பிஎம்டபுள்யூ X6M மற்றும் X5M கார்கள் அக்டோபர் 15 ல் அறிமுகமாகிறது.

பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 க்கு published on அக்டோபர் 07, 2015 12:02 pm by அபிஜித்

  • 7 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :  கடந்த  ஜூலை மாதம் BMW  நிறுவனத்தின்  பெர்பார்மன்ஸ் கார்களான X6M  மற்றும் X5M  கார்களின் ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்கி இருந்தோம்.  இப்போது இந்த இரு கார்களையும் அக்டோபர்  15 அன்று அறிமுகப்படுத்த BMW நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.  இரண்டு கார்களுமே  ரூ. 1.5  கோடிக்கும கூடுதலான விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.  மேலும் இந்த 'பெர்பார்மன்ஸ்' வகை கார்கள் BMW நிறுவனத்தின் மதிப்பை  -வாடிக்கையாளர் மற்றும் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பன்மடங்கு உயர்த்தும் என்று BMW நிறுவனம் நம்புகிறது. ஆடி AS7, மெர்சிடீஸ் S63  AMG கூபே,  ஆடி RS6 அவான்ட் என்று இன்னும் பல பெர்பார்மன்ஸ் கார்களை BMW நிறுவனத்திற்கு போட்டியாக மற்ற இரண்டு ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பாளர்களான ஆடி மற்றும் பென்ஸ் நிறுவனத்தினர் களத்தில் இறக்கியுள்ளனர். 

 பிம்மர் பற்றி பேசுகையில்,   அறிமுகமாக உள்ள இந்த இரண்டு கார்களும் 575  PS சக்தி மற்றும்  அசாத்தியமான 750nm அளவிலான டார்க் ஆகியவைகளை வெளியிடக்கூடிய சக்திவாய்ந்த  4.4 லிட்டர் இரட்டை டர்போ V8   மோட்டார் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.  BMW Xட்ரைவ் AWD இணைக்கப்பட்ட பேடல் ஷிப்டர்ஸ் உடன் கூடிய 8 - வேக தானியங்கி கியர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தைப் பொறுத்தவரை லேசான மாறன்களே செய்யப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் முன் மற்றும் பின்புற பம்பர்கள் வெவ்வேறு விதமான வடிவமைப்பைப் பெற்றுள்ளன.  பெரிய அல்லாய் சக்கரங்கள் , இரட்டை - குவாட் எக்ஸ்ஹாஸ்ட் டிப்ஸ் மற்றும் முழுக்க M சின்னம் பொருதப்பட்டுள்ளதை காண முடிகிறது.

அறிமுகமான பின் இந்த இரண்டு கார்களுமே Mercedes-Benz G63 AMG மற்றும்  Porsche Cayenne Turbo கார்களுடன் போட்டியிடும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019

Read Full News

trendingஇவிடே எஸ்யூவி

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience