Audi Q7 Bold எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ.97.84 லட்சம் ஆக நிர்ணயம்
published on மே 21, 2024 07:42 pm by samarth for ஆடி க்யூ7 2022-2024
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
லிமிடெட்-ரன் போல்ட் எடிஷன் கிரில் மற்றும் லோகோக்களுக்கான பிளாக்-அவுட் காஸ்மெட்டிக் டீட்டெயிலை பெறுகிறது. மேலும் டாப்-ஸ்பெக் Q7 டெக்னாலஜி வேரியன்ட்டை விட ரூ.3.39 லட்சம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
புதிய போல்ட் எடிஷன் எஸ்யூவியின் ஃபுல்லி லோடட் டெக்னாலஜி வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.
-
விஷுவல் மாற்றங்களில் கருப்பு நிற ஆடி லோகோக்கள் கொண்ட பிளாக்-அவுட் கிரில் ஆகியவை ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக முன்புறத்திலும் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஹூட்டின் கீழ் எந்த மாற்றமும் இல்லை மற்றும் தற்போதுள்ள 3-லிட்டர் V6 TFSI பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் (340 PS/ 500 Nm).
Q3 காரில் போல்டு எடிஷனை அறிமுகப்படுத்திய சிறிது நாள்களிலேயே Q7 எஸ்யூவி -க்கு இப்போது அதே ட்ரீட்மென்ட்டை வழங்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ. 97.84 லட்சம் ஆக உள்ளது. அதாவது எஸ்யூவியின் ரேஞ்ச்-டாப்பிங் டெக்னாலஜி வேரியன்ட்டை விட இதற்கு 3.39 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும். ஆடி க்ளேசியர் ஒயிட், மித்தோஸ் பிளாக், நவரா புளூ & சாமுராய் கிரே ஆகிய நான்கு வண்ண ஆப்ஷன்களில் Q7 போல்ட் எடிஷனை வழங்குகிறது.
வெளிப்புற தோற்றம்
ஆடி Q7 போல்ட் எடிஷன் ஒரு பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜை கொண்டுள்ளது. இதில் கிரில்லில் ஒரு கிளாஸி பிளாக் ட்ரீட்மென்ட் மற்றும் முன் மற்றும் பின் இரண்டிலும் பிளாக்-அவுட் "ஆடி" லோகோக்கள் உள்ளன. பக்கவாட்டில் விண்டோ சரவுண்ட்ஸ், ORVM -கள் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவ்ற்றில் பிளாக்டு ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. 7-சீட்டர் எஸ்யூவி ஏற்கனவே LED DRL -களுடன் கூடிய மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் மற்றும் டூயல் டோன் பெயிண்ட் ஆப்ஷனுடன் 19-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்களுடன் வருகிறது.
உட்புறங்கள்
போல்ட் எடிஷன் உட்புறத்தில் எந்த மாற்றத்தையும் வழங்கவில்லை. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 19-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 4-ஜோன் ஏர் கண்டிஷனிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பார்க் அசிஸ்ட் உடன் கூடிய 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஸ்டாண்டர்டான மாடலின் அதே வசதிகளுடன் இது தொடர்கிறது.
மேலும் பார்க்க: இந்தியாவில் ஆடி கார்கள் ஜூன் 2024 முதல் விலை உயரவுள்ளன
பவர்டிரெய்ன்
இன்ஜின் ரீதியாக எதுவும் மாறவில்லை, போல்ட் பதிப்பு அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி உடன் கூடிய இன்ஜின் 340 PS மற்றும் 500 Nm உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 7 டிரைவிங் மோட்களையும் வழங்குகிறது (ஆட்டோ, கம்ஃபோர்ட், டைனமிக், பெர்ஃபாமன்ஸ், ஆஃப்-ரோடு, ஆல்-ரோடு மற்றும் இன்டிவிஷுவல்). இந்த பெட்ரோல் இன்ஜின் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 5.6 வினாடிகளில் எட்டிவிடும். மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும். Q7 ஆனது ஆடியின் ஆல்-வீல் டிரைவ் டிரெய்னில் வருகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஆடி Q7 காரின் விலை ரூ.86.92 லட்சத்தில் தொடங்குகிறது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போல்ட் எடிஷனின் டாப் வேரியண்ட் ரூ.97.84 லட்சம் ஆக உள்ளது.இது மெர்சிடிஸ்-பென்ஸ் GLE, BMW X5, மற்றும் வோல்வோ XC90 ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது
மேலும் படிக்க: Q7 ஆட்டோமெட்டிக்