• English
  • Login / Register

இரண்டாம் தலைமுறை Lexus LM MPV -க்கான முன்பதிவு தொடக்கம்

published on ஆகஸ்ட் 28, 2023 04:38 pm by rohit for லேக்சஸ் எல்எம்

  • 34 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய லெக்ஸஸ் LM, புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, ஆடம்பரத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

2023 Lexus LM

  • லெக்ஸஸ் இரண்டாவது ஜென் LM MPV -யை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

  • 4- மற்றும் 7-சீட்கள் கொண்டதாக இது கிடைக்கும்.

  • எக்ஸ்டீரியரில் ஒரு பெரிய ஸ்பிண்டில் கிரில் மற்றும் டாப்பர் LED லைட்டிங் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

  • உள்ளே, இது 48-இன்ச் டிவி, 23-ஸ்பீக்கர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹீட்டட் ஓட்டோமான் சீட்களை கொண்டுள்ளது.

  • இந்தியா-ஸ்பெக் மாடலின் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

  • உலகளவில் இந்த காரானது 2.4-லிட்டர் டர்போ மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் 2.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் யூனிட் என இரண்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது:

பிரீமியம் மற்றும் சொகுசு MPV ஸ்பேஸ் விரைவில் மற்றொரு போட்டியாளரை பெற உள்ளது புதிய லெக்சஸ் LM. அதன் விலைகளுக்காக நாம் காத்திருக்கும் வேளையில், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் இப்போது MPV -க்கான முன்பதிவை திறந்துள்ளது. டொயோட்டா வெல்ஃபயரின் அடிப்படையிலான இரண்டாம் தலைமுறை லெக்சஸ் LM ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது .

வெளியில் உள்ள மாற்றங்கள்

அதன் முகப்பு  பெரிய முன்புறக் கண்ணாடி மற்றும் முன்புற முகப்பின் கீழ் லிப் வரை நீண்டிருக்கும் மிகப்பெரிய ஸ்பிண்டில் கிரில் மூலம் வேறுபடுகிறது. லெக்ஸஸ் ட்ரை-பீஸ் LED -யைக் கொண்ட டாப்பர் LED ஹெட்லைட்களை வழங்கியுள்ளது.

2023 Lexus LM side

பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, ​​நீண்ட வீல்பேஸ் காரணமாக MPV -யின் பெரிய ஃபுட்பிரிண்டைத் தான்  நீங்கள் முதலில் பார்க்க முடியும். தோற்றத்தின் சிறப்பம்சங்களில் பல-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் எலக்ட்ரானிக்கலி  ஸ்லைடிங் பின்புற கதவுகள் ஆகியவை அடங்கும்.

உயரமான பின்புற விண்ட்ஸ்கிரீனுடன் இணைக்கப்பட்ட மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்கள் மிகவும் தனித்துவமான வடிவமைப்பு அம்சத்துடன் பின்புறம் நேர்த்தியானதாக இருக்கும்.

ஆடம்பரம் நிறைந்த கேபின்

2023 Lexus LM cabin

லெக்ஸஸாக இருப்பதால், க்ரீம் நிற கேபின் தீம் மற்றும் டிரைவரின் டிஸ்பிளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான இரண்டு பெரிய ஸ்கிரீன்களைக் கொண்ட சிறிய டேஷ்போர்டு லே அவுட்டுக்கு நன்றி. இரண்டாவது ஆடியோ மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கப்பட்ட டயல்களையும் கொண்டுள்ளது. MPV ஆனது உலகளவில் பல்வேறு இருக்கை ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது - 4-, 6- மற்றும் 7-இருக்கை லேஅவுட்டுகளில் - இந்திய சந்தையில் 4- மற்றும் 6-இருக்கை கார் வேரியன்ட்கள் மட்டும் வெளியாக வாய்ப்புள்ளது.

2023 Lexus LM 48-inch rear TV

லெக்ஸஸ் LM காரில் உள்ள சிறப்பான விஷயம், ஒரு MPV -யின் அனைத்து அம்சங்கள் மற்றும் விவரங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது வரிசையாகும். இதில் பயணிப்பவர்களுக்கு பெரிய சாய்வான ஒட்டோமான் இருக்கைகள், 23-ஸ்பீக்கர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், தலையணை-பாணியில் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் கேபினின் முன்புறம் மற்றும் பின் பகுதிகளுக்கு இடையே உள்ள இடத்தில் பொருத்தப்பட்ட ஒரு பெரிய 48-இன்ச் டிவி ஆகியவை வழங்கப்படுகின்றன. லெக்சஸ் இதை 64-கலர் ஆம்பியன்ட் லைட்கள், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் ஆக்டிவ் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்குகிறது.

2023 Lexus LM ottoman seats

இந்த புதிய தலைமுறை LM -ல் சில லெக்சஸின் -முதல் ஹீட்டட் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஓட்டோமான்கள், பவர்டு கதவுகளுக்கான புதிய கைப்பிடிகள் மற்றும் ரூஃபில்  இணைக்கப்பட்டுள்ள  பின்புற கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: குளோபல் NCAP  இந்தியாவுக்கான தனிப்பட்ட கார்களுக்கான கிராஷ் டெஸ்டிங்கின் பொறுப்புகளை   பாரத் NCAP -இடம் 2024 ஆம் ஆண்டு முதல் ஒப்படைக்க உள்ளது

குறைவான மாசு உமிழ்வை கொண்ட பவர்டிரெய்ன்

உலகளவில், லெக்ஸஸ் 2.4-லிட்டர் டர்போ மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் 2.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆகிய இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன்  LM வேரியன்டை லெக்சஸ் வழங்குகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுடன் எந்த பவர்டிரெய்ன் வழங்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும், ஆனால் இரண்டாவது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

விலை என்னவாக இருக்கும்?

2023 Lexus LM rear

1.20 கோடியில் இருந்து ரூ.1.30 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ள வெல்ஃபயரை விட இரண்டாம் தலைமுறை  LM விலையை கூடுதலாக லெக்சஸ் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் ஒரே நேரடி போட்டியாளர் டொயோட்டா வெல்ஃபயர் ஆகும், இது BMW X7 மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் GLS போன்ற 3-வரிசை சொகுசு எஸ்யூவி -களுக்கு மாற்றாகவும் இருக்கும். லெக்ஸஸ் LMக்கு போட்டியாக இருக்கும் மெர்சிடீஸ் பென்ஸ் V-கிளாஸ் அதன் சமீபத்திய அவதாரத்தில் விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: பாரத் நியு கார் அசெஸ்மென்ட் புரோகிராம் இறுதியாக வந்துவிட்டது!

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Lexus எல்எம்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience