போர்ட் பீகோ Vs மாருதி ஸ்விப்ட் Vs ஹயுண்டாய் க்ரேண்ட் i10 , டாடா போல்ட்
published on செப் 24, 2015 10:08 am by அபிஜித் for போர்டு ஃபிகோ 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: போர்ட் நிறுவனம் தன்னுடைய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை பீகோ கார்களின் பேஸ் மாடலை ரூ. 4.29 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் , டெல்லி) என்ற விலைக்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த வாங்க தூண்டும் விலையால் மாருதி ஸ்விப்ட், ஹயுண்டாய் க்ரேண்ட் i10 மற்றும் டாடா போல்ட் என்ற தன்னுடைய ஒவ்வொரு பெரிய போட்டியாளரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது. உங்கள் வசதிக்காக இந்த கார்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து அவைகள் ஒவ்வொன்றிலும் காணப்படும் தனித்துவமான அம்சங்களை குறிப்பிட்டுள்ளோம்.
வெளிப்புறம்
போர்ட் நிறுவனத்தின் முந்தைய அறிமுகமான ஆஸ்பயர் கார்களின் அடிப்படியிலேயே இந்த புதிய பீகோ கார்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது நாம் நன்கு அறிந்ததே. நிச்சயம் வடிவமைப்பை பொறுத்தவரை இந்த புதிய பீகோ நம்மை ஏமாற்றாது என்று உறுதியாக சொல்லலாம். போர்ட் கார்களின் தனித்துவமான மூக்கு பகுதி வடிவமைப்பு இந்த பீகோ கார்களிலும் அழகை சேர்த்து மற்ற கார்களில் இருந்து இந்த காரை தனித்து நிற்கச் செய்கிறது.
உட்புறம்
உட்புறத்தைப் பொறுத்தவரை மற்ற ஹேட்ச்பேக் கார்களில் இருந்து மாறுபட்டு முழுதும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இன்றி மத்திய கன்சோல் பகுதி, கதவு கைபிடிகள் மற்றும் பல பகுதிகளில் வெள்ளி ட்ரிம் கொடுக்கப்பட்டுள்ளது.
என்ஜின்
சற்று ஆழ்ந்து கவனிக்கையில் இந்த கச்சிதமான ஹேட்ச்பேக் பிரிவு கார் தன்னுடைய போட்டியாளர்களை விட எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியா வண்ணம் 100 PS சக்தியை வெளியிடக்கூடிய டீசல் என்ஜின் மற்றும் 112 PS சக்தியை வெளியிடக்கூடிய 1.5 லிட்டர் TiVCT பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளியாகிறது.
இந்த பிரிவில் உள்ள எந்த ஒரு காரும் இவ்வளவு சக்தியை வெளியிடாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் மைலேஜ் விஷயத்திலும் இந்த புதிய பீகோ சிறப்பாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
0 out of 0 found this helpful