BMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்
sumit ஆல் அக்டோபர் 06, 2015 06:33 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
BMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை மும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்நிறுவனம், இந்தூரில் BMW நிறுவனத்தின் அதிகாரபூர்வ விநியோகிஸ்தாராக சிறப்பாக சேவை செய்து வருகிறது.
இன்பினிட்டி கார்ஸின் நிர்வாக இயக்குனரான திருமதி. பூஜா சௌத்ரி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, “கடந்த 8 வருடங்களாக, BMW குழுமத்துடன் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம் வியாபார தொடர்பு கொண்டிருக்கிறது. உலகில் மிகவும் விரும்பத்தக்க பிராண்டுகளின் ஒன்றான BMW நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. BMW இந்திய நிறுவனம் வளரும் போது, நாங்களும் வளருவோம். இந்தியாவில் முதல் ‘BMW M ஸ்டுடியோவை’ ஆரம்பிப்பதற்கு எங்களுக்கு மிகவும் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது,” என்று கூறினார். ‘M ‘ ரக கார்கள் மீது மக்களுக்கு ஒரு அதீத விருப்பம் உள்ளது. செயல்திறன் மீது அதீத ஈடுபாடு உள்ள வாடிக்கையாளர்களை அடிமையாக்கும் விதத்தில், இந்த கார்கள், அருமையான செயல்திறன் அம்ஸங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. மும்பை மாநகரில் BMW M -இன் ரசிகர்கள் பெருமளவு உள்ளனர். இந்த புதிய BMW M ஸ்டுடியோ, இந்நகரத்தில் எங்களது நான்காவது புதிய ஷோரூமாக செயல்பட உள்ளது. M பிராண்ட் மாடலை, இதனை விரும்பும் வாடிக்கையாளர்களின் அருகில் சென்று வெளிப்படுத்த, இன்பினிட்டி கார்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்,” என்று கூறினார். ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் BMW M பிராண்ட் மாடல்களை கையால் தொட்டு உணரும் வசதியை தரவல்ல ஷோரூம்களை விரும்புவதால், இது அவர்களுக்கு ஒரு நற்செய்தியாக இருக்கும்.
BMW இந்தியா நிறுவனம் டெல்லி, பெங்களூரு, சென்னை, புனே, அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய, இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் இதே போன்ற ஷோரூம்களை தொடங்கி, தன் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அதன் போட்டியாளரான மெர்சிடிஸ் AMG செயல்திறன் மையங்களுடன் போட்டியிடத் தயாராக உள்ளது. தற்போது, இந்த ஷோரூம் 4 மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அவை, BMW M3 செடன், BMW M4 கூபே, BMW M5 செடன் மற்றும் BMW M6 கிரான் கூபே ஆகியனவாகும். மேலும்,