ஃபார்முலா E ரேஸில் மஹிந்த்ரா ரேசிங் அணியின் சார்பாக ஹெட்ஃபெல்ட் முதல் முறையாக வெற்றிபெற்று மேடை ஏறினார்

published on அக்டோபர் 27, 2015 10:38 am by nabeel

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Nick Heidfeld

நிக் ஹெட்ஃபெல்ட் M2 எலக்ட்ரோ ஃபார்முலா E என்ற பிரபலமான கார் ரேசில் ஜெயித்து, தனது டீமின் முதல் போடியத்தை வென்று, மஹிந்த்ரா ரேசிங் டீமிற்கும் இந்தியாவிற்கும் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார். நிக் ஹெட்ஃபெல்ட் மற்றும் ப்ரூனோ சென்னா ஆகியோர் P3 மற்றும் P7 ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, P3 மற்றும் P13 –இல் முடித்தனர். FIA ஃபார்முலா E சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில், மஹிந்த்ரா ரேசிங் டீம் மட்டுமே இந்திய அணியாகும்.

இந்த ரேஸில், மிகப்பெரிய ஏமாற்றம் பிட் ஸ்டாப்பில் நடந்தது. கார்கள் ஸ்வாப் செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, இரண்டு ஓட்டுனர்களும் தங்களின் முன்னணி இடத்தை விட்டுவிட நேர்ந்தது. நிக் இதனை சுதாரித்து, P4 டிராக்கில் மீண்டும் இணைந்தார். பின்புற விங் உடைந்து விட்டதால், நிக்கோ பிரோஸ்ட் என்ற வீரர் டிராக்கில் இருந்து கண்டிப்பாக விலகவேண்டி இருந்தது. எனவே, ஹெட்ஃபெல்ட் P3 –இல் முந்தி, இந்த டீமிற்கு, அருமையான சிறந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். சென்னாவும் குழப்பமான பிட் ஸ்டாப்பில் கோட்டை விட்டதைப் பிடிக்க மிகவும் பிரயாசைப்பட்டு, P13 –இல் முடித்துவிட்டார்.

Mahindra Racing

மேலும் வாசிக்க: மாருதி சுசுகி பலீனோ ரூ. 4.99 லட்சத்திற்கு அறிமுகம்

மஹிந்த்ரா ரேசிங்க் ஃபார்முலா E அணியின் முதல்வரான டில்பாக், “முதலாவது போடியம் வென்றதால், மஹிந்த்ரா நிறுவனமும் எங்கள் அணியும் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இரண்டு கார்களும் இந்த போட்டியில் தகுதி பெற்றது மற்றும் நிக்கின் இறுதி வெற்றி (ரினால்ட்டை விட மிகவும் வேகமான அணி) ஆகியவை, நாங்கள் M2 எலக்ட்ரோ இஞ்ஜினை உருவாக்கிய அணுகுமுறை மிகச் சரியான ஒன்று என்பதை எடுத்துரைக்கின்றன. சோதனை செய்யப்பட்ட காலங்களிலேயே, இந்த கார் மிகவும் நம்பகமாகவும் சீராகவும் இயங்கி வந்தது. எங்களிடம் தகுதி மற்றும் பந்தைய சுற்றுக்களில் வெல்லக் கூடிய சிறந்த பேக்கேஜ் உள்ளது என்பதை, இந்த வெற்றியின் மூலம் இப்போது நாங்கள் உணர்கிறோம். வெற்றிவாகை சூடிய எங்களை, நாங்களே பாராட்டிக் கொண்டு, அடுத்த கட்டமாக வரவிருக்கும் அடுத்த பந்தயங்களிலும் வெற்றி பெறுவதற்கு உழைக்க தயாராகி விட்டோம். எங்களிடம் ஒரு சிறந்த கார் உள்ளது. எனவே, இதை விட அருமையான வெற்றிபெறக் கூடிய சாத்தியங்கள் இருந்தன. இப்போது, சீரான ரேஸ் பெர்ஃபார்மன்சுக்கு எங்களை தயார் படுத்திக்கொள்ளும் நேரம் வந்து விட்டது,” என்று கூறினார்.

நிக் ஹெட்பெல்ட் தனது வெற்றி அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, “இந்த மாதிரியானதொரு அருமையான வெற்றியை அடைவதற்கு உதவியாக இருந்த, அபாரமான செயல்திறன் மிக்க ஒரு காரை எனக்குத் தந்த எனது அணியினருக்கு, நான் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன். நான் அதிக முயற்சி மற்றும் கவனத்துடன் ஓட்டும் டிமாண்டிங்க் ஓட்டுனராக இருக்கலாம். ஆனால், எனது அணியினர் கொடுத்த உற்சாகத்தாலும் உழைப்பாலுமே, இந்த வெற்றி கிட்டியது. இந்த வெற்றியை அடிப்படையாக வைத்து, இந்த காரை மேலும் செம்மைபடுத்துவோம். M2 எலக்ட்ரோ தொடர்ந்து, கார் பந்தயங்களின் கிரிட்டில், முதலாவதாக நிற்கும் என்று நம்புகிறேன். இறுதி லாப்களில், நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. ஏனெனில், எனக்கு பின்னால் வந்த மற்ற கார்கள் கடினமான நெருக்கடியை கொடுத்தவண்ணம் இருந்தன. எனினும், இந்த பந்தயத்தில் வெல்வதற்கு போதுமான தந்திரமும் ஆற்றலும் என்னிடம் இருந்ததால், அவர்களை எனக்கு முன்னே விட்டு விடாமல், வெற்றிக் கொடியைத் தொட முடிந்தது,” என்று கூறினார்.

M2Electro

மேலும் வாசிக்க: செவ்ரோலெட் டிரைல் பிளேசர்: விரிவான புகைப்பட தொகுப்பு (போட்டோ கேலரி)

ப்ரூனோ சென்னா அவரது வெற்றி அனுபவத்தைப்பற்றி கூறும் போது, “அந்த நாள் எனக்கு ஒரு கலவையான நாளாக இருந்தது. பயிற்சி சுற்று மற்றும் தகுதி சுற்றில், இந்த கார் மிகவும் அருமையாக ஓடியது. மேலும் மேலும் வேகமாக சென்று, இந்த ரேசில் முதலில் வந்து விட முடியும் என்று நம்பினேன். ஆனால், பிட் ஸ்டாப்பில் நடந்த குளறுபடியால், இறுதியில் நான் நம்பிக்கை இழந்தேன். ஃபார்முலா E போடியத்தில் முதலாவதாக மஹிந்த்ரா ரேசிங்க் அணி வந்திருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முதலில் இருந்து இந்த அணியில் ஒரு பகுதியாகவே செயல்படுவதால், இந்த வெற்றி எப்படிப்பட்ட சந்தோஷத்தை இந்த அணியினருக்குத் தரும் என்பதை என்னால் உணரமுடிகிறது. எங்களிடம் ஒரு வேகமான, நம்பகமான கார் இருப்பதினால், நாங்கள் மலேசியா செல்லவிருக்கிறோம். அங்கும், எங்களின் தெளிவான பந்தய திறமைகளால், இத்தகைய வெற்றியைக் கைப்பற்றுவோம்,” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மேலும் வாசிக்க: மஹிந்த்ரா XUV 500 வாகனத்தின் விற்பனை 1.5 லட்சத்தைத் தாண்டியது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience