பிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்ச ங்களுக்கு அறிமுகப்படுத்தியது
published on செப் 29, 2015 11:49 am by அபிஜித் for பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
BMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எந்த ஆப்ஷன்களும் இல்லாமல் இந்த ஒரே ஒரு வேரியன்ட் மட்டும் தான் இனிமேல் வெளியாகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இதுவரை உள்ள X1 மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய காரில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆடி Q3 மற்றும் வோல்வோ V 40 கிராஸ் ஆகிய கார்களுடன் இந்த புதிய X1 போட்டியிடும்.
வெளிப்புற மாற்றங்களை பொறுத்த வரை லே மேன்ஸ் நீலம் மற்றும் ஆல்பைன் வெள்ளை ஆகிய இரண்டு வெவ்வேறு வண்ண ஆப்ஷன்களில் வெளிவந்திருக்கும் பம்பர் அமைப்பு சற்று எடுப்பாக தெரியும் வண்ணம் மாற்றியாமைக்கப்பட்டுள்ளது..
உட்புறத்தை பொறுத்தமட்டில் M ஸ்டேரிங் வீல் உயர்ரக தோலினால் மூடப்பட்டு நேர்த்தியாக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி உட்புற சீலைகளின் நிறத்திற்கு எதிர்மறையான நிறத்தில் தையல் போடப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது .
இரண்டு லிட்டர் இன்லைன் நான்கு - சிலிண்டர் BMW இரட்டை சக்தி டர்போ டீசல் மோட்டார் மூலம் இந்த கச்சிதமான சொகுசு SUV சக்தியூட்டப்படுகிறது. . 184 PS என்ற அளவிலான சக்தியையும் 380 nm என்ற அளவிலான டார்க்கையும் வெளியிடுகிறது. . இந்த அனைத்து சக்தியும் பின் சக்கரங்களுக்கு 8 - வேக ஸ்டெப்ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் கியர் அமைப்பின் உதவியுடன் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மேம்படுத்தல் தான் தற்போதய தலைமுறை X1 கார்களுக்கான கடைசி மேம்படுத்தலாக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.. இந்த X1 கார்களுக்கான மாற்றாக அடுத்த தலைமுறை X1 கார்கள் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட இருக்கின்றன.
0 out of 0 found this helpful