2020 ஹூண்டாய் கிரெட்டாவின் மாதிரிகள் வாரியாக இயந்திர விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன
published on மார்ச் 04, 2020 02:57 pm by dinesh for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
2020 கிரெட்டா இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கப்படும்
-
அதனுடைய பிஎஸ்6 இயந்திரங்களை க்யா செல்டோஸுடன் பகிர்ந்து கொள்கிறது.
-
1.4 லிட்டர் டர்போ அலகு 7 வேக டிசிடி உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
-
1.5 லிட்டர் பெட்ரோல் 6 வேக எம்டி மற்றும் சிவிடி இரண்டிலும் கிடைக்கிறது.
-
1.5 லிட்டர் டீசல் இயந்திரம் 6 வேக எம்டி மற்றும் 6 வேக ஏடி இரண்டிலும் கிடைக்கிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்திய பிறகு, ஹூண்டாய் நிறுவனம் மார்ச் 17 அன்று காம்பாக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் தயாராக இருக்கின்றது. அறிமுகம் இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்ற நிலையில், வரவிருக்கும் எஸ்யூவியின் மாதிரிகள் மற்றும் இயந்திரம் குறித்த விவரங்களை குறித்த ஆவணம் எங்களிடம் உள்ளது.
தற்போது இருக்கின்ற காரைப் போலல்லாமல் - இது ஆறு வகைகளில் வழங்கப்படுகிறது: இ+,இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ், எக்ஸ் (ஓ) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) எக்ஸிகியூட்டிவ் - 2020 கிரெட்டா ஐந்து வகைகளில் வழங்கப்படும்: இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ).
மாதிரி வாரியான இயந்திர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
இ |
இஎக்ஸ் |
எஸ் |
எஸ்எக்ஸ் |
எஸ்எக்ஸ்(ஓ) |
|
பெட்ரோல் |
- |
1.5லிட்டர் உடன் 6எம்டி |
1.5 லிட்டர் உடன் 6எம்டி |
1.5லிட்டர் உடன் 6எம்டி அல்லது சிவிடி/1.4-லிட்டர் டர்போ உடன் 7-டிசிடி |
1.5லிட்டர் உடன் சிவிடி/1.4-லிட்டர் டர் போ உடன் 7-டிசிடி |
டீசல் |
1.5லிட்டர் உடன் 6எம்டி |
1.5லிட்டர் உடன் 6எம்டி |
1.5லிட்டர் உடன் 6எம்டி |
1.5லிட்டர் உடன் 6எம்டி அல்லது 6ஏடி |
1.5லிட்டர் உடன் 6எம்டி அல்லது 6ஏடி |
-
1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் இரண்டுமே 6 வேக எம்டியுடன் நிலையாக வழங்கப்படும்.
-
1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திர அலகுக்கு சிவிடி விருப்பமும் கிடைக்கும், 1.5 லிட்டர் டீசல் இயந்திர அலகிற்கு விருப்பமான 6 வேக முறுக்குதிறன் மாற்றி அலகுடன் வழங்கப்படும்.
-
1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் உயர்-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியில் கைமுறை செலுத்துதல் விருப்பம் வழங்கப்படாது
-
மூன்றாவதாக, 1.4 லிட்டர் டர்போ அலகும் கிடைக்கும், என்றாலும் கூட, இது 7 வேக டிசிடி உடன் மட்டுமே கிடைக்கும். செல்டோஸில், 1.4 லிட்டர் டர்போ இயந்திரம் 6 வேக கை முறை செலுத்துதல் விருப்பத்துடன் கிடைக்கிறது.
-
தானியங்கி முறை விருப்பங்கள் முதல் இரண்டு வகைகளில் மட்டுமே கிடைக்கும்
புதிய கிரெட்டா பின்வரும் வண்ண விருப்பங்களுடன் வருகிறது:
-
போலார் ஒயிட்
-
டைஃபூன் சில்வர்
-
பண்டோம் பிளாக்
-
லாவா ஆரஞ்சு
-
டைட்டன் க்ரே
-
டீப் ஃபாரஸ்ட் (1.4 லிட்டர் டர்போவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது)
-
கேலக்ஸி ப்ளூ (புதிய)
-
ரெட் மல்பெர்ரி (புதிய)
-
போலார் ஒயிட் உடன் பண்டோம் பிளாக் மேற்கூரை
-
லாவா ஆரஞ்சு உடன் பண்டோம் பிளாக் மேற்கூரை (1.4 லிட்டர் டர்போவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது)
கிரெட்டாவின் மாதிரி வாரியான சிறப்பம்ச பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அதனுடைய பிரிவின் முதல் சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
-
திசைத் திருப்பி
-
கைமுறை மாதிரிகளுக்குத் தொலைதூர இயக்கி மூலம் வாகன இயக்கம் (இணைய அணுகல் தொழில்நுட்பம்)
-
வெளிபுறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை
ஹெக்டரில் இருப்பது போன்ற குரல் கட்டளைகள், 10.25 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, போஸ் ஒலி அமைப்பு மற்றும் தானியங்கி முறை நிறுத்தும் அமைப்புடன் மின்மயமாக்கபட்ட வாகனம் நிறுத்தும் அமைப்பு ஆகிய பிற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
2020 கிரெட்டாவின் விலை ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 16 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது க்யா செல்டோஸ், ரெனால்ட் கேப்டூர், நிஸான் கிக்ஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியரின் சில வகைகளுக்குப் போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: கிரெட்டா டீசல்