உறுதியானது: மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் AMT சிறப்பம்சம் இணைக்கப்பட்டு அறிமுகமாகிறது.
published on அக்டோபர் 07, 2015 01:46 pm by manish for ரெனால்ட் டஸ்டர் 2016-2019
- 15 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
ஆட்டோகார் இந்தியா இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள டஸ்டர் கார்களின் உட்புறத்தை காட்டும் படங்களில் AMT கியர் லீவர் தென்படுகிறது. இதன் மூலம் இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கச்சிதமான SUV பிரிவு காரில் தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
கச்சிதமான SUV பிரிவில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த இந்த டஸ்டர் கார்கள் பல புதிய போட்டியாளர்கள் தொடர்ந்து களத்தில் நுழைந்து வரும் இவ்வேளையில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் பல சிறப்பம்சங்களை சேர்த்து புதிய டஸ்டர் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. ரெனால்டின் ஈஸி -R AMT தொழில்நுட்பத்தை வெளிவர உள்ள மேம்படுத்தப்பட்ட டஸ்டர் கார்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தொழில்நுட்பம் முதலில் 2015 ல் நடந்த ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் ரோமன் நாட்டில் அறிமுகமான டாசியா டஸ்டர் கார்களில் தான் காட்சிக்கு வைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அறிமுகமாக உள்ள இந்த புதுப் பொலிவூட்டப்பட்ட கச்சிதமான SUV பிரிவை சேர்ந்த டஸ்டர் வாகனங்கள் ஏற்கனவே தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதியுடன் அறிமுகமாகி விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் மற்ற SUV வாகனங்களான மஹிந்திரா ஸ்கார்பியோ , ஹயுண்டாய் க்ரேடா ஆகியவற்றுடன் போட்டியிடும்.
110PS சக்தியை வெளியிடக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களில் தான் இந்த AMT தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த AMT தொழில்நுட்ப இணைப்பினால் மைலேஜ் குறைவு ஏற்படாது என்று ரெனால்ட் கூறுகிறது. மேலும் AWD வேரியன்ட்களில் இந்த AMT தொழில்நுட்பம் இணைக்கப்படமாட்டாது என்றும் தெரிகிறது. தற்போது உள்ள டஸ்டர் வாகனங்களில் காணப்படும் அதே 6 - வேக கியர் அமைப்பின் அடிப்படையில் தான் இந்த AMT தொழில்நுட்பம் இணைக்கப்பட உள்ளது. மேனுவல் (கைகளால் இயக்கக்கூடிய) ட்ரேன்ஸ்மிஷன் அமைப்புடன் கூடிய வேரியான்ட்களுடன் இந்த புதிய தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதியுடன் கூடிய டஸ்டர் வாகனங்களும் விற்பனை செய்யப்படும். இந்த இரண்டிற்குமான விலை வித்தியாசம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய டஸ்டரில் நன்கு வித்தியாசத்தை உணரும் விதத்தில் செய்யப்பட்டுள்ள பல வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களை காண முடிகிறது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அல்லாய் சக்கரங்கள், புதிய முகப்பு விளக்கு க்ளஸ்டர் மற்றும் பம்பர்கள் போன்றவைகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். மேலும் உட்புறத்திலும் புதிய ஸ்டீரிங் வீல் மற்றும் முற்றிலும் புதிய வடிவிலான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் போன்றவைகள் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.
0 out of 0 found this helpful