சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது

rohit ஆல் பிப்ரவரி 10, 2020 02:43 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
48 Views

டாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது

  • டாடா ஹாரியரை இப்போது ரூபாய் 30,000 முன்தொகையில் முன்பதிவு செய்யலாம்.

  • அடிப்படை-சிறப்பம்ச எக்ஸ்இ மற்றும் நடுத்தரமான-சிறப்பம்ச எக்ஸ்டி தவிர அனைத்து வகைகளிலும் தானியங்கி பற்சக்கர பெட்டி கிடைக்கிறது.

  • இது வெளிப்புற காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, தானியங்கி முறையில் மாறக்கூடிய ஐஆர்விஎம், இஎஸ்பி மற்றும் மின்சார அமைவு கொண்ட ஓட்டுநர் இருக்கை போன்ற புதிய அம்சங்களைப் பெறுகிறது.

  • 2.0 லிட்டர் டீசல் இயந்திரம் இப்போது பிஎஸ் 6 இணக்கமாக உள்ளது மற்றும் 170 பிஎஸ்ஸில் 30 பிஎஸ் அதிகமாக உற்பத்தி செய்கிறது.

  • புதிய எக்ஸ்இசட் + கைமுறை வகை விலை தற்போதைய உயர்-தனிச்சிறப்பு எக்ஸ்இசட்டை காட்டிலும் ரூபாய் 1.5 லட்சம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  • தானியங்கி வகைகள் அவற்றின் கைமுறை வகைகளைக் காட்டிலும் ரூபாய் 1 லட்சம் அதிக விலை ஆகும்.

பல முன் காட்சிகள் மற்றும் அறிமுகங்களுக்குப் பின்னர், டாடா இறுதியாக பிஎஸ் 6-இணக்கமான ஹாரியர் மற்றும் அதன் தானியங்கி வகைக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. அருகிலுள்ள டாடா விற்பனை நிலையங்களைப் பார்வையிடுவதன் வாயிலாகவோ அல்லது டாடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாகவோ நீங்கள் எஸ்யூவியை ரூபாய் 30,000க்கு முன்பதிவு செய்யலாம்.

ஹாரியர் புதிய உயர்-சிறப்பம்ச எக்ஸ்‌இசட் + / எக்ஸ்இசட்ஏ + வகையில் வெளிப்புற காட்சிகளை காணக்கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, 6-வழிகளில் மாற்றியமைக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஓட்டுநர் இருக்கை, பின்புற பார்க்கக் கூடிய கண்ணாடியில் (ஐ.ஆர்.வி.எம்) தானியங்கி-மாற்றம், மற்றும் இரட்டை-தொனி உலோக சக்கரங்கள் (17-அலகுகள்). மேலும் என்னவெனில், இது அனைத்து வகைகளிலும் தரமான இ‌எஸ்‌பி மற்றும் கருப்பு நிற மேற்கூரையுடன் புதிய சிவப்பு வெளிப்புற வண்ண விருப்பம் போன்ற புதிய சிறப்பம்சங்களுடன் வருகிறது.

இது பிஎஸ் 6-இணக்கமாக இருக்கும் அதே 2.0 லிட்டர் டீசல் இயந்திரம் மூலம் தொடர்ந்து இயக்கப்படும். அதே சமயத்தில் முறுக்குதிறன் 350என்‌எம் இல் இருக்கும் போது தற்போதைய 140பி‌எஸ் ஐ காட்டிலும் ஹாரியர் இப்போது 170பி‌எஸ் ஆற்றலை உருவாக்கும். இதன் மூலம், ஹாரியர் ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற எஸ்யூவிகளுடன் இணையாக உள்ளது, இது அதே ஃபியட் இயந்திரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. பிஎஸ் 6-இணக்கமான 2.0-லிட்டர் டீசல் இயந்திரம் இரண்டு செலுத்துதல் விருப்பங்களுடன் வழங்கப்படும் - 6-வேகக் கைமுறை பற்சக்கர பெட்டி அல்லது ஹூண்டாயிலிருந்து பெறப்பட்ட புதிய 6-வேக முறுக்கு மாற்றியுடன் அளிக்கிறது. டாடா எக்ஸ்எம்ஏ, எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ ஆகிய மூன்று வகைகளில் ஹாரியர் தானியங்கியை வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் டாடா எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தும் உயர்-சிறப்பம்ச எக்ஸ்இசட் வகையுடன் ஒப்பிடும்போது புதிய விலை-உயர்வு எக்ஸ்இசட் + கைமுறைக்கானது ரூபாய் 1.5 லட்சம் வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியரில் கைமுறை மட்டும் தற்போது ரூபாய் 13.43 லட்சத்திலிருந்து ரூபாய் 17.3 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளது. எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் க்யா செல்டோஸின் உயர்-சிறப்பம்ச வகைகளுக்கு எதிராக 2020 ஹாரியர் தொடர்ந்து இருக்கும்.

மேலும் படிக்க: ஹாரியர் டீசல்

Share via

Write your Comment on Tata ஹெரியர் 2019-2023

S
sanjay garg
May 22, 2020, 9:57:09 PM

When it can be delivered mk

D
dr shaji issac
Feb 5, 2020, 1:22:40 PM

Do we have petrol version?

மேலும் ஆராயுங்கள் on டாடா ஹெரியர் 2019-2023

டாடா ஹெரியர்

4.6249 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
டீசல்16.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6 - 10.51 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.67.65 - 73.24 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.25 - 13.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை