புதிய மிஷன் இம்பாசிபிள் – ரோக் நே ன் திரைப்படம் முழுதும் BMW கார்களின் அட்டகாசமான படையெடுப்பு.
published on ஆகஸ்ட் 10, 2015 10:06 am by manish
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிஷன் இம்பாசிபிள் – ரோக் நேஷன்’மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் சமீபத்திய பதிப்பான ‘மிஷன் இம்பாசிபிள் – ரோக் நேஷன்’ என்ற ஆங்கில திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பாரமவுண்ட் பிக்சர் மற்றும் ஸ்கை டான்சின் தயாரிப்பில் உலகம் முழுவதும் வெளியிடப்படும் மிகவும் பிரபலமான மிஷன் இம்பாஸிபில் பட வரிசையில், சமீபத்திய வெளியீடுகளில் பிரத்தியேக வாகன விளம்பரதாரராக BMW திகழ்ந்து வருகிறது.
மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் ஏதன் ஹண்ட்டாக வரும் டாம் க்ரூஸ் இதற்கு முன் ‘கோஸ்ட் பிரோட்டோகால்’ படத்தில் BMW வுடன் கம்பீரமாக இணைந்து பல நெஞ்சை உலுக்கும் சாகசங்களை செய்தார். இந்த படத்தில், BMW கார் உலகம் முழுவதும் சென்று எடுக்கப்பட்ட பல விதமான மூச்சு முட்டும் அதிரடி சண்டைக் காட்சிகளில் இடம் பெற்று, பெரும் கைதட்டல்களை அள்ளவிருக்கிறது. இத்தகைய காட்சிகளை தத்ரூபமாக எடுப்பதற்கு, BMW நிறுவனம் தனது முன்னோடி வாகனங்களை கொடுத்து உதவியுள்ளது. படம் பிரம்மாண்டமாக பேசப்பட வேண்டும் என்று, உயர் தரமான தொழில்நுட்பத்தில் தயாரான சிறந்த கார்களை இந்த படத்தின் தயாரிப்பு குழுவினருக்கு கொடுத்து ஆதரவு தந்துள்ளது.
BMW AG இன் மேலாண்மை குழு உறுப்பினரும், விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் பிரிவிற்கு பொறுப்பாளருமான இயான் ராபர்ட்சன் இது பற்றி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், “திரைப்பட வரலாற்றில் அதிரடியாக மிரட்டுகின்ற சண்டை பட காட்சிகளில் நாங்கள் மீண்டும் ஓர் அங்கமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “ஆற்றல் வாய்ந்த செயல்திறன் மற்றும் BMW ன் ‘கனெக்டெட் ட்ரைவ்’ அமைப்பை (உயர்தர சொகுசு பயணம், இன்ஃபோடைன்மெண்ட், மற்றும் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள்) கொண்ட எங்கள் BMW ரக கார்கள், ஏடன் ஹண்ட் மற்றும் அவரின் குழுவிற்கு நிச்சயமாக மிகப் பொருத்தமான வாகனமாக இருக்கின்றன, ஏனெனில், எங்களது கார்களில் உள்ள வியக்கத்தக்க பயன்பாடுகளையும், அதி நவீன தொழில்நுட்பங்களையும் உபயோகித்து பல்வேறு சாகசங்களை செய்து தங்களை முன்னிருத்தவும், நல்லவர்களை காக்கவும், இந்த அணியினருக்கு எங்களது நேர்த்தியான தயாரிப்புகள் மிகவும் உதவி செய்கின்றன. வேறு எந்த காரிலும் இல்லாதது போல BMW M3 கார்கள், பந்தய கார்களில் உள்ள இயந்திரத்தின் செயல் திறன் அடிப்படையும், அன்றாட நடைமுறை வாழ்விற்கு தேவைப்படும் செயல் திறனையும் உணர்வுபூர்வமாக ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் சக்தியை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன,” என்று கூறினார்.
