ஃபிகோ, கிளாஸிக் மற்றும் ஃபீஸ்டா ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்துகிறது ஃபோர்டு: வழியனுப்ப தயாராகுங்கள்
published on செப் 04, 2015 03:10 pm by manish for போர்டு ஃபிகோ 2015-2019
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
அமெரிக்க வாகன தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் கிளாஸிக் போன்ற இரு மாடல்களும் இந்தியாவில் மிகவும் வெற்றி பெற்ற கார்களின் பட்டியலில் சேர்ந்தவை என்றாலும், ஃபீஸ்டா சேடன் உடன் சேர்த்து இம்மூன்றின் தயாரிப்பையும் ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள தனது தயாரிப்புகளின் மீதான முதலீட்டை புதுப்பிக்க நோக்கம் கொண்டுள்ள ஃபோர்டு நிறுவனம், புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஃபோர்டு ஃபிகோ அதிக விற்பனையை பெற்ற வாகனம் என்றாலும், அந்நிறுவனத்தின் போட்டியாளர்கள் அதிகளவில் நவீன தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருவதால், இந்த சிறிய ஹேட்ச்பேக் வகையின் விற்பனை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கிளாஸிக் மாடலுக்கு மாற்றாக ஃபோர்டு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஆஸ்பியர், நாட்கள் கடந்த நிலையிலும் விற்பனை மிகவும் குறைவாகவே உள்ளது. முன்னதாக, ஃபோர்டு ஃப்யூஷன் / மான்டியோ மற்றும் புதிய ஃபீஸ்டா ஆகியவற்றில் காணப்பட்ட ஆஸ்டன் மார்டின் வடிவமைப்பை கொண்ட கிரிலை, ஆஸ்பியரும் கொண்டிருந்தது. இந்த தீபாவளி சீசனுக்கு முன்னதாக, ஆஸ்பியரின் ஹேட்ச்பேக் பதிப்பை ஃபிகோ ஹேட்ச்பேக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே பிரேசிலில் விற்பனையாகி வரும் ஃபோர்டு KA-விற்கு, ஒரு சர்வதேச மாற்றாக இந்த மாடல் அமையும்.
இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க மற்றும் தரமான தயாரிப்புகளை வழங்கினாலும், ஃபீஸ்டா போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகி, ஃபோர்டு நிறுவனத்தின் எந்த ஒரு இலக்கையும் அவை எட்டவில்லை. இதை தொடர்ந்து விலை குறைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அறிமுகம் செய்த போது, விற்பனையில் மாற்றம் தெரிந்தது. ஆனால் காரின் விற்பனையில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் தெரியவில்லை. சமீப காலமாக இதன் விற்பனை மிகவும் மோசமடைந்து, குறிப்பிடத்தக்க வகையில் சரிந்துள்ளது. எனவே இனி இந்த தயாரிப்பு மீது பிடிவாத போக்கை கொண்டிருப்பது பயனற்றது என்று ஃபோர்டு நிறுவனம் நினைக்கிறது. எனவே ஆஸ்பியர் உடன் சேர்த்து, ஒரு புதிய எண்டோவர் SUV-யை சில மாதங்களில் அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் தயாராகி வருகிறது.
0 out of 0 found this helpful