போர்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட் கார்களை ரூ. 6. 79 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
modified on அக்டோபர் 08, 2015 03:15 pm by அபிஜித் for போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
விலை குறைவான பேஸ் பெட்ரோல் மாடல் ஈகோஸ்போர்ட் கார்களை போர்ட் நிறுவனம் ரூ. 6. 79 லட்சங்களுக்கு ( எக்ஸ் - ஷோரூம், டெல்லி ) வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ஈகோஸ்போர்ட் கார்களில் சமீபத்தில் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பீகோ அஸ்பயர் மற்றும் பீகோ கார்களில் பயன்படுத்தப்பட்ட அதே சக்திவாய்ந்த டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆழ்ந்து நோக்குகையில் என்ஜினில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களை நாம் அறிந்து கொண்டதைப் போல காரின் உட்புறத்திலும் சில மாற்றங்களை காண முடிகிறது.
205 nm டார்க் ( ஏதோ காரணத்தால் பீகோ அஸ்பயரில் உள்ளது போன்ற 215 nm டார்க் வெளிபடுத்தும் விதத்தில் இல்லாமல்) மற்றும் 100 PS அளவுக்கு சக்தியை வெளியிடக்கூடிய 1.5 லிட்டர் TDCi டீசல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினைத் தவிர 1.0 லிட்டர் 125 PS ஈகோபூஸ்ட் மற்றும் 112 PS 1.5 லிட்டர் TiVCT பெட்ரோல் ஆப்ஷன் என்ஜின்களும் அறிமுகமாகின்றன.
இதில் மிக முக்கிய விஷயமாக நாம் பார்ப்பது, அதிநவீன இந்த ஈகோபூஸ்ட் மோட்டார், வாங்க தூண்டும் விலையில் ஈகோஸ்போர்ட் ட்ரென்ட்+ வேரியன்ட்களில் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு சொல்லலாம். மேலும் முந்தைய ட்ரென்ட் ஒன் வேரியன்ட் உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய ட்ரென்ட்+ வேரியன்ட் கார்களில் சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத்தைப் பொறுத்தவரை நாம் பீஸ்டாவில் பார்த்த தங்க பிரான்ஸ் நிறம் மற்றும் DRL ( பகலில் ஒளிரும் விளக்குகள் ) முன்பு ஒரு ஆக்ஸசரி யாக வழங்கப்பட்டது போல் இல்லாமல் இப்போது ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
பல்வேறு வேரியன்ட்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை கீழே பார்ப்போம்.