2020 இல் 6-இருக்கைகளைத் தொடர்ந்து 7 இருக்கைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் பிளஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது
published on பிப்ரவரி 11, 2020 02:32 pm by dinesh for எம்ஜி ஹெக்டர் பிளஸ் 2020-2023
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரவிருக்கும் 6 இருக்கைகளில் இருக்கும் கேப்டன் இருக்கைகளைப் போலல்லாமல் 7 இருக்கைகள் கொண்ட மாதிரியில் இரண்டாவது வரிசையில் நீண்ட இருக்கை வகையில் கிடைக்கும்
-
கோடைக் காலத்தில் 6 இருக்கைகள் கொண்ட கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், 7 இருக்கைகள் கொண்ட கார் 2020 தீபாவளி நெருக்கத்தில் அறிமுகமாகும்.
-
ஹெக்டரில் இருக்கும் அதன் ஆற்றல் இயக்கிகள் மற்றும் சிறப்பம்சங்களை ஹெக்டர் பிளஸும் பகிர்ந்து கொள்ளும்.
-
இது டாடா கிராவிடாஸ் மற்றும் வரவிருக்கும் இரண்டாம்-தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போன்றவற்றிற்கு போட்டியாக இருக்கும்.
எம்ஜி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹெக்டர் பிளஸ் (மூன்று-வரிசை ஹெக்டர்) ஐ அறிமுகப்படுத்தியது. இது இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 6 இருக்கைகள் கொண்ட மாடலாக இருப்பதால், மேம்படுத்தப்பட்ட அழகியலுடன் கூடுதல் வரிசை இருக்கைகளையும் கொண்டுள்ளது. இருப்பினும், 7 இருக்கைகள் கொண்ட மாதிரி தயாரிப்பு செயல் நிலையில் உள்ளது மேலும் இது 2020 ஆம் ஆண்டு தீபாவளி நெருக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும். ஹெக்டர் பிளஸ் 6 இருக்கைகள் கொண்ட மாதிரி 2020 கோடையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் எம்ஜி ஹெக்டர் ஆனது 6-சீட்டர் ஹெக்டர் பிளஸாக வெளியிடப்பட்டது
இரண்டாவது வரிசையில் ஒரு கேப்டன் இருக்கையையும், மூன்றாவது வரிசையில் வழக்கமான 50:50 பிரிக்கப்பட்ட இருக்கையையும் கொண்டிருக்கும் ஹெக்டர் பிளஸுடன் ஒப்பிடும்போது, 7 இருக்கைகள் கொண்ட ஹெக்டரில் இரண்டாவது வரிசையில் 60:40 பிரிக்கப்பட்ட நீண்ட இருக்கை வகையில் கிடைக்கும். வழக்கமான ஹெக்டருடன் ஒப்பிடும்போது, ஹெக்டரின் மூன்று வரிசை மாதிரிகள், 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாதிரிகள், மூன்றாவது வரிசைக்கு இருக்கையை சரிசெய்ய நெகிழ்வு தன்மை கொண்ட இரண்டாவது வரிசையை வழங்கும்.
படம்: சீனா-சிறப்பம்ச மாதிரி
7 இருக்கைகள் கொண்ட ஹெக்டர் அதன் இயந்திரங்கள் மற்றும் சிறப்பம்ச பட்டியலை 5 மற்றும் 6 இருக்கைகள் கொண்ட ஹெக்டருடன் பகிர்ந்து கொள்ளும். இதன் இயந்திர விருப்பங்கள் 2.0 லிட்டர் டீசல் இயந்திரம் (170பிஎஸ் / 350என்எம்) மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம் (143பிஎஸ் / 250என்எம்) போன்றவை இருக்கும். இரண்டு இயந்திரங்களும் 6-வேகத் தானியங்கி பற்சக்கரப் பெட்டியுடன் பொருத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பெட்ரோல் இயந்திரம் 6-வேக டிசிடி வகையில் இருக்கும்.
ஹெக்டரில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளி மேற்கூரை, 10.4 அங்குல செங்குத்து தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்திற்கான ஈசிம், 360 கோண கேமரா, ஆறு காற்றுபைகள் வரை, ஆற்றல் மிக்க முன் இருக்கைகள் மற்றும் ஆற்றல் மிக்க கதவுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
7 இருக்கைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் ஆனது அதன் 6 இருக்கைகள் கொண்ட வகைக்கு இணையாக விலை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது, இது ஹெக்டர் காரை விட ரூபாய் 1 லட்சம் வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான ஹெக்டரின் விலை ரூபாய் 12.73 லட்சம் முதல் ரூபாய்.17.43 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). அறிமுகப்படுத்தப்பட்டதும், 7 இருக்கைகள் கொண்ட ஹெக்டர் ஆனது டாடா கிராவிடாஸ், 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் புதிய எக்ஸ்யூவி 500 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபோர்டு போன்றவற்றைப் பெறும்.
மேலும் படிக்க: 2020 எக்ஸ்யுவி500 குறித்த 5 தகவல்கள்
கூடுதல் தகவல்களுக்கு : எம்ஜி ஹெக்டரின் இறுதி விலை
0 out of 0 found this helpful