BMW X1, M2, 7 சீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன
published on டிசம்பர் 18, 2015 04:17 pm by konark for பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் காரும் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
BMW M2
சமீபத்தில், உலகளவில் BMW நிறுவனம் M2 மாடலை வெளியிட்டது. இந்நிறுவனத்தின் M பிரிவில் இதுவே மிகச் சிறிய காராகும். M வரிசைகளில், M3 மற்றும் M4 ஆகிய மாடல்களுக்கும் கீழேதான் M2 மாடல் வைக்கப்படும். M2 காரில், சீரமைக்கப்பட்ட 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்படும். இது, கிளம்பிய 4.5 வினாடிகளிலேயே 100 kmph வேகத்தைத் தர வல்லதாக இருக்கிறது. மேலும், M2 மாடலில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்சை நாம் எதிர்பார்க்கலாம்.
BMW X1
ஆடி Q3 மற்றும் மெர்சிடிஸ் GLA போன்ற கார்களின் மூலம் கடுமையான போட்டியை, BMW X1 கார் சந்தித்துக் கொண்டிருந்தது. போட்டியை சமாளிக்க, இந்த மாடலை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இது மேம்படுத்தப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் பார்க்கும் போது, இந்த புதிய ஜெனரேஷன் X1 கார் மேம்படுத்தப்பட்டு, ஒரு முழுமையான SUV காரைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய காரில் பொருத்தப்படும் இஞ்ஜின் பற்றிய விவரத்தைப் பார்த்தால், BMW –வின் அனைத்து சோதனைகளுக்கும் உட்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
BMW 7 சீரிஸ் சேடான்
கடந்த சில காலமாக, சொகுசு பயணத்திற்கான சிறந்த வாகனத்தை அளவிடும் கோலாக, மெர்சிடிஸ் S கிளாஸ் மாடல் கருதப்படுகிறது. இந்த கருத்தை மாற்றி அமைக்க, BMW நிறுவனத்திடம் வலுவான திட்டங்கள் உள்ளன. உட்புறம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கருவிகள், சுகமான களைப்பில்லாத பயணம் மற்றும் எளிதாக கையாளுவதற்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் என்று, புதிய 7 சீரிஸ் மாடல் அனைத்து அம்சங்களிலும் பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றால் அது மிகை ஆகாது.
BMW 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்
3 சீரிஸ் காரின் தோற்றத்திலும் ஒரு சில அம்சங்கள் போலிவேற்றப்பட்டுள்ளன. புத்தம் புதிய அகலமான ஏர் டேம் பொருத்தப்பட்ட முன் மற்றும் பின்புறத்தில் உள்ள பம்பர்களை, நாம் தோற்ற மேம்பாட்டு அம்சங்களில் குறிப்பிட்டுக் கூறலாம். LED ஹெட் லாம்ப்கள் மற்றும் டிவீக் செய்யப்பட்ட டெய்ல் லாம்ப்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் மட்டும் ஆப்ஷனலாக வருகிறது. அதே 2 லிட்டர் டீசல் இஞ்ஜினை, புதிய 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் நாம் எதிர்பார்க்கிறோம்.
ஆதாரம்: Autocar India
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful