உளவுப் படத்தில் சிக்கிய புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டஸ்டரை பாருங்கள்!
manish ஆல் செப் 21, 2015 04:26 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை தெருக்களில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது, உளவுப்படங்களில் சிக்கிய ரெனால்ட் டஸ்டரின் புதுப்பிக்கப்பட்ட மாடலின் படங்கள், ஆன்லைனில் வெளியாகி உள்ளது. புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் ஓடும் நிலையில் கேமராவில் சிக்கினாலும், இந்த உளவுப் படங்களில் அதிகளவில் மூடி மறைக்கப்படாமல் காணப்படுகிறது. பார்வைக்கு டைமண்ட்-கட் போன்ற தோற்றம் அளிக்கும் புதிய அலாய் ரிம்கள் பொருத்தப்பட்ட இந்த கார், சென்னை GST சாலையில் சென்ற போது, உளவுப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த உளவுப் படங்களை பார்த்தால், அழகியல் மேம்பாட்டிற்காக செய்யப்பட்ட மாற்றங்களில், மல்டி-ஸ்லாட் கிரோம் கிரில் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ரெனால்ட்டின் டைமண்ட் லோகோவை சூழ்ந்த வண்ணம் ஒரு சிங்கிள் ஸ்லாட் டிசைன் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஹெட்லெம்ப்களில் தெரியும் ஒரு புதிய மேம்பட்ட கிளெஸ்டரை பார்த்தால், தற்போது பிரேசிலில் உலா வரும் இதன் மாடலை நினைவுப்படுத்துகிறது. முன்பக்க கிளெஸ்டர்களின் மேம்பாடு, பின்பக்கத்தோடு ஒத்துப் போகிறது. 2016 டஸ்டரின் டெயில்லைட்களிலும் மேம்பாடு தெரிகிறது. உட்புற அமைப்பில் எந்த சாதனத்தை திணிக்கவும், ரெனால்ட் நிறுவனம் யோசிக்காது என்பதற்கு ரெனால்ட் க்விட் சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவே 7 இன்ச் மீடியாNAV இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, குரூஸ் கன்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் டெலிஃபோனி ஆகிய அம்சங்கள் புதிய டஸ்டரில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய காருக்கான ஆற்றல் அளிக்கும் பணியை, வழக்கம் போல 1.5-லிட்டர் dCi என்ஜின் மேற்கொள்ளலாம். அது 85 PS மற்றும் 110 PS என்ற இரு ஆற்றல் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயலாற்றும். இந்த புதிய மாடலில் 6-ஸ்பீடு இரட்டை-கிளெச் EDC ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை, ரெனால்ட் நிறுவனம் அளிக்கும் என்று ஒருசில தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. மேலும் இதன் உயர்தர மாடலில், ஒரு தனித்து இயங்கும் சஸ்பென்ஸன் AWD அமைப்பு காணப்படும்.