2025 Skoda Kodiaq காரின் வடிவமைப்பு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
கோடியாக்கின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு விஷயங்களை டீஸரில் பார்க்க முடிகிறது. ஆனால் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2025 ஸ்கோடா கோடியாக் கார் ஸ்கோடாவின் டீசர் சமூக ஊடக பக்கங்களில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி -யின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு விஷயங்கள் டீஸரில் காட்டப்பட்டுள்ளன.
A post shared by Škoda India (@skodaindia)
டீஸர் வீடியோவில் தெரியும் அனைத்து விஷயங்களையும் இங்கே பார்ப்போம்:
என்ன பார்க்க முடிகிறது ?
முன்பே குறிப்பிட்டபடி டீஸரில் 2025 கோடியாக்கின் சில வடிவமைப்பு எலமென்ட்கள் காட்டப்பட்டுள்ளன. இதில் ஸ்பிளிட்டட் எல்இடி ஹெட்லைட் டிஸைன் மற்றும் வழக்கமான ஸ்கோடா 'பட்டர்ஃபிளை' கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. கிரில் குரோம் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டில் ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்ட டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன. மற்றும் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் போலவே உள்ளது. பனோரமிக் சன்ரூஃப் மற்றும் சி-வடிவ கனெக்டட் எல்இடி டெயில் லைட்களையும் டீசரில் பார்க்க முடிகிறது.
உட்புறத்தில் பெர்ஃபரேஷன்களுடன் கூடிய பிரவுன் கலர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு ஒரு லேயர்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா மற்றும் கைலாக் ஆகியவற்றிலும் 13-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்களையும் கொண்டுள்ளது.
மேலும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், இயங்கும் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், மல்டி-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் ஆப்ஷனலான ஹெட்ஸ்-அப்-டிஸ்ப்ளே (HUD) ஆகியவை கொடுக்கப்படும். பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: இந்தியாவில் மூன்றாவது வரிசை இருக்கை கொண்ட டாப் 10 விலை குறைவான கார்கள்
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இந்தியா-ஸ்பெக் 2025 ஸ்கோடா கோடியாக்கின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் உலகளாவிய-ஸ்பெக் மாடல் பின்வரும் ஆப்ஷன்களுடன் வருகிறது:
அளவுகள் |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
150 PS |
204 PS |
204 PS/ 265 PS |
150 PS/ 193 PS |
டிரான்ஸ்மிஷன் |
7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு DCT |
7-ஸ்பீடு DCT |
7-ஸ்பீடு DCT |
டிரைவ்டிரெய்ன்* |
FWD |
FWD |
FWD / AWD |
FWD / AWD |
*FWD - ஃபிரன்ட்-வீல் டிரைவ் / AWD - ஆல்-வீல் டிரைவ்
பழைய கோடியாக் 190 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வந்தது. இது வரவிருக்கும் புதிய கோடியாக்கில் 204 PS / 320 Nm அவுட்புட்டை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எதிர்காலத்தில் டீசல் இன்ஜினும் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா கோடியாக் விலை ரூ. 45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மேலும் வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் எம்ஜி மெஜஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்,
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.