொண்டுள்ளது. டீசல் மூலம் 27.3 கிமீ/லிட்டரும், பெட்ரோல் மெனுவல் மூலம் 18.7 கிமீ/லிட்டரும், பெட்ரோல் சிவிடி மூலம் 19 கிமீ/லிட்டரும் கிடைக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு.காட்சுஷி இனோய் கூறுகையில், “கடந்த 2001 ஆம் ஆண்டு ஜாஸ் முதல் தலைமுறை வெளியிடப்பட்டு, உலகமெங்கும் சுமார் 75 நாடுகளில் 5.5 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி மிகவும் வெற்றியடைந்த ஒரு மாடலாகும். உலகமெங்கும் எங்களின் வியாபாரத்தை விருத்தியடைய செய்ததில் ஜாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே வெற்றியை இந்தியாவிலும் பெற்று தந்து, எங்களின் நுகர்வோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.”
அவர் மேலும் கூறுகையில், புதிய ஜாஸ் உடன் இந்தியாவில் பி ப்ளஸ் பிரிவுகளை குத்தகைக்கு எடுத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். வரும் 2016 ஆண்டு ரூ.380 கோடி முதலீட்டில் நிறுவனத்தின் ராஜஸ்தான் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்து மொத்தம் 3 லட்சம் யூனிட்களுக்கு பெருக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் 2016 ஆம் ஆண்டு 200 நகரங்களில் மொத்த டீலர்ஷிப் தொடர்புகளை 300 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
புதிய ஹோண்டா ஜாஸ் வகைகள் மற்றும் விலை (எக்ஸ்-ஷோரூம்–சென்னை):
ஹோண்டா ஜாஸ் பெட்ரோல்
ஜாஸ் இ – ரூ.5.40 லட்சம்
ஜாஸ் எஸ் – ரூ.6.05 லட்சம்
ஜாஸ் எஸ்வி – ரூ. 6.56 லட்சம்
ஜாஸ் வி – ரூ. 6.93 லட்சம்
ஜாஸ் விஎக்ஸ் – ரூ. 7.42 லட்சம்
ஜாஸ் எஸ் சிவிடி – ரூ. 7.10 லட்சம்
ஜாஸ் வி சிவிடி – ரூ. 7.98 லட்சம்
ஹோண்டா ஜாஸ் டீசல்
ஜாஸ் இ – ரூ. 6.62 லட்சம்
ஜாஸ் எஸ் – ரூ. 7.28 லட்சம்
ஜாஸ் எஸ்வி – ரூ. 7.79 லட்சம்
ஜாஸ் வி – ரூ. 8.26 லட்சம்
ஜாஸ் விஎக்ஸ் – ரூ. 8.75 லட்சம்.