• English
  • Login / Register

BMW M2 மற்றும் X4 M40i ஆகியவை டெட்ராய்ட்டில், உலக அரங்கேற்றம் பெறுகின்றன

published on டிசம்பர் 21, 2015 06:41 pm by bala subramaniam

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

2016 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா காண தயாராகி வரும் BMW நிறுவனம், டெட்ராய்ட்டில் நடைபெற டெட்ராய்ட் ஆட்டோ ஷோ என்று அறியப்படும் நார்த் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (NAIAS), M2 மற்றும் X4 M40i ஆகிய வாகனங்களை உலக அரங்கேற்றம் செய்ய உள்ளது. மேலும் i மாடல்களையும், எலக்ட்ரிக் மொபைலிட்டியின் புதுமையான சேவைகள், BMW-ன் கனெக்டேட் டிரைவ் மூலம் பெறப்படும் ரிமோட் கன்ட்ரோல் பார்க்கிங் போன்ற நவீன தரத்தில் அமைந்த அப்ளிகேஷன்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றை BMW நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது.

புதிய BMW M2-ல் ஒரு உயர்-செயல்திறன் கொண்ட 6-சிலிண்டர் இன்-லைன் என்ஜின், பின்புற வீல் டிரைவ் வேக செயல்பாடு, எடைக் குறைவான அலுமினியம் M ஸ்போர்ட் சஸ்பென்ஸன் மற்றும் எக்ஸ்ட்ராவர்ட் ஸ்டைலிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. 3.0-லிட்டர் V6 யூனிட்டை கொண்டு 6,500 rpm-ல் 370 hp-யும், ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 465 Nm-யையும் (ஓவர்பூஸ்ட் மூலம் குறுகிய பர்ஸ்ட்களை உண்டாக்கி, இதை 500 Nm ஆக அதிகரிக்க முடியும்) அளிக்கிறது. ஒரு 7-ஸ்பீடு M இரட்டை கிளெச் டிரான்ஸ்மிஷன் மற்றும் லான்ஞ் கன்ட்ரோல் பொருத்தப்பட்டு, 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை M2 எட்டி சேர்கிறது. எலக்ட்ரிக்கலி கட்டுப்படுத்தப்பட்ட அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தை எட்டுகிறது. இதை M டிரைவர்ஸ் பேக்கேஜ் மூலம் மணிக்கு 270 கி.மீ. வேகமாக உயர்த்த முடியும்.

X4 தரத்தில் நேர்த்தியான இயக்கவியல் (ஷார்ப்பர் டைனாமிக்ஸ்), தனித்துவம் வாய்ந்த தோற்றம், பிரேத்யேகமான உபகரணங்களின் விபரங்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு புதிய தலைசிறந்த மாடலாக BMW X4 M40i விளங்குகிறது. இந்த BMW X4 M40i-ன் M செயல்திறன் மூலம் புதியதாக உருவாக்கப்பட்ட ட்வின்பவர் டர்போ 6-சிலிண்டர் இன்-லைன் பெட்ரோல் என்ஜின், அதன் உலக அரங்கேற்றத்தை பெற உள்ளது. 3.0-லிட்டர் யூனிட், 5,800 மற்றும் 6,000 rpm-மிற்கும் இடைப்பட்ட நிலையில் 360 hp வெளியீடையும், ஒரு உயர் முடுக்குவிசையான 465 Nm-யையும் அளிக்கிறது. இந்த BMW X4 M40i கார், 4.9 வினாடிகளில் 0 வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டி சேர்வதோடு, ஒரு எலட்ரிக்கலி கட்டுபடுத்தப்பட்ட அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கி.மீட்டரையும் எட்டுகிறது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience