‘அதிக விற்பனையாகும் SUV’ பட்டத்தை, 2 மாதங்களில் பொலேரோ மீண்டும் கைப்பற்றியது
published on நவ 05, 2015 02:04 pm by sumit for மஹிந்திரா போலிரோ 2011-2019
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் SUV என்ற பட்டத்தை பெற்று பிரபலமடைந்த சமீபகால அறிமுகமான ஹூண்டாயின் க்ரேடாவை, பின்னுக்கு தள்ளிய மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ மீண்டும் அந்த பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பட்டத்தை பெற்றிருந்த பொலேரோவை, தனது ஸ்டைலான அமைப்பு மற்றும் சந்தையில் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவற்றை காட்டிய க்ரேடா, அதை அங்கிருந்து சரிவடைய செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 7,225 யூனிட்களை விற்பனை செய்த க்ரேடா உடன் ஒப்பிட்டால், பொலேரோவின் 7,754 யூனிட்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. உள்ளூரில் வளர்ச்சியடைந்த வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா, SUV சந்தையில் நன்கு அனுபவம் உள்ளதால், அதிக விற்பனையாகும் முதல் 10 SUV-களின் பட்டியலில், அந்நிறுவனத்தின் 4 தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த பண்டிகை சீசனை நன்கு பயன்படுத்தியுள்ள இந்நிறுவனம், செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால், அக்டோபர் மாதத்தில் 29% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: ஹூண்டாய் இந்தியா எப்போதும் இல்லாத அதிகபட்ச விற்பனையை அக்டோபரில் பதிவு செய்துள்ளது: க்ரேடா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாகி மற்றும் தலைவரான பிரவின் ஷா கூறுகையில், புதிய வாகனங்களின் அறிமுகம் மற்றும் எங்கள் நிறுவனத்தின் SUV பிராண்டுகளின் சிறந்த செயல்பாடு ஆகியவையே, இந்த 20% வளர்ச்சிக்கான முதன்மையான காரணமாகும். எரிபொருள் விலை சீராக தொடர்வது மற்றும் வட்டி விகிதங்களின் சரிவு ஆகியவை மூலம் தொழில்துறையில் தொடர்ந்து சாதகமான முன்னேற்றம் இருக்கும், என்றார்.
மற்றொருபுறம், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் மூத்த துணை தலைவர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், தகுந்த தயாரிப்பு பணிகளின் மூலம் கார்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்புவதாக கூறினார்.
தொடர்புடைய செய்திகள்:
0 out of 0 found this helpful