மாருதி சுசுகி XL6 டொயோட்டாவின் எர்டிகாவுக்கான முன்னோட்டமா ?
sonny ஆல் ஆகஸ்ட் 30, 2019 04:21 pm அன்று மாற்றியமைக்கப்பட்டது செய்யப்பட்டது
- 65 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டாவிற்கும் சுசுகிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட டொயோட்டாவாக எர்டிகா விற்பனைக்கு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
-
மாருதி-டொயோட்டா கூட்டு ஒப்பந்தம் பலேனோ, சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா போன்ற மாடல்களைப் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது.
-
பாலேனோ டொயோட்டா கிளான்ஸா மற்றும் அல்பெயிட் எனப்படும் இரண்டு மாறுபாடுகளில் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே விற்கப்படுகிறது.
-
இந்தியாவில் டொயோட்டாவின் அடையாளத்தை பெறும் அடுத்த மாடலாக மாருதி சுஸுகியின் MPV இருக்கக்கூடும்.
-
எர்டிகாவை அடிப்படையாகக் கொண்ட புதிய XL6 உயர்ரக வசதிகள் மற்றும் எர்டிகாவை விட கடினமான வடிவமைப்புடன் உருவாகியுள்ளது
-
எர்டிகா மற்றும் XL6ஐ ஒப்பிடுகையில் பிந்தையது டொயோடா விற்பனை மையங்களில் விற்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
-
கிளான்ஸாவைப் போலவே, டொயோட்டா அடையாளக்குறி பொறிக்கப்பட்ட XL6 மாருதி MPV-ன் விலையை ஒத்ததாக இருக்கும்.
டொயோட்டா-சுசுகி கூட்டு ஒப்பந்தம் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் எதிர்கால மாடல்கள் பல பகிரப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் இரண்டு வாகனத்துறை ஜாம்பவான்களும் மாருதி சுசுகியின் MPVஆன எர்டிகாவை பகிர்ந்து கொள்ளும் மாடல்கள் பட்டியலில் சேர்த்தன.
மறுவடிவமைக்கப்பட்ட மாருதி பலேனோவான டொயோட்டா கிளான்ஸாவைப் போலவே, டொயோட்டா எர்டிகாவின் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பையும் அறிமுகப்படுத்தும். மாருதி சுசுகி XL6 எர்டிகாவின் உயர்ரக பதிப்பாக இருப்பதால், இதுவே எதிர்காலத்தில் டொயோட்டா விற்பனை நிலையங்களுக்கு வரும் பதிப்பாக இருக்கலாம்.
XL6 என்பது எர்டிகாவின் 6 இருக்கைகள் கொண்ட பதிப்பாகும், இது BS6 விதிகளுக்குட்பட்ட பெட்ரோல் எஞ்சினுடன் லேசான-கலப்பின பவர்டிரெய்னுடன் வழங்கப்படுகிறது மற்றும் எர்டிகாவை விட வித்தியாசமான வடிவமைப்பு பாணியைக் கொண்டுள்ளது. மாருதி சுசுகி இதை தனது உயர்ரக நெக்ஸா விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனை செய்கிறது மற்றும் இதன் விலை வரம்பு ரூபாய்.9.8 லட்சம் முதல் ரூபாய் .11.46 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கு. இந்த விலை பிரிவில் டொயோட்டாவுக்கு இன்னோவா கிரிஸ்டாவைத் தவிர எந்தவொரு MPVயும் இல்லை. இதன் விலை ரூபாய் .14.93 லட்சம் முதல் ரூபாய் .22.43 லட்சம் வரை இருக்கிறது (எக்ஸ்ஷோரூம் டெல்லி).
மாருதி சுசுகி XL6 இன் விவரக்குறிப்புகள் இங்கே:
அளவீடுகள் |
செயல்திறன் |
||
நீளம் |
4445 மிமீ |
எஞ்சின் |
லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 1.5 லிட்டர் பெட்ரோல் |
அகலம் |
1775 மிமீ |
சக்தி |
105 PS |
உயரம் |
1700மிமீ |
முறுக்குவிசை (Torque) |
138 Nm |
சக்கர அச்சிடை நீளம் (Wheelbase) |
2740மிமீ |
விசைஊடிணைப்பு (Transmission) |
5-வேக M T/ 4- வேக AT |
வழக்கமான எர்டிகாவுடன் ஒப்பிடும்போது XL6 க்கு உயர்ரக வடிவமைப்பு பாணி கொடுக்கப்பட்டுள்ளதால், இது டொயோட்டாவுடன் பகிரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கிளான்ஸாவைப் போலவே, மிகச்சில மாற்றங்களைத் தவிர தோற்றம் அச்சு அசல் ஒரே மாதிரி இருக்கும், ஆனால் சுசுகி அடையாளக்குறிக்கு பதில் டொயோடாவின் தர அடையாளக்குறி இடம்பெறும்.


இது XL6 இன் இரண்டு மாறுபாடுகளின் அதே அம்ச பட்டியலையும் பெற வாய்ப்புள்ளது. எர்டிகாவின் Z மற்றும் Z+ மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு XL6 இரண்டு முழு வசதி மாறுபாடுகளில் கிடைக்கிறது. XL6 இன் சில முக்கிய அம்சங்கள் முன்புற LED விளக்குகள், LED டெயில் விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல், தோலாலான இருக்கை உறைகள் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே/ ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 7 அங்குல தொடுதிரை கேளிக்கை-தகவல் அமைப்பு


விலையைப் பொறுத்தவரையில், கிளான்ஸா மற்றும் பலேனோவைப் போலவே, டொயோட்டா தர அடையாளமிடப்பட்ட XL6 மாருதியை ஒத்த விலையைப் பெறும். மாருதி சுசுகி XL6 இன் முழு விலை பட்டியல் இங்கே:
வகை |
ஸீட்டா |
ஆல்பா |
MT |
ரூபாய். 9.80 லட்சம் |
ரூபாய்.10.36 லட்சம் |
AT |
ரூபாய். 10.90 லட்சம் |
ரூபாய். 11.46 லட்சம் |
மறுவடிவமைக்கப்பட்ட MPV 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க:மாருதி XL6 சாலை விலை