புதிய டாடா ஸீகா காரை குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

published on டிசம்பர் 04, 2015 05:31 pm by manish

ஜெய்ப்பூர்:

அதிக காத்திருப்பை ஏற்படுத்திய ஹாட்ச்பேக்கான டாடாவின் ஸீகா நேற்று இரவு கோவாவில் அறிமுகம் செய்யப்பட்டு, இந்த காரின் மீது நமக்கு இருந்த எல்லா எதிர்பார்ப்புகளையும், அது கடந்து நிற்கிறது. இந்த அறிமுகத்திற்கு பிறகு, அந்த காரின் சிறப்பம்சங்களை, டாடா நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஸீகா என்ற இந்த சிறிய வகை ஹாட்ச்பேக் காரை, ஒரு துருப்பு சீட்டாக மாற்றும் வகையிலான சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனவே இந்தியாவின் அடுத்து வரும் மிகவும் விரும்பத்தக்க ஹாட்ச்பேக்குகளில் ஒன்றாக ஸீகாவை மாற்றியுள்ள அதன் சிறப்பம்சங்களில் முக்கியமானவற்றை ஒரு பட்டியலாக தொகுத்து வெளியிட்டுள்ளோம். டாடா ஸீகாவை குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை இதோ!

டிசைன்

இந்த காரின் வடிவமைப்பில், புனே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய பகுதிகளை அடிப்படையாக கொண்ட டாடா டிசைன்ஸ் ஸ்டூடியோக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை காண முடிகிறது. இந்த கார் டாடாவின் டிசைன்நெக்ஸ்ட்டின் வடிவமைப்பு நடையில் அமைந்துள்ளது. இந்த காரின் அட்டகாசமான நிலைபாட்டிற்கு, அதன் ஸ்டைலிங் அம்சங்கள் முக்கிய பங்கு வகித்தாலும், அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களும் தனது பங்கை ஆற்றியுள்ளது. ஒரு வீரமான மற்றும் வடிவமைக்கப்பட்ட சிற்பமாக தோற்றம் அளிக்கும் இந்த கார், ஹியூமனிட்டி லைன், ஸ்லிங்ஷாட் லைன் மற்றும் டைமண்ட் DLO ஆகிய டிசைன்நெக்ஸ்ட் கோட்பாடுகளில் சிறந்ததை உட்கொண்டதாக திகழ்கிறது. ஸீகாவில் உள்ள 3-பரிணாமங்களை கொண்ட ஹெட்லெம்ப்கள் உடன் மோடமான (ஸ்மோக்டு) லென்ஸ்கள், ஸ்போட்டி பிளாக் பிஸில் மற்றும் குறை எதுவுமின்றி வடிவமைக்கப்பட்ட பின்புற ஸ்பாய்லர் ஸ்பாட்கள் ஆகிய அம்சங்களை கொண்டு, ஒரு கச்சிதமான டிசைன் மற்றும் ஒட்டுமொத்த கவர்ச்சி பொருளாக காணப்படுகிறது. ஸீகாவின் வடிவமைப்பு அடிப்படையில் காரியங்களை பார்க்கும் போது, அவை பாராட்டத்தக்கவை. இதை விண்டுஷில்ட் வைப்பரின் அமைப்பிலேயே தெளிவாக காணலாம்.

இது தாழ்வாக அமைக்கப்பட்டு, உள்ளே இருப்பவர்களால் வெளிபுறத்தை தெளிவாக காண உதவுகிறது.

ஆற்றலகங்கள்

டாடாவின் இன்-ஹவுஸில் உருவாக்கப்பட்ட ரிவோட்ரோன் குடும்பத்தை சேர்ந்த 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்கள், புதிய டாடா ஸீகாவின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ஒரு 1.2-லிட்டர் ரிவோட்ரோன், 3-சிலிண்டர் 4 வால்வு MPFi பெட்ரோல் என்ஜின் மூலம் 6000rpm-ல் 85PS ஆற்றலையும், 3500rpm-ல் அதிகபட்சமாக 114Nm முடுக்குவிசையையும் தயாரிக்க வல்லது. டீசல் மில்லில் ஒரு 1.05-லிட்டர் ரிவோடார்க், 3-சிலிண்டர், CRAIL என்ஜின் மூலம் 4000rpm-ல் 70PS ஆற்றலையும், 1800-3000rpm-க்கு இடைப்பட்ட நிலையில் 140Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது.

