செவ்ரோலேட் ட்ரையல் பிளேஸர்: வரும் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்
published on அக்டோபர் 12, 2015 07:01 pm by அபிஜித் for செவ்ரோலேட் ட்ரையல்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
தனது SUV-யான ட்ரையல் பிளேஸரை வரும் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய செவ்ரோலேட் இந்தியா எல்லாவற்றையும் தயார் செய்துள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டால், இதன் பிரிவிலேயே மிகப்பெரிய SUV-யாக மாறி, இப்பிரிவின் முன்னணி கார்களான டொயோட்டா ஃபார்ச்யூனர், மிட்சுபிஷி பஜேரா ஸ்போர்ட் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளிவிடும். மலேசியாவில் இருந்து CBU வழியாக நம் நாட்டிற்கு வரும் இந்த வாகனம், ஒரே வகையில் மட்டுமே கிடைக்கும்.
படித்து பாருங்கள்: 2017 கச்சிதமான பீட் சேடனை செவ்ரோலேட் உறுதி செய்தது
இந்த காரின் முன்புறத்தை பார்க்கும் போது, செவ்ரோலேட் குடும்பத்தின் கிரில்லை சூழ்ந்து செங்கல் வடிவிலான மற்றும் உள்நோக்கி அமர்ந்த அமைப்பை கொண்ட ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், நேர்த்தியான ஃபேக்லெம்ப் மூடப்பட்ட நிலையிலும் இருந்து, வெளிப்புற அமைப்பு வலுவானதாக உள்ளது. பக்கவாட்டு பகுதியில், வீல் ஆர்ச்சுகள், பெரிய ஜன்னல்கள் மற்றும் பின்புற விண்டு ஸ்கிரீனை சூழ்ந்து சென்று முடிவுறும் முறுக்கிய நிலையில் காணப்படும் C-பில்லர் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது. முழு காரை ஒத்தாற்போல பின்புறமும் பெட்டி வடிவத்திலேயே அமைந்து, டெயில்லெம்ப் கிளெஸ்டரை சுற்றிலும் LED-யும், கிரோம் கார்னிஸ் மற்றும் SUV-யின் அளவிற்கேற்ப நேர்த்தியான கீழ்புற பம்பர் காணப்படுகிறது.
இதன் பரிணாம அளவுகளை பொறுத்த வரை, 4878x1902x1847 என்ற அளவில் முறையே நீளம்-அகலம்-உயரம் ஆகியவை அமைந்து, இந்த பிரிவிலேயே இதற்கு பெரிய தோற்றத்தை அளித்துள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 2845 mm நீளத்தையும், மொத்த எடையாக 2068 kg எடையையும் கொண்டு, 231 mm கிரவுண்டு கிளியரன்ஸ் அளித்து, மோசமாக சாலைகள் மற்றும் குண்டும் குழிகளையும் சாதாரணமாக கடந்து செல்கின்றது.
மேலும் படியுங்கள்: 2016 கேமரோவின் செயல்திறன் விபரங்களை செவ்ரோலேட் வெளியிட்டது
இந்த காருக்கு பெரிய பரிணாமம் இருப்பதால், 3வது வரிசையில் அமைந்த சீட்கள் உட்பட, ஒவ்வொரு பயணிக்கும் போதுமான அளவு இடம் கிடைக்கும் வகையில் தாராளமான உட்புறத்தை பெற்றுள்ளது.
காரில் உள்ள மோட்டாரை குறித்து பார்க்கும் போது, இதில் அமெரிக்காவின் புத்தம் புதிய 2.8 லிட்டர் டுராமேக்ஸ் பொருத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்த என்ஜின் மூலம் 200 bhp ஆற்றலையும், அதிகபட்சமாக 500Nm முடுக்குவிசையையும் பெறலாம். சாலை நெரிச்சலில் ஸ்தம்பித்து போய் காணப்படும் சூழ்நிலையிலும், இதே சிறந்த பிக்-அப்பை பெற முடியும். இந்த என்ஜினின் ஆற்றல், ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மூலம் பின்புற சக்கரங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் ஒரே ஒரு வகை மட்டுமே கிடைக்கப் பெறும் என்பதால், மேற்கொண்டு 4X4 அல்லது மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஆகியவை இருக்காது.
போட்டித் தன்மையை அறியுங்கள்: டொயோட்டா ஃபார்ச்யூனர் | மிட்சுபிஷி பஜேரா