இந்தியாவில் வெளியானது BMW X7 சிக்னேச்சர் எடிஷன்
BMW X7 -ன் லிமிடெட் பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
எதிர்வரும் 2024 பண்டிகை காலத்திற்காக BMW உட்பட பல கார் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சில மாடல்களின் சிறப்பு எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இப்போது ஜெர்மன் தயாரிப்பில் இருந்து மற்றொரு மாடல் அதாவது BMW X7 சிக்னேச்சர் பதிப்பின் வடிவத்தில் லிமிடெட் இட்டரேஷனை பெற்றுள்ளது. இது ஒரு xDrive40i M ஸ்போர்ட் வேரியன்ட்டில் ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் கிடைக்கிறது. இது அடிப்படையிலான வேரியன்ட்டை விட ரூ. 3 லட்சம் கூடுதல் விலையில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பார்ப்போம்.
வெளியில் புதிதாக என்ன இருக்கிறது?
இது லிமிடெட் பதிப்பாக இருப்பதால் பெரும்பாலான மாற்றங்கள் அனைத்தும் காஸ்மெட்டிக் ஆக மட்டுமே செய்யப்பட்டுள்ளன. X7 சிக்னேச்சர் பதிப்பு கிரில்லில் குரோம் பார்கள் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி கிளாஸ் கட் கிரிஸ்டல்களுடன் அப்டேட்டட் LED ஹெட்லைட்களுடன் வருகிறது. இது சாடின் ஃபினிஷ் கொண்ட அலுமினியம் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் சாடின் ஃபினிஷ் கொண்ட அலுமினியம் விண்ட்டோ பெல்ட்லைன் ஆகியவற்றைப் பெறுகிறது. LED டெயில் லைட்ஸ், உள்ளே அப்டேட்டட் விஷயங்களை கொண்டுள்ளது மற்றும் அவற்றை இணைக்கும் குரோம் ஸ்ட்ரிப்பில் ஸ்மோக்டு கிளாஸ் எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
BMW X7 சிக்னேச்சர் பதிப்பு ஆனது டான்சானைட் ப்ளூ மற்றும் டிராவிட் கிரே என 2 பெயிண்ட் ஸ்கீம் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:
கேபினுக்கான அப்டேட்கள்
BMW அதன் கேபினிலும் ஒரு சில மாற்றங்களைக் கொடுத்துள்ளது. இதில் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான லெதர் சரவுண்ட், அல்காண்டரா குஷன்கள் மற்றும் கிரிஸ்டல் டோர் பின்கள் ஆகியவை அடங்கும். கேபின் வொயிட் மற்றும் கிரே கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு ஆம்பியன்ட் ஏர் பேக்கேஜ் (ஏர் ஃபியூரிபையர்) உடன் வருகிறது.
மேலும் பார்க்க: இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label
காரிலுள்ள உபகரணங்கள்
X7 சிக்னேச்சர் பதிப்பில் 14-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கனெக்டட் ஸ்கிரீன் செட்டப் (12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்) உள்ளது. இது 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜியை பெறுகிறது.
மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மூலம் ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் டிரெவுஸினெஸ் டிடெக்ஷன் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது.
BMW X7 இன்ஜின் விவரங்கள்
எஸ்யூவி -யின் லிமிடெட் பதிப்பில் எந்த இன்ஜினில் மாற்றமும் இல்லை. இது X7 இன் 3-லிட்டர் ட்வின்-டர்போ, இன்லைன் 6 பெட்ரோல் இன்ஜினுடன் (386 PS/520 Nm) தொடர்கிறது. 4 சக்கரங்களுக்கும் பவரை கொடுக்கும் அனுப்பும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த கார் வருகிறது
போட்டியாளர்கள்
BMW X7 சிக்னேச்சர் எடிஷன் ஆனது ஸ்டாண்டர்டை போலவே போட்டியாளர்களை கொண்டுள்ளது. இதில் அடங்கும் ஆடி Q7, மெர்சிடிஸ்-பென்ஸ் GLS மற்றும் வோல்வோ XC90 உள்ளன.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: BMW X7 ஆட்டோமெட்டிக்
rohit
- 131 பார்வைகள்