டிரைவிங் முறைகள்

இந்த காரின் மூலம் சிறப்பான (ஸிப்பி) டிரைவிங் அனுபவத்தை பெற முடியும் என்பதை உறுதியளித்து, அதை தழுவியதாக இந்த ஹாட்ச்பேக்கிற்கு ‘ஸீகா’ என்று இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த பெயர் “ஸிப்பி கார்” என்பதன் சுருக்கமாகவும், அந்த புனைப்பெயருக்கு ஏற்ப, இந்த ஹாட்ச்பேக்கில் டிரைவிங் முறைகளை தேர்ந்தெடுக்கும் அமைப்பை இந்நிறுவனம் இணைத்துள்ளது. அதன்படி சிட்டி மற்றும் ஈகோ டிரைவ் ஆகிய பெயர்களை கொண்ட மல்டி-டிரைவ் முறைகளில், டிரைவரின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க முடியும். செஸ்ட் சேடன் மற்றும் போல்ட் ஆகிய ஹாட்ச்பேக்களில் சமீபத்தில் இந்த அமைப்பு, டாடா நிறுவனத்தால் அளிக்கப்பட்ட மற்றொரு அம்சம் என்பது நினைவுக்கூறத்தக்கது. ஸீகாவில் உள்ள பல அம்சங்களும், இந்த பிரிவிலேயே முதல் முறையாக டாடா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான காரியங்களுக்கும், டாடா நிறுவனம் முக்கியத்துவம் அளித்துள்ளது. ஸீகாவில் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள், மேம்பட்ட 9வது தலைமுறையை சேர்ந்த ABS உடன் EBD, கார்னர் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள் உடன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் ஒரு ஆற்றலை உறிஞ்சும் (எனர்ஜி அப்ஸார்பிங்) பாடி அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காரில் விபத்து ஏற்படும் பட்சத்தில் இயக்க ஆற்றலை உடனடியாக இழுக்கும் வகையில், இயக்க ஆற்றலை (கைனட்டிக் எனர்ஜி) முற்றிலுமாக கவர்ந்திழுப்பதை உறுதிப்படுத்தும் ஒரு அமைப்பு காணப்படுகிறது. இதன் மூலம் கேபின் அமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட வேகங்களில் ஏற்படும் விபத்துகளில் காரின் உள்ளே இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

அம்சங்கள்

சிறப்பான காரியங்களை கடைசியில் வெளியிடும் வகையில், டாடா ஸீகாவின் கேபினில் உள்ள சிறப்பம்சங்கள் இதோ! ஸீகாவின் உயர் வகை மாடலின் உட்புற அமைப்பியலில், இடது மற்றும் வலது AC அடுக்குகளில் பாடி கலர்டு AC வென்ட் பாலெட்கள் அம்சம் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கனெக்ட்நெக்ஸ்ட் வரிசையில் அமைந்த ஹார்மேனின் ஒரு புதிய பொழுதுபோக்கு சாதனத்தை ஸீகா கொண்டிருப்பது கவர்ச்சிகரமாக, அதே நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த அமைப்பில் ப்ளூடூத், USB மற்றும் ஆக்ஸ்-இன் இணைப்பு, இதோடு ஒரு ட்யூனர் மற்றும் பின்புற பார்க்கிங் சென்ஸர்கள் அளிக்கும் தகவல்களை தொகுத்து அளிக்கும் ஒரு பெரிய ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதோடு இப்பிரிவில் முதல் முறையாக எட்டு-ஸ்பீக்கர் அமைப்பு (4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்விட்டர்கள்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் இக்காரில் நேவிகேஷன் ஆப் மற்றும் ஜூக்-கார் ஆப் என்ற இரு புதிய அப்ளிகேஷன்கள், நுகர்வோருக்காக அளிக்கப்படுகிறது.

இக்காரின் பயனீட்டாளர் தனது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை, இந்த இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை ப்ளூடூத் மூலம் நேவிகேஷன் ஆப் உடன் இணைத்து, இக்காரில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பில் டேன்-பை-டேன் நேவிகேஷனை காட்டுகிறது.

ஜூக்-கார் ஆப் என்ற மற்றொரு ஆப், டாடா ஸீகாவின் ஒரு துருப்பு சீட்டாக கருதப்படுகிறது. இந்த ஜூக்-கார் ஆப்-பை ஹார்மேன் வடிவமைத்துள்ளது. Xஎன்டர் போன்ற மற்ற டேட்டா பரிமாற்றம் செய்ய உதவும் ஆப்-பை ஒத்து காணப்படும் இதில், மொபைல் ஹாட்ஸ்பார்ட்டின் மூலம் உருவாக்கப்படும் ஒரு மெய்நிகர் இணைப்பை (வெர்ச்சூவர் நெட்வார்க்) பயன்படுத்தி, மற்ற சாதனங்களுடன் தொடர்பை, ஒருவர் தனது இணைக்கப்பட்ட / ஹோஸ்ட்-டிவைஸ் (ஆண்ட்ராய்டு மட்டுமே) மூலம் அவரது முழு மியூசிக் ப்ளே லிஸ்ட்டையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதன்மூலம் நீண்ட இணைப்பு கேபிள்களின் சிக்கல் அல்லது ஒருவரின் சாதனத்தை கடந்து செல்வதால் ஏற்படும் சிரமம் ஆகியவை எதுவுமின்றி, எளிதான இணைப்பு வசதியும், எந்த தொந்தரவும் இல்லாமல் டிராக்குகளை மாற்றவும், காரில் உள்ள எல்லா பயணிகளுக்கும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்

அதிக சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்டார்ம், ரூ.13.52 லட்சத்தில் அறிமுகம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience