X6M மற்றும் X5M கார்களை BMW இந்தியா முறையே ரூ. 1.60 கோடி மற்றும் ரூ. 1.55 கோடி என்ற விலையுடன் இன்று அறிமுகம் செய்தது.
published on அக்டோபர் 15, 2015 05:04 pm by cardekho for பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
BMW இந்தியா நிறுவனம், தனது X6M மற்றும் X5M ஆகிய கார்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இவ்விரு உயர்-செயல்திறன் கொண்ட SUV-களுக்கும், ரூ.1.5 கோடிக்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கார் ஆர்வலர்கள் மற்றும் வாங்குவோர் இடையே, BMW-யின் மீதான அந்தஸ்தை உயர்த்துவதே நோக்கமாகும். முன்னதாக, M3 சேடன், M4 கூபே, M6 கிரான் கூபே மற்றும் M5 சேடன் ஆகியவை உள்ளிட்ட பல செயல்திறன் மிகுந்த கார்களை இந்த தயாரிப்பாளர் அளித்துள்ளார்.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், இவ்விரு கார்களிலும் ஒரே மாதிரியான 4.4-லிட்டர் ட்வின் டர்போ V8-யை பெற்று, 575 PS ஆற்றலையும், அதிகபட்சமாக 750 Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. மேலும் BMW நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே, இது தான் மிகவும் சக்தி வாய்ந்த மோட்டார் ஆகும். மேற்கூறிய ஆற்றல் கூடம், பெடல் ஷிஃப்ட்டர்களை கொண்ட ஒரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மூலம் செயல்படும். மேலும், BMW Xடிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உடன் இணைந்து கியர்பாக்ஸ் செயலாற்றுவதால், ஒரு ஒப்பிடக்கூடிய அளவிலான பிடிப்பை (கிரிப்) அளிக்கிறது.
இவ்விரு கார்களின் வெளிப்புற அமைப்புகளிலும் காணப்படும் ஒழுங்கான மற்றும் நுட்பமான கவர்ந்திழுக்கும் தன்மைகளின் மூலம், தரமான X6 மற்றும் X5 ஆகிய கார்களில் இருந்து இவைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது. இடைவெளி கொண்ட முன்புற தாழ்வான பம்பர்கள், பெரிய வீல்கள் மற்றும் கலைநயத்தோடு கூடிய பின்புற பம்பரில் காணப்படும் ட்வின்-க்வாட் எக்ஸ்சாஸ்ட் போப்பிங் ஆகியவை இதில் உட்படும்.
அதேபோல, உட்புற அமைப்பில் ஒரு ஸ்போர்டி செட்ஆப், ஒரு ஸ்போர்டியரான மெத்தை, விரிப்புகள், கார்பன் ஃபைபர் டிரிம்கள் மற்றும் M பேட்ஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதை தவிர, உட்புற அமைப்பியல் பெரும்பாலும் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்களை குறித்து பார்க்கும் போது, மெர்சிடிஸின் G63 AMG மற்றும் போர்ஸ் கெய்ன் டர்போ ஆகிய கார்களுடன், X6M மற்றும் X5M போட்டியிட உள்ளது.
செயல்திறன் மிகுந்த கார்களுக்கான போட்டியில் எந்த பெரிய ஜெர்மன் தயாரிப்பும் பின்னடைவை அடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் தங்களின் சிறப்பான கார்களை, மிதமான வேகத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இவையெல்லாம், இந்திய கார் ஆர்வலர்களுக்கான மகிழ்ச்சியை அதிகரிப்பதாக உள்ளது. ஆடி நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட RS5, RS6 அவண்ட், RS7, TT மற்றும் R8 ஆகியவையும், மெர்சிடிஸ் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட AMG வரிசையும் நம்மை மலைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் BMW: புதிய BMW M2 கூபே, 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பாய்கிறது
மற்றொரு பெரிய ஜெர்மன் அறிமுகம்: மெர்சிடிஸ்-பென்ஸ் GLE SUV, ரூ.58.9 லட்சத்தில் அறிமுகம்