• English
  • Login / Register

ஒப்பீடு: டாடா ஜிக்கா vs. செவ்ரோலெட் பீட் vs. ஹுண்டாய் i10 vs. மாருதி செலேரியோ

published on டிசம்பர் 07, 2015 01:51 pm by manish

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்திய வாகன சந்தையில் 10 வருடங்களாக மிகவும் பிரபலமாக இருந்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் இண்டிகாவின் தொழில்நுட்பத்தில் டாடா ஜிக்கா தயாரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்து, இத்தாலி, மற்றும் புனே ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாடாவின் டிசைன் ஸ்டுடியோக்கள், புதிய ஜிக்காவின் தோற்றத்தை முந்தய ஹாட்ச் பேக் போல இல்லாமல், முற்றிலும் வேறுபட்டதாக மாற்றியுள்ளன. டாடாவின் அதிநவீன DesignNext வடிவத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிக்காவின் உருவத்தில் மிகவும் முக்கியமான அமைப்பு, இந்த காரின் கம்பீரமான தோற்றமாகும். முன்புறத்தில், சற்றே நீண்டு புடைப்பான தோற்றத்தில் உள்ள முகப்பு, இந்த காருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.

கம்பீரமாக மட்டுமல்லாமல், இந்த காரின் தோற்றம் செதுக்கப்பட்ட சிற்பம் போல நேர்த்தியாகவும் எடுப்பாகவும் உள்ளது. இத்தகைய தோற்றத்திற்கு, டிசைன் நெக்ஸ்ட்டின் சிறப்பம்சங்களான டைமண்ட் DLO, ஹ்யுமானிட்டி லைன் மற்றும் ஸிலிங்ஷாட் லைன் போன்றவையே காரணங்கள் என்று சொல்லவேண்டும். இத்தகைய சிறப்புகளோடு, மேலும் பல அதிநவீன அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளதால், இதன் முக்கியமான போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு ஆராய நம்மைத் தூண்டுகிறது என்பதே உண்மை. நிச்சயமாக, மற்றெந்த கார்களை விடவும், மிகச் சிறந்த நவீன தொழில்நுட்பங்களையும், டிசைன்களையும் கொண்டு, இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தனது சிறப்பம்சங்களை சிறந்த முறையில் கையாண்டு, தனது போட்டியாளர்களை எந்த விதத்தில் எதிர்கொண்டு வெல்லப்போகிறது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
 
இஞ்ஜின் சிறப்பம்சங்கள்:

தற்போது, செவ்ரோலெட் பீட், ஹுண்டாய் i10 மற்றும் மாருதி செலேரியோ போன்ற கார்கள், டாடா ஜிக்காவின் சீரிய போட்டியாளர்களாக உள்ளன. i10 தவிர மற்ற அனைத்து கார்களும், பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு வேறு வகைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெட்ரோல் இஞ்ஜினைப் பொறுத்தவரை, ஜிக்காவில் பொருத்தப்பட்டுள்ள ரெவோற்றோன் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இஞ்ஜின் ஏனைய இஞ்ஜின்களை விட மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஏனெனில், இது 84 bhp என்ற அளவில் சக்தி மற்றும் 116 Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லதாக இருக்கிறது. விரைவில் வெளிவரவுள்ள இந்த சேடானுக்கு அடுத்ததாக, செவ்ரோலெட் பீட் 69 bhp என்ற அளவில் சக்தியையும், 107 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 68 bhp என்ற அளவில் சக்தியையும், 99 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்து, மூன்றாவது இடத்தை, ஹுண்டாய்யின் i10 பிடித்துக் கொள்கிறது. இறுதியாக, செலேரியோவின் 1.0 லிட்டர் இஞ்ஜின், 67 bhp என்ற அளவில் சக்தியையும், 89.4 Nm என்ற அளவில் டார்க்கையும், உற்பத்தி செய்கிறது.

டீசல் வேரியண்ட்களிலும், இதே விதமான கதையே தொடர்கிறது, ஆனால் ஹுண்டாய் i10 மட்டும் களத்தில் இருந்து விலகிக் கொள்ளும். அனைத்து கார்களின் இஞ்ஜின்களும் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், செலேரியோவின் பெட்ரோல் வேரியண்ட் மட்டும் விதிவிலக்காக, AMT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு வருகின்றது. ஜிக்காவில் ஆட்டோமேடிக் யூனிட் பொருத்தப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தின் போது இல்லாவிட்டாலும், பின்னாளில் இது வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்:

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள், EBD –யுடன் வரும் ABS அமைப்பு மற்றும் கார்னர் சேஃப்டி கண்ட்ரோல் ஆகிய அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளதால், டாடா ஜிக்காவின் உயர்தர மாடல்கள் இதிலும் முதல் இடத்தைப் பிடிக்கிறன. செவ்ரோலெட் பீட் மாடலின் உயர்தர வேரியண்ட்களில் ABS மற்றும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. செலேரியோவிலும் இதே போன்ற பாதுகாப்பு சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், மாருதி நிறுவனம் இவற்றை ஆப்ஷனாகவே தருகின்றது. எனினும், டாப் வேரியண்ட்களில் மட்டுமல்லாது, செலேரியோவின் அனைத்து மாடல்களிலும் இந்த பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்திக் கொள்ளலாம். இறுதியாக, ஹுண்டாய் i10 காரில், ஏர் பேக்குகளும் இல்லை ABS அமைப்பும் இல்லை, என்பதையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience