போர்ட் இந்தியா நிறுவனம் தனது செடான் வகைக் காரான பீகோ அஸ்பயர் கார்களின் முன்பதிவை வரும் ஜூலை 2 7 ம் தேதி முதல் துவக்க உள்ளது.
published on ஜூலை 27, 2015 02:12 pm by sourabh for போர்டு ஃபிகோ 2015-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: வெகு நாள் காத்திருப்புக்கு பின் போர்ட் கார் பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. போர்ட் நிறுவனத்தின் புதிய கச்சிதமான செடான் பிரிவு காரான பீகோ அஸ்பயருக்கான முன்பதிவு ஜூலை 27 ஆம் தேதி தடங்க உள்ளது. வெறும் 30,000 ஆயிரம் ரூபாய் முன்பணம் மட்டுமே போதுமானது. சுவிப்ட் டிசையர் கார்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள இந்த செடான் ஓட்டுனர் மட்டும் சகப்பயணிக்குமான காற்று பைகள் (ஏயர் பாக்) உடன் வருகிறது. அதே சமயம் விலை சற்று கூடுதலான டாப் மாடல்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆறு காற்று பைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்களை பொறுத்தவரை ஏராளமான விஷயங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன என்று சொன்னால் அது மிகை இல்லை. புதுமையான போர்ட் மைகீ, மைபோர்ட் டாக் அல்லது சின்க் (SYNC)உடன் கூடிய போர்ட் ஆப்லிங்க் என்று ஏராளமான அதீத தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் கனக்கச்சிதமான இந்த செடான் வகை கார்கள் ஆம்பியன்ட், டிரன்ட், டைடானியம் மற்றும் டைடானியம்+ என்ற பெயர்களில் வெவ்வேறு சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட உள்ளது.
இந்தப் புதிய செடானைப்பற்றி போர்ட் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெடிங்,விற்பனை மற்றும் சர்வீஸ் துறைகளின் நிர்வாக இயக்குனர் அனுராக் மெக்ரோத்ரா பின்வருமாறு கூறுகிறார். “ பீகோ அஸ்பயர் கார்கள் தரத்திலும் தொழில் நுட்ப திறத்திலும் எந்த வித சமாதானமும் செய்யாமல் இந்திய சந்தைக்கென்றே அசத்தலான வடிவமைப்புடனும், நேர்த்தியான தொழில் நுட்பத்துடனும், உயர்வான பாதுகாப்பு வசதிகளுடனும் கூடுதல் மைலேஜ் தரும் வகையிலும் பார்த்து பார்த்து உருவாகப்படுள்ளன.
பீகோ அஸ்பயர் கார்கள் டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின் மாடல்களில் கிடைக்கிறது. டீசல் மாடலில் 100 பி எஸ் சக்தியை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் TDCi எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மாடல்களில் 88 பி எஸ் சக்தியை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் Ti – VCT எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வகை இஞ்ஜின் மாடல்களிலும் 5 ஸ்பீட் கியர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. டீசல் இஞ்சின் மாடல்கள் லிட்டருக்கு 25.8 கி. மீ வரை மைலேஜ் தருகிறது. மறுபுறம் பெட்ரோல் மாடல்கள் லிட்டருக்கு17.8 கி மீ வரை மைலேஜ் தருகிறது.
இதைத்தவிர 6 ஸ்பீட் தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் 112 பி எஸ் என்ற அளவுக்கு சக்தியை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் Ti – VCT பெட்ரோல் எஞ்சின்கள் சுமார் 17.2 என்ற அளவிற்கு மைலேஜ் தரக்கூடிய வகையில் அறிமுகமாகின்றன.