• English
  • Login / Register

ஏழாவது மாருதி சுசுகி தக்க்ஷின் டேர் போட்டிகள் தொடங்கியது.

published on ஆகஸ்ட் 03, 2015 01:09 pm by bala subramaniam

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நேற்றைய தினம்(ஆகஸ்ட்2 ,2015) பெங்களூர் ஓரியன் மால் வளாகத்தில் இருந்து ஏழாவது மாருதி சுசுகி தக்க்ஷின் டேர் பந்தயங்கள் கோலாகலமாக கொடியசைத்து துவக்கி வைக்க பட்டது. இந்த 2015 போட்டிகளில் பங்கேற்பவர்களில் சுமார் 40 சதவிகததிற்கு மேல் புதிய பங்கேற்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 170 போட்டியாளர்கள் 105 அணிகளாக இந்த பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். 6 நாட்கள் நடக்கும் இந்த பந்தயம் இரண்டாயிரம் கி. மீ தூரத்தை கடக்கிறது.இந்த பந்தயங்கள் மூன்று பிரிவுகலாக பிரிக்கப்பட்டுள்ளது. என்டுரன்ஸ் (தாக்கு பிடிக்கும் திறன்/பொறுமை) அல்டிமேட் கார் மற்றும் அல்டிமேட் பைக் என்பவையே அந்த மூன்று பிரிவுகள் ஆகும்.

இந்த 2015 தக்க்ஷின் டேர் போட்டியாளர்கள் இயற்கை எழில் நிறைந்த அதே சமயம் கடினமான சவால் நிறைந்த நிலப்பகுதிகளில் பயணிப்பார்கள். தாவனகரே, ஷிமோகா, ஹம்பி, குல்பர்கா, சித்ரதுர்கா, மற்றும் பெல்லாரி ஆகிய கர்நாடகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் பயணம் செய்தப்பின் முத்துக்களின் நகரம் என்று அழைக்கப்படும் ஹைதராபாத் நகரில் எதிர் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி 2015 அன்று நிறைவு பெறுகிறது.

மேலும் இந்தப் போட்டிப் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் படங்களுக்கு இந்த இணைப்பைக் தொடர்ந்து பாருங்கள். 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience