ரூ.72.30 லட்சம் விலையில் ஆடி Q5 காரின் போல்ட் எடிஷன் வெளியிடப்பட்டது
published on ஜூலை 16, 2024 02:33 pm by shreyash for ஆடி க்யூ5
- 44 Views
- ஒரு கருத்தை எழுதுக
Q5 போல்ட் எடிஷனில் அப்டேட்டட் கிரில், பிளாக்-அவுட் செய்யப்பட்ட லோகோக்கள், ORVM -கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
-
Q5 காரின் போல்டு பதிப்பு இரண்டு புதிய கிளேஸியர் வொயிட் மற்றும் டிஸ்டிங்ட் கிரீன் கலர் எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களை பெறுகிறது.
-
உள்ளே இது இரண்டு லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களை பெறுகிறது: அட்லஸ் பீஜ் மற்றும் ஒப்கி பிரெளவுன்
-
அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (269 PS/ 370 Nm) 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
10.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 3-ஜோன் ஏசி ஆகிய வசதிகள் இதில் இருக்கும்.
-
பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பார்க்கிங் உதவி ஆகியவை கொடுக்கப்படும்.
Q3 மற்றும் Q7 எஸ்யூவிகளின் போல்ட் எடிஷன் வரிசையில் இப்போது ஆடி Q5 இணைந்துள்ளது. இதன் விலை ரூ. 72.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Q5 எஸ்யூவியின் இந்த ஸ்பெஷல் எடிஷனில் பிளாக் ஸ்டைலிங் எலமென்ட்கள் உள்ளன. அதே நேரத்தில் கிளேஸியர் வொயிட் மற்றும் டிஸ்டிங்ட் வொயிட் என இரண்டு புதிய கலர் ஸ்கீம்களையும் இது பெறுகிறது. எஸ்யூவியின் இந்த சிறப்பு பதிப்பு யூனிட்கள் மிகக் குறைவாகவே விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
விலை
Q5 பிரீமியம் பிளஸ் |
ரூ.65.51 லட்சம் |
Q5 டெக்னாலஜி |
ரூ.70.80 லட்சம் |
Q5 பிளாக் எடிஷன் |
ரூ.72.30 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
Q5 போல்ட் எடிஷன் அதன் டாப்-ஸ்பெக் டெக்னாலஜி வேரியன்ட்டை விட ரூ.1.5 லட்சம் விலை அதிகமாக இருக்கும்.
போல்டு எடிஷனில் புதிதாக உள்ளவை என்ன ?
Q5 எஸ்யூவியின் போல்ட் எடிஷனுக்கான வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக கருப்பு நிறத்தில் புதிய கிரில் வடிவமைப்பைப் கொண்டுள்ளது. அலாய் வீல்கள் (19-இன்ச்), ரூஃப் ரெயில்ஸ், ORVMகள் (வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள்) மற்றும் விண்டோ லைன் போன்ற பிற எலமென்ட்களுக்கும் பிளாக்டு அவுட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்யூவியின் முன் மற்றும் பின்புறம் உள்ள இரண்டு ஆடி லோகோக்களும் கருப்பு நிறத்தில் உள்ளன. இவை அனைத்தும் Q5 போல்ட் பதிப்பை அதன் வழக்கமான பதிப்பை விட ஸ்போர்ட்டியாக மாற்றுகின்றன.
க்ளேசியர் ஒயிட் (புதிய), டிஸ்டிங்ட் வொயிட் (புதிய), மித்தோஸ் பிளாக், நவர்ரா ப்ளூ மற்றும் மன்ஹாட்டன் கிரே ஆகிய 5 கலர் ஆப்ஷன்களில் Q5 காரின் போல்ட் எடிஷன் கிடைக்கும்.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
Q5 காரின் உள்ளே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இது முன்பு இருந்த அதே டேஷ்போர்டு தீம் அப்படியே உள்ளது. இது இரண்டு அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களுடன் இது வருகிறது: அட்லஸ் பெய்ஜ் மற்றும் ஓப்கி பிரெளவுன்.
வசதிகளை பொறுத்தவரையில் இது 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 755W 19-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், 30 கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 3-சோன் ஏசி ஆகியவற்றுடன் வருகிறது. . வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், டிரைவருக்கான மெமரி ஃபங்ஷன் ஆகியவற்றை கொண்ட முன் இருக்கைகள் மற்றும் ஜெஸ்டர் கன்ட்ரோல்டு எலக்ட்ரிக் டெயில்கேட் போன்ற வசதிகளையும் இது பெறுகிறது. Q5 காரில் 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகியவை உள்ள பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன..
பவர்டிரெயின் ஆப்ஷனில் மாற்றம் இல்லை
Q5 போல்ட் பதிப்பிலும் வழக்கமான காரின் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 269 PS மற்றும் 370 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. நான்கு சக்கரங்களுக்கும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்தி வழங்கப்படுகிறது. வேகத்தை பொறுத்தவரையில் இது 6.1 வினாடிகளில் 100 கி.மீ எட்டும்.
போட்டியாளர்கள்
ஆடி Q5 கார் ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் GLC, பிஎம்டபிள்யூ X3, மற்றும் வோல்வோ XC60 ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: Q5 ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful