ASDC குழு திறன் அபிவிருத்தி மேம்பாட்டு திட்டத்தை அறிவித்தது
published on செப் 29, 2015 11:51 am by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
வாகன திறன் அபிவிருத்தி கவுன்சில் (ASDC )தனது நான்காவது வருடாந்திர மாநாட்டை, ஆண்டு தோறும் நடக்கும் அதன் பொது கூட்டத்துடன் இணைத்து, 2015 –ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் நடத்தியது. SIMA, ACMA, FADA மற்றும் கனரக தொழில்துறை மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ASDC குழுவானது, தேசிய திறன் அபிவிருத்தி கழகத்தின் (NSDC) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
திரு. அம்புஜ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அடுத்த ஆட்டோ மிஷன் திட்ட காலமான 2016 -ஆம் ஆண்டு முதல் 2026 -ஆம் ஆண்டு வரை கணிசமான வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியகூறுகள் பற்றி அவர் விரிவாக பேசினார். அவர், இதன் பங்குதாரர்களை ASDC திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை உபயோகித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், அவர்களது அலுவலக பணியாளர்களும், வளர்ந்து வரும் வாகன துறைக்கு ஏற்ப திறமையாக செயல்பட, ASDC -யின் திட்டங்களை பயன்படுத்த உதவ வேண்டும் என்று, தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். வருங்கால வாகன துறையின் தேவை அதிகரித்து வருவதால் லட்சக்கணக்கான மக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க, ASDC தனது திறனை அதிகரிக்க வேண்டும் என்று விளக்கினார். இந்த ஆண்டில் மட்டும், 75,000 மக்களுக்கு ASDC பயிற்சி அளித்துள்ளது.
ஏற்கனவே உள்ள அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவனகளான ஐடிஐ கல்வி நிறுவனங்கள், தங்களது மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதி மூலம் மாலை நேர மற்றும் வார இறுதி பயிற்சியை, மக்களுக்கு கொடுக்க முன்வர வேண்டும், என திரு. அம்புஜ் ஷர்மா யோசனை கூறினார்.
ASDC -யின் தலைவர் மற்றும் சந்தார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான திரு. ஜெயந்த் தாவர், “ நம் முன் உள்ள பணி மிக பெரியதாகும். எனவே, அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்கள் (OEMs), ஆக்ககூறுகளை உற்பத்தி செய்யும் காம்பனன்ட் இண்டஸ்ட்ரி மற்றும் விற்பனைக்கு பின் செயல்படும் சேவை துறைகள் போன்றவற்றின் பங்குதாரர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மோட்டார் வாகன துறையில் தொழில் திறனை மேம்படுத்துவதற்கு, மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (MoU) கையெழுத்திடப்பட்டன. ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மனித வள அலுவலரான திரு. சஞ்சய் ஜோராபூர் ASDC -யுடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அவர், ASDC பாடத்திட்டத்தின் படி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மாணவர்களை பயிற்சி செய்து மோட்டார் வாகன துறையில் வேலை செய்வதற்கு ஏற்ப அவர்களை தயார் செய்யும், என்று உறுதி அளித்தார்.
UBER நிறுவனத்தின் அரசு விவகார துறையின் பி.டி, திரு. அக்ஷய் குப்தா ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டார். இது பற்றி அவர் கூறும் போது, “நாங்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 1,00,000 க்கும் அதிகமான மக்களுடன் வியாபாரத்தில் ஈடுபடுவோம். ASDC சான்றிதழ் பெற்ற டிரைவர்களுக்கு நிதியுதவி செய்து தருவோம்” என்றும் அறிவித்தார்.
மூன்று முக்கியமான குழு விவாதங்கள் இந்த ஆண்டு விழாவில் நடைபெற்றன. அவை, வாகன துறையின் பிரத்தியேக சான்றிதழ், இந்திய நாட்டிலேயே தயாரிப்பதற்கான திறன் வளர்த்தல் மற்றும் பாதுகாப்பான சாலை அமைக்கும் திறன் ஆகும்.