டாட்சன் ரெடி-கோ உளவுப்படத்தில் சிக்கியது: டாட்சன் பேட்ஜ் உடன் கூடிய ரெனால்ட் க்விட்!
published on நவ 04, 2015 07:39 pm by manish for டட்சன் ரெடி-கோ 2016-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
டாட்சன் ரெடி-கோவின் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பு ஒன்று, சென்னையில் உலா வந்த போது உளவுப்படத்தில் சிக்கியது. இந்த காரின் சோதனை வாகனம், இந்திய சாலைகளில் உளவுப்படத்தில் சிக்குவது இதுவே முதல் முறையாகும். ஆல்டோ 800-க்கு போட்டியாக நிசான் முயற்சியில் ஈடுபட்டது போல, 2014 ஆட்டோ எக்ஸ்போவில் ரெடி-கோ உலக அரங்கேற்றம் பெற்றது. இந்த சோதனை கார் முழுமையாக மூடுதிரையினால் மூடப்பட்டிருந்த போதும், ஒருவரால் அதன் டெயில்-லைட் கிளெஸ்டர்கள் மற்றும் ஆப்பு (விட்ஜ்) வடிவிலான பின்புற ஃபாசிக்கா ஆகியவற்றை தெளிவாக காண முடிகிறது. இதிலிருந்து அதன் அசல் தொழில்நுட்ப வடிவமைப்பை சார்ந்தே டாட்சன் செயல்பட்டுள்ளது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. குறைந்த விலை CMF-A பிளாட்பாமை அடிப்படையாக கொண்ட இந்த கார், சமீபத்தில் அறிமுகமான ரெனால்ட் க்விட்டின் அப்ளிகேஷனையும் பெற்றுள்ளது. இதனால் இரு கார்களிலும் ஒரே மாதிரியான பரிணாமங்களை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான விலை நிர்ணய அளவையும் பெறலாம். எடுத்துக்காட்டு ரூ.2.5-3.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இரு கார்களை குறித்த அனுமானங்களில் கூட, ஒரே மாதிரியான ஆற்றலகமாக 799cc 53.3bhp பெட்ரோல் என்ஜின் அம்சத்தைக் கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. மேலும் அதன் அறிமுகத்தை பொறுத்து, தரமான 5-ஸ்பீடு மேனுவல் உடன், இந்த காருக்கு ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கூட அளிக்கப்பட வாய்ப்புள்ளது. டாட்சன் ரெடி-கோவின் அறிமுகத்திற்கு முன், க்விட் காரில் ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தினால் மட்டுமே, இது சாத்தியமாக வாய்ப்புள்ளது.
டாட்சன் ரெடி-கோ மற்றும் ரெனால்ட் க்விட் ஆகிய இரண்டும், முரண்பாடான வடிவமைப்பு தத்துவங்களின் மூலம் தங்களை வேறுபடுத்தி காட்டிக் கொள்கின்றன. இதில் டாட்சன் ரெடி-கோ, ஒரு கூர்மையான தோற்றத்தை கொண்டு, ஒரிகாமி-இஸ்க்யூ வடிவமைப்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ரெனால்ட் க்விட்டில் ஒரு சுய-பிரகடனமான (செல்ப்-ப்ரோகிளைம்டு) SUV-யை சார்ந்து, அதன் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது. இந்த காரை அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
0 out of 0 found this helpful