முற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது
published on நவ 27, 2015 05:49 pm by nabeel for ஆடி க்யூ7 2006-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடி நிறுவனம் தனது பெயர்பெற்ற SUVயான Q7 வாகனங்களை இந்தியாவில் அறிமுகபடுத்த தயாராகி வருகிறது. இந்த வாகனங்கள் டிசம்பர் 10 ஆம் தேதி டீலர்ஷிப் மய்யங்களை வந்தடையும் என்று தெரிகிறது. இந்த Q7 SUV வாகனங்களின் 3.0 TFSI குவாட்ரோ வேரியன்ட்கள் மலேசியாவில் RM 589,900 (ரூ.. 91.06 தோராய விலை.) என்ற விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. முதலில் இந்த வாகனங்கள் ஒரு CBU யூநிட் ஆக இறக்குமதி செய்யப்பட உள்ளது என்றாலும், வரும் காலங்களில் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஆடி நிறுவனத்தின் ஔரங்காபாத் தொழிற்சாலையில் அஸம் பெல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும் மாற்றங்கள் இந்த புதிய Q7 கார்களில் உள்ளன. இந்த புதிய Q7 5,050மி.மீ நீளம் , 1,970 மி.மீ அகலம் மற்றும் 2,990மி.மீ வீல்பேஸ் அகலம் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய Q7 கார்களுடன் ஒப்பிடுகையில் 37 மி.மீ உயரம் குறைவாகவும் , 15 மி.மீ அகலம் குறைவாகவும் 12மி.மீ குறைவான வீல் பேஸ் உடனும் இந்த புதிய கார்கள் உள்ளன. 2,900 முதல் 5,300 ஆர்பிஎம் ல் 440 Nm அளவு அதிகபட்ச டார்க் மற்றும் 333 பிஎச்பி சக்தி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் சக்தி வாய்ந்த 3.0 லிட்டர் TFSI டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V6 என்ஜின் மூலம் இந்த புதிய Q7 கார்கள் சக்தியூட்டப்பட உள்ளன. 8 - வேக டிப்ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் இந்த கார் தொட்டு விடுகிறது. இது முந்தைய மாடலை விட 1.6 வினாடிகள் குறைவாகும். மேலும் இந்த புதிய Q7 முந்தைய மாடலைக் காட்டிலும் 300 கிலோ எடை குறைவானது. அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளதும் புதிய கட்டமைப்புமே இதற்கு காரணமாக அறியப்படுகிறது.
வெளிப்புற தோற்றத்திலும் இந்த கார்களில் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. நல்ல எடுப்பாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள க்ரில் , மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள சற்று சாய்வான முகப்பு விளக்குகள் , புதிய நீள்சதுர வடிவிலான LED - பின்புற விளக்குகள் மற்றும் முன் மற்றும் பின் புறங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய பம்பர்கள் போன்ற மாற்றங்கள் நன்கு புலப்படுகிறது. மேலும் உட்புறத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஷ்போர்ட் மற்றும் மத்திய கன்சோல் பகுதி , இந்போடைன்மென்ட் அமைப்பு , புதிய மீடியா சென்டர் நாப் மற்றும் புதிய கியர் லீவர் ஆகியவை இந்த காரின் அச்சுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர இந்த SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது உயர் ரக தோல் போர்த்தப்பட்ட இருக்கைகள் மற்றும் அற்புத ஒளி - ஒலி அனுபவத்தை பயணிப்பவர் அனுபவிக்கும் வகையில் 19 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டத்துடன் கூடிய புதிய இந்போடைன்மென்ட் அமைப்பும் இந்த கார்களில் காணப்படுகின்றன. கையெழுத்தை புரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய டச்பேட், பநோரமிக் சன்ரூப், நான்கு - சோன் கிளைமேட் கண்ட்ரோல் , மின்சாரத்தால் இயங்கும் மடித்தோ அல்லது நீட்டியோ வைத்துகொள்ளும் மூன்றாம் வரிசை இருக்கைகள், 360 - டிகிரி சுழலும் பார்க் அசிஸ்ட் வசதியுடன் கூடிய கேமெரா ,மேட்ரிக்ஸ் LED விளக்குகள், ஆடியின் 'விர்சுவால் காக்பிட் ' ,முழுதும் டிஜிடல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் , ட்ரைவ் செலெக்ட் மற்றும் ஏயர் சஸ்பென்ஷன் என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த Q7 கார்களில் குவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful