செவேர்லே ட்ரெயில்ப்ளேசர் : விரிவான பகைப்பட தொகுப்பு
செவ்ரோலேட் ட்ரையல் க்காக அக்டோபர் 26, 2015 03:47 pm அன்று nabeel ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
2020 ஆம் ஆண்டுக்குள் 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதாக உறுதி அளித்துள்ள செவேர்லே நிறுவனம் , அந்த வரிசையில் முதலாவதாக ட்ரெயில்ப்ளேசர் ப்ரீமியம் SUV வாகனங்களை கடந்த வார துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. தாய்லாந்து நாட்டில் இருந்து CBU வழியில் இறக்குமதி
செய்யப்பட்டு 26.4 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் தற்போது உள்ள ப்ரீமியம் SUV பிரிவு வாகனங்களிலேயே அதிகபட்சமாக 3600 rpm ல் 200PS சக்தியையும் அசாத்தியமான 500nm டார்கை 2000 rpm ல் உற்பத்தி செய்யவல்ல அதி சக்தி வாய்ந்த 2.8 லிட்டர் 4 - சிலிண்டர் ட்யூராமேக்ஸ் இஞ்சின் பொருத்தப்பட்டு, 6 - வேக தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு வேரியன்ட் மட்டும் தான், 4X2 ( இஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு மட்டும் கடத்தப்பட்டு வாகனத்தை சக்தியூட்டும் முறை) அமைப்புடன் அறிமுகமாகியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 231 மி.மீ அளவுக்கு கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் ESC (மின்னணு ஸ்டெபிலிடி கண்ட்ரோல்) அம்சமும் இணைக்கப் பெற்றுள்ளது. HSA ( ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ) மற்றும் HDC ( ஹில் டிசென்ட் அசிஸ்ட் ) அம்சங்கள் எந்த விதமான சவால் நிறைந்த பாதையிலும் இந்த வாகனத்தை எளிதாக பயணிக்கச் செய்கிறது. இவைகளைத் தவிர பாதுகாப்பு அம்சங்களான முன்புற இரட்டை காற்று பைகள் (ஏயர் பேக்), ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் ABS+EBD அம்சங்கள் பயணிகளின் முழுப்பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
மேலும் படியுங்கள் : செவேர்லே ட்ரெயில்ப்ளேசர்