இந்தியாவில் உள்ள BMW குழுமத்தின் தலைவரான திரு. ஃபிலிப் வொன் ஸர் கூறும் போது, “BMW கார்கள் பந்தைய திடல்களில் நமது ஆர்வத்தை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கச் செய்வது போல, மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன் படத்தின் திரைக் காட்சியிலும், இந்த கார்களின் சாகச அம்சங்கள் அதே விதமான கிளர்ச்சியை கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்தியாவில் உள்ள BMW கார்களின் அபிமானிகள், இந்த படத்தில் இணையில்லாத சாகசங்களைச் செய்யப்போகும் ஒப்புயரில்லாத இந்த காரை வெள்ளித்திரையில் காண ஆர்வமாக உள்ளார்கள். இந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ரோக் நேஷன்’படத்தில், BMW கார்களுடன் கூடிய அதிரடி சண்டை காட்சிகள், அருமையான கதையம்சம் மற்றும் மயிர் கூச்செறியும் திரைக் காட்சிகளுடைய அற்புதமான கூட்டுக் கலவை, நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த பொழுதுப்போக்கு அம்சமாக இருந்து மாபெரும் வெற்றி பெரும்,” என்று கூறுகிறார்.
BMW கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு திரை காட்சிகளில் ஏதன் மற்றும் அவரது குழுவினர்களால் பயன்படுத்தபட்டுள்ளன. புதிய B M W 7 வரிசை மாடல்கள் புது பாணியுடனும், நேர்த்தியான தோற்றத்தோடும் வியன்னா சாலைகளில் கம்பீரமாக பயணிப்பதாக இந்த படத்தில் காட்டியுள்ளனர். மேலும், B MW M 3 மாடல்களின் உற்சாகமூட்டும் வடிவமைப்பையும், சிறப்பான ஆற்றலையும், பந்தைய வாகனங்களின் சிறப்பு அம்ஸங்களையும் மிக சரியான கோணங்களில் திரையில் காண்பித்துள்ளனர், இந்த இரு கார்களும் மிஷன் இம்பாஷ்ஸிபில் காட்சிகளுக்கு உயிர் துடிப்பை தந்து நமது இதய துடிப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளன. மேலும் மொரோக்கோவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சண்டை காட்சியில் B M W S1000 R R ரக கம்பீர இருசக்கர வாகனங்களின் அறுதியான செயல்திறனும் அழகாக காட்சிப் படுத்தபட்டுள்ளன.
B M W நிறுவன கார்களின் முதல் கலப்பின (ஹைபிரிட்) ரக தயாரிப்பான BMW X5 x ட்ரைவ் 40e, B M W 6 சீரிஸ் கன்வர்டபிள் ஆகியவற்றின் சிறப்புகளும் காட்சிப் படுத்தபட்டு, உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர். டாம் க்ருயிசின் IM F குழுவினர் B M W வின் ‘கனெக்டெட் ட்ரைவ்’ வசதியை உலகம் முழுவதும் பயணிப்பதற்கு உபயோகித்து, படம் முழுவதும் பல்வேறு விதமான BMW ரக கார்களில் சுற்றுகின்றனர்.
BMWகார்கள் சுற்றுசூழல், கார், ஓட்டுனர் ஆகிய மூவருக்கும் இடையே புத்திசாலிதனமான இணைப்பை உருவாக்கி, நேர்த்தியாகவும் தனித்தன்மையுடனும் தயாரிக்கப்பட்டதாக உள்ளன. இதன் மிகவும் புதுமையான வசதியான அமைப்புகள், உயர்தரமான சொகுசு வசதிகளும், பாதுகாப்பு அம்ஸங்களும் நிறைந்ததாக இருக்கின்றன. இவற்றில், காமிரா வசதியும் காரை எளிதாக ஓட்ட உதவும் சாதனங்களும் பயண அனுபவத்தை மேலும் உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
0 out of 0 found this helpful