2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது
published on மார்ச் 14, 2020 01:43 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது
-
புதிய கிரெட்டாவிற்கான அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகள் 10,000 அலகுகள் என்ற இலக்கைத் தாண்டிவிட்டன.
-
தொகுதிக்கான தயாரிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது மேலும் எஸ்யூவி விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்கியது.
-
இது செல்டோஸின் மூன்று பிஎஸ்6-இணக்க இயந்திரங்களுடன் வழங்கப்படும்.
-
இரண்டாவது தலைமுறை கிரெட்டாவில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, காற்று சுத்திகரிப்பி மற்றும் திசைத்திருப்பி ஆகியவை இடம்பெறும்.
-
இதன் விலை ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 17 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் வரும் வாரங்களில் இந்தியாவில் இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்த உள்ளது. இது மார்ச் 17 அன்று அறிமுகப்படுத்தவிருந்த நிலையில், தற்போது அது ஒரு நாளுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்த உள்ளது. 10 நாட்களுக்குள்ளாகவே புதிய கிரெட்டாவின் முன்பதிவுகள் 10,000 வரை பெற்றிடுக்கிறது.
புதிய கிரெட்டாவின் தொகுதி தயாரிப்பு கடந்த வார இறுதியில் ஹூண்டாயின் சென்னை தொழிற்சாலையில் தொடங்கியது. எஸ்யூவி தற்போது இந்தியா முழுவதும் விற்பனை நிலையத்தை அடையத் தொடங்கி இருக்கிறது. இ, இஎக்ஸ்,எஸ், எஸ்எக்ஸ், மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) என இது மொத்தம் ஐந்து வகைகளில் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரம், 1.5 லிட்டர் டீசல் இயந்திரம் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் போன்றவற்றை செல்டோஸ் பிஎஸ்6-இணக்க இயந்திரங்களுடன் ஹூண்டாய் நிறுவனமானது இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை வழங்கும். இந்த மூன்று இயந்திரங்களில் செலுத்துதல் விருப்பங்கள் முறையே 6-வேக எம்டி/சிவிடி, 6-வேக எம்டி / 6-வேக ஏடி மற்றும் 7-வேக டிசிடி ஆகும். இந்த இயந்திரங்களின் ஆற்றல் மற்றும் முறுக்கு திறன் 115பிஎஸ் / 144என்எம், 115பிஎஸ் / 250என்எம், மற்றும் 140பிஎஸ் / 242என்எம் அளிக்கின்றன.
புதிய கிரெட்டா வில் திசைத்திருப்பி, வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை மற்றும் கைமுறை வகைகளுக்கான தொலைதூர இயக்கி மூலம் காரின் இயக்கம் (இணைய அணுகல் கார் தொழில்நுட்பம்), அதன் முதன்மையான போட்டியான வடிவத்தில் சில முதல் பிரிவு சிறப்பம்சங்களை வழங்கினாலும், செல்டோஸ் 360- டிகிரி கேமரா, முகப்பில் உள்ள பெரிய திரை, முன்புறமாகக் காரை நிறுத்துவதற்கு உதவக்கூடிய உணர்விகள் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. எனினும், ஹூண்டாய் டிஆர்எல்-களுடன் எல்இடி முகப்புவிளக்குகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் 10.25 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பு, காற்று சுத்திகரிப்பி, மின்னணு முறையிலான தடைக்கருவி அமைப்பு, டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான விதத்தைத் தேர்ந்தெடுப்பது போன்றவைகளை வழங்குகிறது.
இது க்யா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டூர், மாருதி சுசுகி எஸ்-கிராஸ், நிஸான் கிக்ஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் போன்ற சில வகை கார்களுக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும். இது 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வரவிருக்கும் ஸ்கோடா விஷன் ஐஎன் மற்றும் விடபிள்யூ டைகுன் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனமானது புதிய கிரெட்டாவிற்கு ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 17 லட்சம் வரை விலையை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கிரெட்டா டீசல்