சூப்பர் SUV: கிராண்ட் செரோகீ SRT காரின் புகைப்படத் தொகுப்பு
published on பிப்ரவரி 09, 2016 03:14 pm by அபிஜித்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்ற முறை நடந்த ஆட்டோ எக்ஸ்போவைப் போல இல்லாமல், இந்த முறை ஃபியட் நிறுவனத்தின் அரங்கத்திற்கும் ஜீப்பின் அரங்கத்திற்கும் நடுவே கணிசமான இடைவெளி இருந்தது. 2014 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இந்நிறுவனம் ஜீப்பின் SUV வரிசை கார்களை, ஃபியட்டின் கார் வரிசையில் நிறுத்தி இருந்தது. எனினும், இந்த முறை SRT (ஸ்ட்ரீட் அண்ட் ரேசிங் டெக்னாலஜி) முறையில் தயாரிக்கப்பட்டுள்ள தனது கிராண்ட் செரோகீ காரை ஜீப் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இன்னும் ஒரு சில மாதங்களில், இந்த கார் இந்திய வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.
ஒளிரும் சிவப்பு வண்ணத்தில், பெரிய 5 ஸ்போக் குரோம் சக்கரங்களைக் கொண்ட இந்த கார், காண்பவர்களின் கண்களைப் பறிக்கும் அழகுடன் அரங்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. கார் தயாரிப்பாளர்கள் க்ரோம் வேலைப்பாடுகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், SRT அதிகமான க்ரோம் வேலைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது.
கிராண்ட் செரோகீ காரின் தோற்றம் மட்டும் பெரியதாக இல்லை, இதில் பல தனித்துவமான செயல்பாட்டுத் திறன்கள் இடம்பெற்றுள்ளதால், ஏனைய கார்களில் இருந்து வித்தியாசமாகத் தெரிவது உறுதி. அதிக செயல்திறனைக் கொடுக்கும் பிரெம்போ ப்ரேக்குகள், நவீன 4 வீல் ட்ரைவ் அமைப்பு, முகப்பில் உள்ள பானெட்டில் வெப்பத்தை வெளியேற்றும் துளைகள் மற்றும் மேலும் பல இதன் சிறப்பம்சங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி, இந்த கம்பீரமான காருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.
கிராண்ட் செரோகீ காரின் வெளிப்புறத் தோற்றம், அமெரிக்க கார்களின் பாரம்பரியத்தை பறை சாற்றுவதைப் போலவே, இதன் உட்புற அமைப்புகளான வலுவான பேனல்கள், பெரிய சீட்கள் மற்றும் சீராக வடிவமைக்கப்பட்ட டாஷ் போர்டு ஆகியவை அமெரிக்க கார்களில் உள்ளதைப் போலவே இருக்கின்றன. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கபட்டுள்ள SRT –யின் உட்புறத்தில் உள்ள கருவிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு, கார்பன் பைபரில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கருப்பு நிற தீமிற்கு முரண்பாடாக, பழுப்பு நிறத்தில் லெதர் இருக்கைகள் பொருத்தப்பட்டு, பளிச்சென்று உள்ளன.
இறுதியாக, இதன் இஞ்ஜினைப் பற்றி பேசியே ஆக வேண்டும். இந்த காரில் 470 bhp சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய நேச்சுரலி ஆஸ்பிரெடெட் 6.4 லிட்டர் HEMI V8 இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்ற ஜீப் நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த காரை ஸ்டார்ட் செய்தபோது, இந்த கார் சிங்கம் போல கர்ஜித்தது. அந்த கர்ஜனை, அங்குள்ள அனைவரின் செவிப்பறைகளையும் கிழிப்பது போல இருந்தது.