சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Mercedes-Benz E-Class LWB கார்

மெர்சிடீஸ் இ-கிளாஸ் க்காக அக்டோபர் 09, 2024 06:19 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

6 -வது ஜெனரேஷன் இ-கிளாஸ் LWB ஆனது ஒரு ஷார்ப்பான வெளிப்புறம் மற்றும் EQS செடானை போல பிரீமியமான கேபினுடன் வருகிறது.

  • இந்த காரின் விலை ரூ.78.50 லட்சம் முதல் ரூ.92.50 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது.

  • எல்இடி ஹெட்லைட்கள், பெரிய கிரில், 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவை உள்ளன.

  • டேஷ்போர்டில் 3-ஸ்கிரீன் செட்டப் உள்ளது, மேலும் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 4-ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.

  • பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

  • இது தற்போது 2-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் கிடைக்கும்.

  • புதிய 3-லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினும் (381 PS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2024 மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் LWB (லாங் வீல்பேஸ்) இந்தியாவில் ரூ. 78.50 லட்சத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). புதிய இ-கிளாஸின் விரிவான விலை விவரங்களை பார்ப்போம்:

வேரியன்ட்

எக்ஸ்-ஷோரூம் விலை

E 200

ரூ.78.50 லட்சம்

E 220d

ரூ.81.50 லட்சம்

E 450

ரூ.92.50 லட்சம்

விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா ( அறிமுகம் )

இந்த விலையானது பழைய மாடலை விட ஆரம்ப விலை ரூ.2.45 லட்சம் அதிகமாகும்.

வெளிப்புறம்

பழைய மாடலுடன் ஒப்பிடும் போது இது நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பெரிய கிரில் முன்பக்கமாக உள்ளது. கிரில் ஒரு குரோம் சரவுண்ட், புதிய டிரிஸ்டார் எலமென்ட்கள் மற்றும் மையத்தில் மெர்சிடிஸ் லோகோ உள்ளது. பம்பரின் கீழ் பகுதியில் குரோம் முன் ஸ்கிட் பிளேட் உள்ளது.

பக்கவாட்டில் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் உள்ளன. டர்ன் சிக்னல்கள் ORVM -களில் உள்ளன. டோர்களின் கீழ் ஒரு குரோம் கார்னிஷ் உள்ளது.

புதிய இ-கிளாஸ் எல்டபிள்யூபி டிரைஸ்டார் லைட்டிங் எலமென்ட்களுடன் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட் செட்டப் உள்ளது. செடானின் பின்பக்கம் முழுவதும் ஒரு குரோம் பீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்ட டூயல் எக்சாஸ்ட்டை கொண்டுள்ளது.

6 -வது தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆனது சில்வர், கிரே, பிளாக், வொயிட் மற்றும் நீலம் என 5 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

2024 இ-கிளாஸ் பிரவுன், பீஜ் மற்றும் பிளாக் என இரண்டு தீம் ஆப்ஷன்கள் உள்ளன. டாஷ்போர்டில் 3 ஸ்கிரீன்கள் உள்ளன: 12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 14.4-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் முன்பக்க பயணிகளுக்கான மற்றொரு 12.3-இன்ச் ஸ்கிரீன் உள்ளது. வீடியோ கான்பரன்சிங் வசதிக்காக டாஷ்போர்டில் பொருத்தப்பட்ட கேமராவையும் மெர்சிடிஸ் கொடுத்துள்ளது.

சென்டர் கன்சோலில் இரண்டு தனித்தனி ஆர்ம்ரெஸ்ட்கள் (அவற்றின் கீழ் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உடன்) மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் உள்ளது. மேலும் இவை முன்பக்க பயணிகளுக்காக ஒரு வுடன் பேனலின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

சொகுசு செடான் 3 பின் இருக்கைகளை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களுடன் கொண்டுள்ளது. இந்த இருக்கைகளை 36 டிகிரி வரை சாய்க்க முடியும் மற்றும் தொடையின் கீழ் ஆதரவை 40 மிமீ வரை நீட்டிக்க முடியும். வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆகியவற்றைக் கொண்ட சென்டர் ஆர்ம்ரெஸ்டுக்கு பின்புற மைய இருக்கை ஃபோல்டபிள் ஆக இருக்கும்.

புதிய இ-கிளாஸ் பின்புற டோர்களில் எலக்ட்ரிக்கலி ரீட்ராக்டபிள் மற்றும் எக்ஸ்டென்டபிள் ரோலர் சன்பிளைண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற டோர்கள் பவர்-குளோஸிங் வசதிகளும் உள்ளன.

பின் இருக்கை பயணிகளுக்கு அதிக லெக் ரூமை கொடுப்பதற்காக ஒரு பட்டனை அழுத்தும்போது முன் பயணிகள் இருக்கையை எலக்ட்ரிக்கலி முறையில் சரித்து கொள்ளலாம்.

மற்ற அம்சங்களில் டிஜிட்டல் வென்ட் கன்ட்ரோலுடன் கூடிய 4-ஜோன் ஆட்டோ ஏசி, 17-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், முன் இருக்கைகளில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மெமரி ஃபங்ஷன் ஆகியவை உள்ளன.

பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும். இது ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சில ADAS (அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங்) வசதிகளும் உள்ளன.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

2024 மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வருகின்றது, அவற்றின் விவரங்கள் இங்கே:

இன்ஜின்

2-லிட்டர் நான்கு சிலிண்டர் மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல்

3-லிட்டர் ஆறு சிலிண்டர் மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்

2-லிட்டர் நான்கு சிலிண்டர் மைல்டு-ஹைப்ரிட் டீசல்

பவர்

197 PS

381 PS

200 PS

டார்க்

320 Nm

TBA

440 Nm

டிரான்ஸ்மிஷன்

9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்

9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்

9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்

டெலிவரி மற்றும் போட்டியாளர்கள்

E 200 வேரியன்ட்க்கான டெலிவரிகள் விரைவில் தொடங்கவுள்ளன. மற்ற வேரியன்ட்களுக்கான டெலிவரி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் LWB ஆனது ஆடி ஏ6 மற்றும் தி BMW 5 சீரிஸ் LWB ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Mercedes-Benz இ-கிளாஸ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.07 - 17.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை