2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது

ஹோண்டா சிவிக் க்கு published on nov 09, 2015 02:50 pm by raunak

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

Honda CIVIC

தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2015 நியூயார்க் ஆட்டோ ஷோவில், இந்த 10வது தலைமுறை வாகனத்தின் ஒரு தொழில்நுட்ப பதிப்பை வெளியிட்டாலும், இந்த செப்டம்பரில் தான் தயாரிப்பில் உள்ள ஸ்பெக் சேடனை அமெரிக்காவில் மட்டுமே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் சீமா ஷோவில், மற்ற நிறுவனங்களை போல, இந்த ஜப்பான் கார் தயாரிப்பாளரும் தகுந்த அமைப்புடன் கூடிய 2016 சிவிக் சேடனை காட்சிக்கு வைத்துள்ளது.

இந்த தகுந்த அமைப்புடன் கூடிய வாகனத்தை சீமாவில் வெளியிட்டுள்ளது குறித்து கூறுகையில், இந்த வாகனத்தின் பக்கவாட்டு ஓரங்களுடன் கூட, முன்புற மற்றும் பின்புற பம்பர் விரிவாக்கங்கள் இணைய பெற்றுள்ளது. இந்த கார், ஒரு புதிய 17-இன்ச் டயல்-டோன் கொண்ட அலாய்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் சிறிய பூட்-லிட் ஸ்பாயிலர் அம்சத்தை பெற்று, உபரி பாகங்களுடன் 3வது பிரேக் லைட்டை கொண்டுள்ளது. இந்த மாதத்தின் கடைசியில், வட அமெரிக்க டீலர்ஷிப்களில் இந்த கார் வந்து சேர்ந்தவுடன், உபரி பாகங்களின் முழு பகுதிகளோடு கிடைக்கும்.

மேலும், வட அமெரிக்காவில் இந்த சேடனை வெளியிட்ட போது, இந்த வாகனத்தை ஒரு புதிய 1.5-லிட்டர் டர்போ VTEC மூலம் இயங்கும் என்று வாகன தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஹோண்டாவின் ஐரோப்பிய பிரிவு வெளியிட்டுள்ள சமீபகால அறிவிப்பில், இதில் 1.0-லிட்டர் டர்போ VTEC-யை பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த என்ஜின்கள், ஹோண்டாவின் புதிய டர்போ VTEC குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இவை இந்தாண்டு அறிமுகமான மூன்றாம் தலைமுறையை சேர்ந்த சிவிக் டைப் R-2.0-லிட்டர் டர்போ VTEC உடன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க :

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா சிவிக்

Read Full News

trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience