2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்
published on ஜூலை 31, 2015 12:14 pm by konark for ஆடி க்யூ5 2018-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ரியல்-வோல்ட் சோதனை ஸ்பெயினில் நடந்து வருகிறது.
பெரிய அளவிலான மாற்றம் இருப்பது போல தெரிந்தாலும், வெளி வர உள்ள ஆடி க்யூ5-யின் முன் பக்க பஸ்சியா, அதன் மூத்த சகோதரரான க்யூ7-னை சார்ந்தது போலவே உள்ளது. க்யூ5ல் வளைந்த மற்றும் தடித்த டிசைன்களை பெற்றிருப்பதன் மூலம் எதிர்கால வடிவமைப்பிற்குள் நுழைந்துள்ளதை வெளி காட்டுகிறது. பெரியளவிலான ஏர் இன்டெக்ஸ் மற்றும் புதிய ஹெக்சாகோனல் முன்பக்க கிரில் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகும். பக்க பகுதி ஒத்ததாக இருந்தாலும், மாற்றியமைக்கப்பட்ட பின்பகுதி எல்இடி பின்விளக்குகள் மற்றும் புதிய டிசைனில் அமைந்த பம்பர் ஆகிய முக்கிய மாற்றங்களாக உள்ளன.
க்யூ7 மற்றும் ஏ4 போல, நவீன எம்எல்பி பிளாட்பாமை க்யூ5 பயன்படுத்தி கொள்ளும். எனவே அதன் எடையில் மேலும் 100 கிலோ (220 எல்பிஎஸ்) வரை குறைத்து அதன் வேகத்தை அதிகரித்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய ஆடி ஏ4யை போன்றே, நான்கு அல்லது ஆறு சிலிண்டர் டீசல் அல்லது பெட்ரோல் என்ஜினை பெற்றிருக்கும்.
மேலும் க்யூ5ல் அதிகமாக மேட்ரீக்ஸ்-எல்இடியின் அம்சங்கள், வெர்ச்சூவல் காக்பிட், நவீன மல்டிமீடியா இன்டர்பேஸ், டேப்லெட் அடிப்படையிலான பின்புற பொழுதுபோக்கு சாதனம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஆண்டுகள் செல்ல செல்ல மாசு கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாகி வரும் நிலையில், நான்கு சக்கர ட்ரைவ் இ-ட்ரோன் ப்ளக்-இன் ஹைபிரிட் ஆகியவை கூட இந்த வரிசையில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி க்யூ5ல் லைட்களை பொறுத்த வரை, பிஎம்டபில்யூ எக்ஸ்3 மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஆகியவற்றோடு போட்டியிடலாம். இந்தியாவில் 2016 முடிவிலோ அல்லது 2017 துவக்கத்திலோ அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 out of 0 found this helpful